Yedhukkadi Kudhambai I Kudhambai siddhar I குதம்பை சித்தர் | Siddhar padalgal I Shravan Kalai

Музыка

பாடல் எழுதி அருளியது - குதம்பைச் சித்தர்
பாடல் இசை, வடிவமைப்பு மற்றும் பாடியது - ஷ்ரவன் கலை
Song written by - Kudhambai siddhar
Music Composed, Arranged & Sung by - Shravan Kalai
Recorded, Mixed & Mastered @ N5musicstudios, Chennai.
🎧Kindly use headphones for a better experience
யேதுக்கடி குதம்பாய்,
பதினெண்-சித்தர்களில் ஒருவர் குதம்பைச்சித்தர். குதம்பை என்பது மகளிர் காதுகளில் அணியும் வளையம். குதம்பை அணிந்த பெண்ணைக் “குதம்பாய்” என விளித்து இவர் தம் கருத்துக்களைச் சொல்லியுள்ளதால் இவரைக் குதம்பைச்சித்தர் என்கிறோம்.
இவர் யாதவர் குலத்தில் பிறந்தவர். பெற்றோர்களால் சீராட்டி வளர்க்கப்பட்டவர். தமக்கு பெண் குழந்தை இல்லாததால் இவரது தாய் இவரை பெண்ணாக அலங்கரித்து மகிழ்வாராம். பெண் குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் குதம்பை என்ற காதணி இவருக்கு அணிவிக்கப்பட்டதால், இவர் குதம்பை என அழைக்கப்பட்டு இவரது இயற்பெயர் மறைந்தே போனது.
குதம்பைச்சித்தர் பெண்களை முன்னிலைப் படுத்தி மகடூஉ இலக்கணப் முறைப்படிபாடியுள்ளார். இவருடைய பாடல்கள் எண்ணிக்கை கடவுள் வாழ்த்து சேர்த்து 246 ஆகும். இவரது பாடல் உலக வாழ்வைப் போற்றியும் வெறுத்தும் பாடப்பட்டவை. இறுதியில் மயிலாடு துறையில் இறையொளி எய்தினார்.
பட்டயம், முத்திரை, உத்தியம்(இலக்கு), ஆசை, மோகம், ஏகாந்தத் துறவு, ஞானம், பல்லாக்கு-ஊர்தி, கோலம்(ஒப்பனை), கைத்தாளம்(மகிழ்ச்சி), - போன்றவை வீண் ஆடம்பரங்கள் என்று இவர் குறிப்பிடுகிறார்.
1. வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப்
பட்டயம் ஏதுக்கடி - குதம்பாய்
பட்டயம் ஏதுக்கடி ?
2. மெய்ப்பொருள் கண்டு விளங்கும்மெய்ஞ் ஞானிக்குக்
கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கற்பங்கள் ஏதுக்கடி ?
3. காணாமற் கண்டு கருத்தோடு இருப்போர்க்கு
வீணாசை ஏதுக்கடி - குதம்பாய்
வீணாசை ஏதுக்கடி ?
4. வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச்
சஞ்சலம் ஏதுக்கடி - குதம்பாய்
சஞ்சலம் ஏதுக்கடி ?
5. ஆதாரமான அடிமுடி கண்டோர்க்கு
வாதாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
வாதாட்டம் ஏதுக்கடி ?
6. நித்திரை கெட்டு நினைவோடு இருப்போர்க்கு
முத்திரை ஏதுக்கடி - குதம்பாய்
முத்திரை ஏதுக்கடி ?
7. தந்திரமான தலந்தனில் நிற்போர்க்கு
மந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
மந்திரம் ஏதுக்கடி ?
8. சத்தியமான தவத்தில் இருப்போர்க்கு
உத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
உத்தியம் ஏதுக்கடி ?
9. நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
வாட்டங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
வாட்டங்கள் ஏதுக்கடி ?
10. முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச்
