Kannadhasan - Ponmazhai - Kanakadhara Stotram |கவிஞர் கண்ணதாசனின் பொன்மழை - VERSION 2

Ойын-сауық

#Kannadhasan #Ponmazhai #Kanakadhara_Stotram
கவிஞர் கண்ணதாசனின் பொன்மழை
கவியரசர் முன்னுரை:
ஸ்ரீ ஆதிசங்கரர் பால வயதில் யாசகம் வாங்க ஒரு ஏழைப் பிராமணர் வீட்டுக்குப்போனபோது, வறுமையில் வாடிய அந்தக் குடும்பம் கடைசியாய் மிச்சம் இருந்த ஊறுகாய் [ நெல்லிக்காய்] ஒன்றை அவரிடம் கொடுத்தது.
நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் வறுமையில் வாடினாலும் , மற்றவர்களுக்கு இல்லையென்று சொல்ல மாட்டார்கள் என்றபடி, இருந்த நெல்லிக்காயையும் எடுத்துக்கொடுத்த அந்த குடும்பத்துக்காக , திருமகளை நோக்கிப் பாடினார், ஆதிசங்கரர்.
வானத்திலிருந்து உடனே தங்க நெல்லிக்கனிகள், அந்த வீட்டில் உதிர்ந்தன என்பது வரலாறு.
இன்றும் 'காலடி'யில் அந்த பிராமணக் குடும்பத்தின் வாரிசுகளும், அதே வீடும் இன்றும் இருக்கின்றன.
இன்று அந்த வீட்டின் பெயர் ' சொர்ணத்து இல்லம்'. இன்றும் அவர்கள் செல்வச் செழிப்போடு விளங்குகிறார்கள் .
ஆகவே இதை தமிழாக்குவதில் எனக்கு ஆசை அதிகம்.
கவிதையை விருத்தத்தில் எழுதியிருக்கிறேன். அறுசீர் விருத்தத்தை இருமடங்காக்கி இருக்கிறேன் .
இந்த ஸ்தோத்திரங்களை தொடர்ந்து பாடினால் எந்த வீடும் செல்வச்செழிப்போடு விளங்கும்.
அன்பன்
கண்ணதாசன்
09.12.1977.
What's app - whatsapp.com/channel/0029Va5U...
🌐 www.kannadasanpathippagam.com/
In Association with Divo
FB : / divomovies
Twitter : / divomovies
Insta : / divomovies
Telegram : t.me/divodigital

Пікірлер: 634

  • @astrosssm5267
    @astrosssm52675 ай бұрын

    இந்த பாடலை எழுதிய பிறகு கண்ணதாசனுக்கு இருந்த கடன் 5 லட்சம் போகா மீதி 2லடசம் கிடைத்தது.இந்த பாடலை தமிழில் எழுதியதற்கு அவ்வளவு சக்தி வாய்ந்த பாடல் ஓம் ஶ்ரீ லட்சுமியே போற்றி போற்றி போற்றி

  • @balujayanthi2736
    @balujayanthi2736 Жыл бұрын

    நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த பொன்மழை பாடலை பாடி வருகின்றேன். நிறைய கஷ்டங்கள் வந்து எங்களை துன்பத்தில் ஆழ்த்தியது. எனினும் சோர்ந்து போகாமல் இந்த பாடலை முடிந்த அளவு பாடி வந்தேன். எங்கள் வாழ்விலும் அந்த நிலை மாறி பல ஆச்சரியம் நடந்தது. சமஸ்கிருத பாடல் அனைவருக்கும் புரிவது கொஞ்சம் கஷ்டம். ஆனால் எளிதில் புரிந்து கொள்ளும் படி பாடல் வடிவமைத்து, இனிமையான குரலில் பாடியமைக்கு என் சிறம் தாழ்ந்த வணக்கங்கள்.. 🙇‍♂🙇‍♀🙇‍♀🙇‍♀அனைவரும் இந்த பாடலை பாடி மகாலெஷ்மி அருள் பெருக... நன்றி 🙏

