பழமுதிர்சோலை ஆண்டவன் முருகப்பெருமானின் மகிமைகள் | Palamuthisolai Podcast

Музыка

#devotional #podcast #murugan
#devotional #podcast #murugan
#devotional #podcast #murugan #murugantemple #thirupparangundram
#swamimalai #thiruthani #pazhamudhircholai
முருகனின் ஆறாம் படை-பழமுதிர்ச்சோலை சிறப்பும் வழிப்பாட்டு முறையும் | ஆன்மீக அதிசயம்.
பழமுதிர்சோலை முருகன் கோயில் (Pazhamudirchozhai Murugan Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், ஆறாவது படை வீடாகத் திகழ்கின்றது.[1] இது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், மதுரையிலிருந்து பதினைந்து மைல் தொலைவில் அமைந்துள்ளது. முருகன் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதான் என்று நம்பப்படுகிறது.
விசுணு கோயிலான அழகர் கோவில் இதற்கு அண்மையில் அமைந்துள்ளது. அருணகிரிநாதர் இத்திருத்தலம் மீது திருப்புகழ் பாடியுள்ளார். அழகர் கோவில் தீர்த்த மலையில் இக்கோவில் அமைந்துள்ளது.
சோலைமலை என்ற பெயரும் இதற்கு உண்டு. இங்குள்ள முருகன் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார். பழமுதிர்சோலை என்பதற்கு பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம்.கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
அறுபடைவீடுகள்
திருப்பரங்குன்றம் - சூரபத்மனைப் போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.
திருச்செந்தூர் - அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று, வெற்றி வாகையைச் சூடிய திருத்தலமிது.
பழநி - மாங்கனிக்காகத் தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.
சுவாமிமலை - தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி, தகப்பன்சுவாமியாகக் காட்சிதரும் திருத்தலமிது.
திருத்தணி - சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.
பழமுதிர்சோலை - ஔவைக்குப் பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சிதரும் திருத்தலமிது. வைகைப் பொன்மலை என்கிற செம்மறி கடாவை அடக்கிய தலம் அனுமனுக்கு அருள்புரிந்தது.

Пікірлер

    Келесі