சத்தங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
சத்தங்கள் ஏதுக்கடி ?
11. உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோர்க்கு
இச்சிப்பிங்கு ஏதுக்கடி - குதம்பாய்
இச்சிப்பிங்கு ஏதுக்கடி ?
12. வேகாமல் வெந்து வெளியெளி கண்டோர்க்கு
மோகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
மோகாந்தம் ஏதுக்கடி ?
13. சாகாமல் தாண்டித் தனிவழி போவோர்க்கு
ஏகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
ஏகாந்தம் ஏதுக்கடி ?
14. அந்தரந் தன்னில் அசைந்தாடு முத்தர்க்குத்
தந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
தந்திரம் ஏதுக்கடி ?
15. ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்பார்க்கு
ஞானந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
ஞானந்தான் ஏதுக்கடி ?
16. சித்தரக் கூடத்தைத் தினந்தினம் காண்போர்க்குப்
பத்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
பத்திரம் ஏதுக்கடி ?
17. பூரணங் கண்டோர்இப் பூமியிலே வரக்
காரணம் இல்லையடி குதம்பாய்
காரணம் இல்லையடி.
18. வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை
இட்டமாய் பார்ப்பாயடி குதம்பாய்
இட்டமாய் பார்ப்பாயடி.
19. உருவாகி அருவாகி ஒளியாகி வெளியாகித்
திருவாகி நின்றதுகாண் குதம்பாய்
திருவாகி நின்றதுகாண்.
20. ஆதியும் அந்தமும் ஆன ஒருவனே
சோதியாய் நின்றானடி குதம்பாய்
சோதியாய் நின்றானடி.
21. கோபம் பொறாமை கொடுஞ்சொல் வன்கோள் இவை
பாபத்துக்கு ஏதுவடி குதம்பாய்
பாபத்துக்கு ஏதுவடி.
22. வேகம் அடக்கி விளங்குமெய்ஞ் ஞானிக்கு
யோகந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
யோகந்தான் ஏதுக்கடி ?
23. மாத்தானை வென்று மலைமேல் இருப்போர்க்குப்
பூத்தானம் ஏதுக்கடி - குதம்பாய்
பூத்தானம் ஏதுக்கடி ?
24. செத்தாரைப் போலத் திரியுமெய்ஞ் ஞானிக்கு
கைத்தாளம் ஏதுக்கடி - குதம்பாய்
கைத்தாளம் ஏதுக்கடி ?
25. தாழாமல் உத்தமர் தம்மை இகழ்வது
கீழாம் நரகமடி குதம்பாய்
கீழாம் நரகமடி.
26. சான்றோர் எனச்சொல்லித் தத்துவம் தேர்ந்தோர்க்கு
மான்தோல் ஏதுக்கடி குதம்பாய்
மான்தோல் ஏதுக்கடி?
27. நாடி மனத்தினை நாதன்பால் வைத்தோர்க்குத்
தாடிசடை ஏனோ குதம்பாய்
தாடிசடை ஏனோ?
28. மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி ?
29. தேடிய செம்பொன்னும் செத்தபோது உன்னோடு
நாடி வருவதுண்டோ? குதம்பாய்
நாடி வருவதுண்டோ?
30. தாவரமில்லை தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய்
தேவாரம் ஏதுக்கடி ?
31. தன்னை அறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப்
பின்னாசை ஏதுக்கடி - குதம்பாய்
பின்னாசை ஏதுக்கடி ?
32. வேதனை நீங்கி விடாது தொடர்ந்தோரே
நாதனைக் காணுவர் காண் - குதம்பாய்
நாதனைக் காணுவர் காண்.
Looking forward for all your love and support😀😀
Check out my social media handles:
KZread: / shravankalai
Instagram: / shravan_kalai
Facebook: / shravan.kalai
Twitter: / shravankalai