  • @sudhavalli5708

    @sudhavalli5708

    11 ай бұрын

    சிரம்.... அருள் பெறுக

  • @chandrasamraj9050

    @chandrasamraj9050

    10 ай бұрын

    Great

  • @surya-tr5bp

    @surya-tr5bp

    8 ай бұрын

    அழகு

  • @aarthiaar7447

    @aarthiaar7447

    7 ай бұрын

    Padal varikal kidaikuma(lyrics)

  • @tamilgameing246

    @tamilgameing246

    6 ай бұрын

    Google la search pannunga

  • @jeyanthiudhayan7652
    @jeyanthiudhayan7652 Жыл бұрын

    நற்குடி பிறந்த பெண்கள் நாயகன் தனைப்பார்த்தாலும் நாணத்தால் முகம் புதைத்து நாலில் ஓர் பாகம் பார்ப்பார் பற்பல நினைத்த போதும் பாதிக்கண் திறந்து மூடி பரம்பரை பெருமை காப்பார் பாற்கடல் அமுதே நீயும் அற்புத விழிகளாலே அச்சுத முகுந்தன் மேனி அப்படிக் காண்பதுண்டு ஆனந்தம் கொள்வதுண்டு இப்போது அந்த கண்ணை என்னிடம் திருப்பு தாயே இருமையும் செழித்து வாழ இகத்தினில் அருள்வாய் நீயே

  • @tagjai6931

    @tagjai6931

    2 ай бұрын

    I want more line please

  • @srk8360
    @srk83607 ай бұрын

    நீண்ட நாட்களாக தேடிக்கொண்டுஇருந்தபாடல்.இன்றுகிடைத்தது..🙏💐💐💐💐💐 கவியரசருக்கு ஆயிரம் ஆயிரம் நன்றி மலர்கள் 🙏💐💐💐💐💐💐💐💐💐💞

  • @sivakamik6519

    @sivakamik6519

    5 ай бұрын

    Hi

  • @nangaisoundaraj3788
    @nangaisoundaraj3788 Жыл бұрын

    ஒரு நாள் கேட்ட நான் அடிமையாகி விட்டேன்.கண்ணீர் மல்க கேட்கிறேன்.உயர்ந்த மனம் வாழ்க!❤

  • @jeyanthiudhayan7652
    @jeyanthiudhayan7652 Жыл бұрын

    நீலமா மலரைப்பார்த்து நிலையில்லாது அலையும் வண்டு நிற்பதும் பறப்பதும் போய் நின் விழி மயக்கம் கொண்டு கோலமார் நெடுமால் வண்ண குளிர் முகம் தன்னைக் கண்டு கொஞ்சிடும் பிறகு நானும் கோதையார் குணத்தில் நின்று ஏலமார் குழலி அந்த இரு விழி சிறிது நேரம் என் வசம் திரும்புமாயின் ஏங்கிய காலம் சென்று ஆலமா மரங்கள் போல அழிவில்லா செல்வம் கொண்டு அடியவன் வாழ்வு காண்பேன் அருள் செய்வாய் கமலத்தாயே

  • @tagjai6931

    @tagjai6931

    2 ай бұрын

    I want more line please

  • @kalaivanisivakumar3257

    @kalaivanisivakumar3257

    2 ай бұрын

  • @svs-thecryptographer5704

    @svs-thecryptographer5704

    2 ай бұрын

    Buy book

  • @karuppaiyam2445
    @karuppaiyam24452 жыл бұрын

    கவிஞர் பெருமானுக்கு கோடானும் கோடி நன்றிகள். கவிஞர் அருளிய இதுபோன்ற அரிய படைப்புகளை தேடித் தேடித் வெளியிடும் கண்ணதாசன் பதிப்பகம் திரு காந்தி கண்ணதாசன் அவர்களுக்கு எனது நன்றிகள் பல.