Пікірлер: 121

  • @inivevetha3205
    @inivevetha32057 ай бұрын

    அருமை..உள்ளுணர்வோடு கூடிய சித்த பெருமக்களின் சூட்சும உடலில் நிறைவேற்றிய அருமையான பாடல். புண்ணியம் உங்கள் சந்ததிக்கு சேரும்..குதம்பை சித்தர் திருவடிகள் போற்றி!! பெற்றோரால் கிறித்தவனாய் வளர்க்கப்பட்ட நான்...சித்தர்களே என் அனைத்துமாய் அவர்களின் மெய்யறிவு பாதையில் பயணம் செய்கிறேன். தமிழ் மொழியில் மறைபொருள் ரகசியம் மெய்யறிவு பெற எத்தனை பிறவிகளும் காணாது...

  • @Shravankalai

    @Shravankalai

    7 ай бұрын

    உண்மை😊

  • @JivinRaja

    @JivinRaja

    6 ай бұрын

    😊🙏

  • @kajenkajen1965

    @kajenkajen1965

    2 ай бұрын

    🙏🏻 சிவ சிவ 🙏🏻

  • @dhamotharanmahi5265

    @dhamotharanmahi5265

    2 күн бұрын

    அருமை அருமை 😍😍😍

  • @user-vs3oc3mb6m
    @user-vs3oc3mb6m10 күн бұрын

    I get goosebumps when listening.

  • @Shravankalai

    @Shravankalai

    10 күн бұрын

    Thank you😊😊

  • @vanithar367
    @vanithar3673 күн бұрын

    மிக்க நன்றிகள் நண்பரே,. இனிய குரல் வளம்.வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்.

  • @Shravankalai

    @Shravankalai

    3 күн бұрын

    நன்றிகள் ☺☺🙏

  • @jothiarumugam8287
    @jothiarumugam8287Күн бұрын

    ❤❤❤❤❤

  • @amalantrendscorner1606
    @amalantrendscorner16067 күн бұрын

    அற்புதம் அதி அற்புதம் நன்றி.. வேண்டுகோள் ஒன்று இது போல் திருவருட்பா பாடல்களையும் தாங்கள் எங்களுக்கு அமைத்து அற்புதம் செய்ய வேண்டும்

  • @Shravankalai

    @Shravankalai

    3 күн бұрын

    நன்றி 😊😊 youtube.com/@vallalarthiruneri?si=i75T7firvX_7j_Im இது தான் என்னுடைய திருவருட்பா தளம். கேட்டு மகிழுங்கள் 😊😊🙏🏻

  • @chank4056
    @chank40565 сағат бұрын

    மனதை அமைதிப்படுத்தும் தென்றல் போல் தீண்டும் இசை... தாயின் பரிவோடு பாடகரின் குரல்... இரண்டும் சித்தரின் வரிகளுக்கு அணி செய்கின்றன... வாழ்த்துக்கள்!! நன்றி!!

  • @Shravankalai

    @Shravankalai

    2 сағат бұрын

    @@chank4056 நன்றிகள் ஐயா 😊🙏🏻😊

  • @KavasamYogaForAll
    @KavasamYogaForAll8 сағат бұрын

    முழுமையான மனநிம்மதி தருகிறது ஐயா... நன்றி❤

  • @Shravankalai

    @Shravankalai

    2 сағат бұрын

    @@KavasamYogaForAll நன்றி ஐயா 😊🙏🏻

  • @SakthySakthyaa
    @SakthySakthyaa3 күн бұрын

    🎉🎉🎉🎉🎉

  • @njsarathi4307
    @njsarathi430712 күн бұрын

    பாடல், இசை, குரல் எல்லாம் அருமை, வாழ்த்துக்கள்

  • @Shravankalai

    @Shravankalai

    11 күн бұрын

    நன்றிகள் 😊🙏🏻

  • @rajeshwariraman8790
    @rajeshwariraman879018 сағат бұрын

    I so like this song, super to all 😊

  • @Shravankalai

    @Shravankalai

    11 сағат бұрын

    @@rajeshwariraman8790 Thank you 😊🙏🏻

  • @Jasr6
    @Jasr62 күн бұрын

    🙏🏽

  • @MadanMohan-fl8lo
    @MadanMohan-fl8lo3 күн бұрын

    Aahaa!

  • @seenuvasanseenuvasan9691
    @seenuvasanseenuvasan9691 Жыл бұрын

    மிகவும் அருமை ஐயா ஆன்மீகப் பாதையில் செல்வோருக்கு குதம்பை சித்தரின் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது இன்னும் தெளிவு கிடைக்கும் நன்றி ஐயா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன்.

  • @Shravankalai

    @Shravankalai

    Жыл бұрын

    நன்றி😊🙏🏻

  • @sakthiparameswaran1403
    @sakthiparameswaran14032 ай бұрын

    தினமும் இந்த பாடலை கேட்கும் போது மனம் அமைதிக்கு செல்கிறது, மிக்க நன்றி அய்யா.

  • @Shravankalai

    @Shravankalai

    2 ай бұрын

    நன்றிகள் 😊

  • @thiyagarajanvetrimani8899
    @thiyagarajanvetrimani889923 күн бұрын

    சொல்ல வார்த்தைகள் இல்லை, அருமை, தங்களின் இந்த பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐

  • @Shravankalai

    @Shravankalai

    22 күн бұрын

    நன்றிகள்😊🙏

  • @sakthikayalvizhi2110
    @sakthikayalvizhi21108 күн бұрын

    Song chosen is Ultimate and delivered it in perfect composition. The secret and real essence of birth and life is revealed in this one. You are blessed and its a boon to get to know and sing this song. Arutperunjothi.