  • @ranineethi760

    @ranineethi760

    Жыл бұрын

    நன்றி ஐயா.

  • @jayasrig2271

    @jayasrig2271

    Жыл бұрын

    கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு வடமொழில் அவர்களுக்கு இருந்த புலமையை இந்த நூல் வெளிப்படுத்துகிறது.

  • @mathumathu1694

    @mathumathu1694

    10 ай бұрын

    😂😅

  • @nadarajahnagalingam2114

    @nadarajahnagalingam2114

    7 ай бұрын

    Pro.Ilampirai Manimaran used to quote these songs of Kannadasan during her speeches and she liked very much.

  • @unnamalai3565
    @unnamalai3565 Жыл бұрын

    இப்பாடலை எழுதி இசைத்து பாடி வெளியிட்ட அனைவர்க்கும் மனமார்ந்த கோடான கோடி நன்றி💐💐💐...." தாமரைப்பூவின் மீது தாமரைப்பூவைச் சூடி " , **** தூய்மைக்கோர் தூய்மை செய்து *** !!!!👌👌👌என்னே அருமை கவிஞரின் தெய்வீகத் தமிழ் சொற்களால் அன்னையின் மனதைக்கவரும் புலமை,👌👌👌💐

  • @karthikeyaravindran4365
    @karthikeyaravindran43653 жыл бұрын

    அற்புதம் பாடியவர் யாரோ வரிகளுக்கு ஏற்ப தெளிவான குரல். தெரிந்து கொள்ள ஆசை.

  • @madalaiperiyanan1168

    @madalaiperiyanan1168

    Жыл бұрын

    பாடியவர்கள் பம்பாய் சகோதரிகள் அவர்களில் ஒருவரான லலிதா என்பவர் சென்ற மாதம் இறைவனடி சேர்ந்தார்.

  • @madalaiperiyanan1168

    @madalaiperiyanan1168

    Жыл бұрын

    பம்பாய் சகோதரிகள் என்பது ஸி .சரோஜா மற்றும் ஸி .லலிதா.

  • @selvadhanish153
    @selvadhanish1532 ай бұрын

    19 மண்டலத் திசைகள் தோறும் மதகிரி குடங்கள் ஏந்தி மங்கைக்கு நன்னீ ராட்ட கங்கைநீர் குடத்தில் மாந்தி, தண்டலைக் கூந்தல் ஊற சர்வமங் களநீ ராட்டி, தாமரைப் பூவின் மேலோர் தாமரைப் பூவைச் சூட்டி, மண்டிய தூய்மைத் தாய்க்கு மற்றுமோர் தூய்மை நல்கி மறுவிலாப் பளிங்கின் மேனி மாசறத் துலங்கச் செய்யும் அண்டமா நெடியோன் தேவீ, அலைகடல் அரசன் பெண்ணே! அரிதுயில் கொள்ளும் காலை அடியவன் வணங்கு கின்றேன்! 20 பூவினில் உறையும் பூவே! பொன்னிடை உறையும் பொன்னே! பூஜைக்கே உரியோன் பூஜை புரிகின்ற காதற் செல்வி! ஏவுமோர் உலகத் துள்ளே இன்மையான் ஒருவ னேதான் இவனுனை இரந்த நிற்க இதுவொரு நியாயம் போதும்! தாவுநீர்க் கடலைப் போல தண்ணருள் அலைகள் பொங்கும் சந்திரப் பிறைப்பூங் கண்ணி சற்றுநீ திரும்பிப் பார்த்தால் மேவிய வறுமை தீர்ப்பேன்; மெல்லிடை பூங்கோ தாய்,நின் மின் னிடும் விழிகள் காண விழைந்தனேன் போற்றி! போற்றி! 21 முப்புவி ஈன்ற தாயே, மோகனச் சிரிப்பின் செல்வி! மூவிரண் டொன்றாய் வந்த பிரமத்தின் மொத்த மாக அற்புதம் காட்டி நிற்கும் அழகிய சிற்பச் சோதி ஆனந்தத் தெய்வ மாதா அரும்பெறல் அன்னை பேரில் இப்பொழு துரைத்த பாடல் எவரெங்கு பாடி னாலும் இப்புவி உளநாள் மட்டும் இன்பமும் அறிவும் சேரும்; நற்பெரும் பேறும் கிட்டும்! நன்னிலை வளரும்; என்றும் நாட்டுக்கே ஒருவராக நாளவர் உயர்வார் உண்மை! செல்வகுமார்/நெய்வேலி/சிங்கப்பூர் ❤