  • @Shravankalai

    @Shravankalai

    7 күн бұрын

    Thank you so much ☺🙏

  • @Neetu.17
    @Neetu.173 күн бұрын

    Sir am in pregnant ... manasu romba depression anathu adikadi... intha song kekum pothu i feel relax❤❤❤❤❤❤

  • @Shravankalai

    @Shravankalai

    3 күн бұрын

    I’m very glad mam. It’s all gods will. Thank you so much and may god bless you with lots of happiness through out this beautiful journey mam😊

  • @kamakshiekambaranathar-mw4mv
    @kamakshiekambaranathar-mw4mv Жыл бұрын

    என் மனம் உருகி போயிட்டு மகிழ்ச்சி

  • @Shravankalai

    @Shravankalai

    Жыл бұрын

    நன்றி😊

  • @NagaRaj-tg7tg
    @NagaRaj-tg7tg8 ай бұрын

    கண்ணீர் வருகிறது மெய்மறந்து...

  • @ROCKYREofficial
    @ROCKYREofficial4 күн бұрын

    Nandri anna un pugal vaan sirakka prapanjathidam vedik kolkiren anna

  • @Shravankalai

    @Shravankalai

    4 күн бұрын

    நன்றி மா 😊

  • @padmanabankangeyan1726
    @padmanabankangeyan1726Күн бұрын

    மிக அருமை நண்பரே

  • @Shravankalai

    @Shravankalai

    Күн бұрын

    @@padmanabankangeyan1726 நன்றி 😊🙏🏻

  • @Ramakrishhna
    @Ramakrishhna16 күн бұрын

    அருமையான குரல்!! உருகி பாடியுள்ளீர்கள்❤!! நன்றிகள் பல இந்த பாடலை பாடியதற்கு!!! இதைபோல் நிரய சித்தர் பாடல்கள் தாங்கள் பாடவேண்டும் என்று வேண்டுகிறேன்🙏🏻🙏🏻!!

  • @Shravankalai

    @Shravankalai

    16 күн бұрын

    நன்றிகள்😊🙏🏻. கண்டிப்பாக மேலும் சித்தர் பாடல்களை பதிவிடுகிறேன் 😊🙏🏻

  • @raghuram869
    @raghuram8693 күн бұрын

    Master Piece 🎉

  • @Shravankalai

    @Shravankalai

    2 күн бұрын

    😊🙏🏻

  • @cnsabar
    @cnsabar11 ай бұрын

    While hearing this song, mind goes completely calm. Could feel surroundings are also very calm. Credit goes to singer and music director....

  • @Shravankalai

    @Shravankalai

    11 ай бұрын

    Thank you 😊🙏🏻

  • @sathishvfxentertainment3481
    @sathishvfxentertainment3481 Жыл бұрын

  • @deva9223
    @deva9223 Жыл бұрын

    ❤❤

  • @user-px7ce1rc8p
    @user-px7ce1rc8p8 ай бұрын

    ஓம் நமசிவாய

  • @gengadevi8916
    @gengadevi8916 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @rmarimuthu8841
    @rmarimuthu8841 Жыл бұрын

    🙏🏽🙏🏽🙏🏽🔥🙏🏽🙏🏽🙏🏽🧠.........🫀. 🎼🎶🎻. 🌏🗾🌑☀️✨️ நன்றிகள். குரல் வளத்துக்கு🙏🏽

  • @Shravankalai

    @Shravankalai

    Жыл бұрын

    நன்றி😊😊🙏🏻

  • @sthiruchangu5043
    @sthiruchangu50432 ай бұрын

    வேதங்கள் உபநிடதங்களால் மறைக்கப்பட்ட பல்வேறு சித்தர்களின் இது போன்ற பொக்கிசங்களை மிக மிக இனிமையாக எளிதில் மனதில் பதியும்படி படைத்தவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.. நிறைய வரட்டும் என்று வாழ்த்துகிறேன்.. 💐💐💐🙏🙏

  • @Shravankalai

    @Shravankalai

    2 ай бұрын

    நன்றிகள் ஐயா 😊🙏

  • @JivinRaja
    @JivinRaja6 ай бұрын

    அநேக நன்றிகள்.❤

  • @Shravankalai

    @Shravankalai

    6 ай бұрын

    நன்றிகள் 😊🙏

  • @geethabalaji9298
    @geethabalaji92984 ай бұрын

    ❤❤🙏🏻🙏🏻💐💐

  • @Shravankalai

    @Shravankalai

    4 ай бұрын

    😊🙏

  • @pavithranandha9793
    @pavithranandha9793 Жыл бұрын

    Marvellous songs ❤

  • @Shravankalai

    @Shravankalai

    Жыл бұрын

    Thank you😊

  • @thewaxbillbluestudio9463
    @thewaxbillbluestudio9463 Жыл бұрын

    Thanks for singing like this songs ❤️❤️

  • @Shravankalai

    @Shravankalai

    Жыл бұрын

    My pleasure ☺

  • @user-dp5cy1xn5t
    @user-dp5cy1xn5t Жыл бұрын

    Ayyyyoooooooo 😀😀😀.. wonderful ✨✨✨✨🤍🤍🤍....nice quality 😀😀🔥🔥🔥🔥🔥🔥✨✨✨✨ உள் அமைதி ✨✨✨🤍🤍🤍

  • @Shravankalai

    @Shravankalai

    Жыл бұрын

    ☺🙏

  • @Tamil_Infobuddy
    @Tamil_Infobuddy Жыл бұрын

    Melting voice💙👍🏻 Innum Siddhar songs neraya paadunga👌🏻

  • @Shravankalai

    @Shravankalai

    Жыл бұрын

    Thank you ☺🙏. Kandippa

  • @VASANTHKUMARULAGANATHAN
    @VASANTHKUMARULAGANATHAN8 ай бұрын

    Anna amazing anna wonderfull am melted 🎉🎉❤❤❤❤🎉🎉❤❤❤❤

  • @Shravankalai

    @Shravankalai

    8 ай бұрын

    Thank you 😊

  • @AATHMAJYOTHI
    @AATHMAJYOTHIАй бұрын

    வணக்கம் 🙏ஐயா இந்த பாடலில் இசை மற்றும் குறல் வளம் பின்னணி பாடகர் அனைத்தும் அருமையான பதிவு இந்த பாடல் முழுமையாக பதிவிடுங்கள் ஐயா நன்றி 🙏

  • @Shravankalai

    @Shravankalai

    Ай бұрын

    நன்றிகள் ஐயா. கண்டிப்பாக விரைவில் 😊🙏🏻

  • @raguiyer5247
    @raguiyer52472 ай бұрын

    Lovely ❤❤

  • @Shravankalai

    @Shravankalai

    2 ай бұрын

    Thank you😊

  • @j.p5425
    @j.p54259 ай бұрын

    Nice composition!

  • @Shravankalai

    @Shravankalai

    9 ай бұрын

    Thank you

  • @vinnakanjeeaspirant9707
    @vinnakanjeeaspirant9707 Жыл бұрын

    God will bless you..... Very very best

  • @Shravankalai

    @Shravankalai

    Жыл бұрын

    Thank you☺

  • @srivel8900
    @srivel8900 Жыл бұрын

    Vazhga Valamudan

  • @Shravankalai

    @Shravankalai

    Жыл бұрын

    🙏☺

  • @user-sy9yz1wx2l
    @user-sy9yz1wx2l9 ай бұрын

    Thank you . beyond the ultimate. Waiting for more siddar songs

  • @Shravankalai

    @Shravankalai

    9 ай бұрын

    Surely. Thank you🙏

  • @srinivasankarthikeyan2066
    @srinivasankarthikeyan2066 Жыл бұрын

    Excellent Saravana...loved it to the core ❤️.

  • @Shravankalai

    @Shravankalai

    Жыл бұрын

    Thank you

  • @nyanadevi7128
    @nyanadevi7128 Жыл бұрын

    Excellent work not even a day I be without listening

  • @Shravankalai

    @Shravankalai

    Жыл бұрын

    Thank you 😊🙏🏻

  • @vadivarasus9901
    @vadivarasus9901 Жыл бұрын

    அருமை. வாழ்த்துகள் பாஸ்

  • @Shravankalai

    @Shravankalai

    Жыл бұрын

    நன்றி பாஸ்

  • @kaycay014
    @kaycay01428 күн бұрын

    Awesome super I don't have words to say.