  • @senthilkumar-mc3is

    @senthilkumar-mc3is

    2 ай бұрын

    ௭ல்லா வரிகள்ழும் தமிழ் லில் வழங்கவும்

  • @treatment9924
    @treatment99243 жыл бұрын

    விளம்பரம் இல்லாமல் பக்தி பாடல்கள் கேட்க வேண்டும் .விளம்பர பகுதி வாசகர்களின் கவனத்திற்கு இடையூராக உள்ளது ,நன்றி

  • @sathiyamoorthikasthuri3589

    @sathiyamoorthikasthuri3589

    3 жыл бұрын

    Yes

  • @amrtheswarancomalmahadevan6665

    @amrtheswarancomalmahadevan6665

    3 жыл бұрын

    Ads are the additions of You Tube.

  • @padmajayanagarajan2677

    @padmajayanagarajan2677

    2 жыл бұрын

    Download செய்து படியுங்கள் விளம்பரம் வராது.

  • @buvaneswaribuvaneswari5907
    @buvaneswaribuvaneswari5907 Жыл бұрын

    இந்தப் பாடலை கேட்கும் பொழுது மனதிற்கு அமைதியும் தெளிவும் கிடைக்கிறது

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman86862 жыл бұрын

    மகாகவி பாரதியார் அவர்களுக்கு பின் கவிஞர் கண்ணதாசன் மட்டும் தான்.

  • @malathit7444
    @malathit7444Ай бұрын

    எத்தனை பேர்க்குக் கிட்டும் இறையருள் ஆன்ம சாந்தி? இகமெனும் கடலில் வீழ்ந்து எவர்பிழைத் தார்கள் நீந்தி? தத்துவப் படியே யாவும் தலைமுறை வழியே கிட்டும்! தவமெனும் முயற்சி யாலே பவவினை தணிந்து போகும்! அத்தனை முயற்சி என்ன அண்ணல்மா தேவி கண்ணில் அருள்மழை வந்தாற் போதும் அகம்புறம் முக்தி யாகும்! இத்தனை சொன்ன பின்னும் இன்னுமா தயக்கம் தாயே! இல்லத்தைச் செல்வ மாக்கி இன்னருள் புரிவாய் நீயே! 9 நீருண்ட மேகக் கண்கள் நிழலுண்ட கரிய கூந்தல்; நேர்கொண்ட மாந்தர் வீட்டில் நிலைகொண்ட செல்வப் பந்தல்! சீர்கொண்ட அமுதச் செல்வி சில்லென்ற காற்றுப் பாய்ந்தால் சேர்கின்ற மேகத் தண்ணீர் சிதறுண்டு பாய்வ தைப்போல் வேர்கொண்ட பாவ மேனும் வினைகொண்ட பாவ மேனும் வேய்கொண்ட தோளி னாய்உன் விழிகண்டால் தீர்ந்து போகும்! தேர்கோண்டேன் புரவி இல்லை; செல்வமாம் புரவி யாலே திருவருள் செய்வாய் நீயே தேப்பெரும் கமலத் தாயே! 10 ஆக்கலும் அழித்தல் காத்தல் அருள்நிறை இறைவன் சக்தி! அன்னவன் தோளில் நீயே அனைத்துமாய் விளங்கும் சக்தி! ஆக்கலில் வாணி யாவாய்; அளித்தலில் திருவாய் நிற்பாய்; அழிக்கின்ற வேளை வந்தால் அந்தமில் துர்க்கை யாவாய்! தீக்கொண்ட கரத்து நாதன் திருப்பரா சக்தி யாக திரிபுரம் ஏழு லோகம் திருவருள் புரிந்து நிற்பாய்! வாக்குயர் கமலச் செல்வி வாடைநீ, தென்றல் நீயே! வளமென இரப்போர்க் கெல்லாம் வந்தருள் புரிகின் றாயே!