  • @Shravankalai

    @Shravankalai

    26 күн бұрын

    Thank you😊🙏

  • @EAISANkai
    @EAISANkai Жыл бұрын

    Super na❤️

  • @Shravankalai

    @Shravankalai

    Жыл бұрын

    Thank you 😊

  • @babubabu1975
    @babubabu19757 ай бұрын

    Good❤

  • @Shravankalai

    @Shravankalai

    7 ай бұрын

    Thank you

  • @ramamurugavel2168
    @ramamurugavel2168 Жыл бұрын

    அருமை சரவணன் 😌👏👏👏

  • @Shravankalai

    @Shravankalai

    Жыл бұрын

    Thank you☺

  • @tamizhanaturalfoods
    @tamizhanaturalfoods5 ай бұрын

    அருமை

  • @Shravankalai

    @Shravankalai

    5 ай бұрын

    நன்றி 🙏😊

  • @gokulram6027
    @gokulram6027 Жыл бұрын

    அற்புதமான குரல்..... அருமை சகோ..

  • @Shravankalai

    @Shravankalai

    Жыл бұрын

    Nandri 😊🙏

  • @eskay1891
    @eskay18918 ай бұрын

    This is beautiful, do you've any plans to complete album on kudhambai chiththar songs

  • @Shravankalai

    @Shravankalai

    8 ай бұрын

    Thank you, yes I do have plans to complete. Once it is done it’ll be released again in all audio platforms.

  • @91309144078
    @91309144078Ай бұрын

    🙏🙏🙏

  • @jothipremkumar9056
    @jothipremkumar90563 ай бұрын

    Om sivayanama🙏🙏 please upload full song this voice..

  • @Shravankalai

    @Shravankalai

    3 ай бұрын

    Sure 😊👍

  • @saravananmanogaran3529
    @saravananmanogaran3529 Жыл бұрын

    Thanks, Bro! Excellent, Subscribed, Please Do more sidhhar songs, சித்தத் தலம்போலத் தெய்வம் இருக்கின்ற சுத்தத் தலங்களுண்டோ? குதம்பாய் சுத்தத் தலங்களுண்டோ?

  • @Shravankalai

    @Shravankalai

    Жыл бұрын

    Thank you ☺. Sure 😊🙏

  • @ganesan.mganesan2068
    @ganesan.mganesan206811 ай бұрын

    சுட்டி இருக்குது அண்ணா

  • @Shravankalai

    @Shravankalai

    10 ай бұрын

    நன்றி😊

  • @elangovanapj
    @elangovanapj9 ай бұрын

    Beautiful songs Saravanan but the video two one fot chalta and samprani in plate may change it pl

  • @Shravankalai

    @Shravankalai

    9 ай бұрын

    Thank you. Sure I’ll try to work on it.

  • @girishparameswaran
    @girishparameswaran6 ай бұрын

    is it possible to provide the english translation of the song ? Nicely sung

  • @Shravankalai

    @Shravankalai

    6 ай бұрын

    Thank you and will try to get 😊🙏

  • @thaailinga
    @thaailinga Жыл бұрын

    அருமை முழு பாடலும் கிடைக்குமா😊

  • @Shravankalai

    @Shravankalai

    Жыл бұрын

    Thank you. April 14 la irundhu spotify, iTunes ellathleyum kekalam. 😊🙏

  • @AATHMAJYOTHI

    @AATHMAJYOTHI

    Ай бұрын

    நன்றி ஐயா 🙏

  • @saimurugavel7932
    @saimurugavel7932 Жыл бұрын

    Excellent

  • @Shravankalai

    @Shravankalai

    Жыл бұрын

    Thank you ☺

  • @raviprakathish1654
    @raviprakathish1654 Жыл бұрын

    வர்ணிக்க வார்தைஇல்லை

  • @Shravankalai

    @Shravankalai

    Жыл бұрын

    நன்றி😊

  • @elangovanapj
    @elangovanapj9 ай бұрын

    U may try to sing in azhugani sidhar son

  • @Shravankalai

    @Shravankalai

    9 ай бұрын

    Yes planning to make all main siddhar songs. Including azhugani siddhar.

  • @EAISANkai
    @EAISANkai Жыл бұрын

    ❤️

Келесі