  • @ranieswaran2754
    @ranieswaran2754 Жыл бұрын

    இந்த இனிமையான குரல்லுக்கு உரிமையானவர் பெயர் கூறுங்கள். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @vsupramaniyanm.spakthisons9978

    @vsupramaniyanm.spakthisons9978

    10 ай бұрын

    😂

  • @user-vb9qk8od8z
    @user-vb9qk8od8z3 ай бұрын

    தினமும் காலை மாலை என இருவேளையும் கேட்டால் நன் மை நடக்கும்

  • @user-rc3es1ez9q
    @user-rc3es1ez9q4 ай бұрын

    புவியுள்ள காலம்வரை கவியரசே உன் கவிகள் எங்கள் கவலை தீர கல்வி செல்வம் நற் கலைகள் வளர நல் வழிகாட்டிடும்! எத்தனையோ எவ்வளவோ எங்களுக்கு எழுதிவைத்தாய்! முத்தான நற் சொத்துடனே சத்தாக சகத்தில் வாழ பொன்மழை பொழியும் பொன்மகளின் தலைமகனே நீ தந்த நற்கவிகள் பாடியுன் பெயர் நினைத்து நிம்மதி காண்போம் நெஞ்சில்! தமிழுள்ள மட்டும்

  • @VijayKumar-nh7qp
    @VijayKumar-nh7qp2 жыл бұрын

    மகாலட்சுமி தாயே உங்களை வரவேற்கிறோம் தாயே வாருங்கள் எங்கள் குடும்பமும் நண்பர்களும் உறவினர்களும் நற்பவுடன் வாழ வாழ்த்துங்கள் என் கமளத்தாயே நற்பவி..

  • @sreekam5095
    @sreekam50953 жыл бұрын

    பாடல் வரிகள் description box இல் போட்டால் நன்றாக இருக்கும்

  • @kannadasanpathippagam

    @kannadasanpathippagam

    3 жыл бұрын

    Working on it.. Will update it soon

  • @svs-thecryptographer5704

    @svs-thecryptographer5704

    3 ай бұрын

    விஜயா பதிப்பகத்தில் பொன்மழை புத்தகம் உள்ளது பெற்றுக் கொள்ளலாம்

  • @dejpranav9625
    @dejpranav96252 жыл бұрын

    நான் கனகதாரா ஸ்தோத்திரம் படிப்பதில் இருந்து செல்வம் பெருகி வருகிறது இது சத்தியம் ஓம் நமோ லட்சுமிநாராயணாய நமஹ

  • @rabyruby5040

    @rabyruby5040

    2 жыл бұрын

    எப்போது படிக்க வேண்டும். நான் காலை, மாலை படுகிறேன். கஷ்ட்டம் குறைந்துள்ளது.

  • @mahasathishmahasathish4566

    @mahasathishmahasathish4566

    2 жыл бұрын

    Unmai kanga dharam padinal ponmazai pozium 🙏

  • @inbasekarand5596

    @inbasekarand5596

    2 жыл бұрын

    ,

  • @leenadevivellingiri1281

    @leenadevivellingiri1281

    2 жыл бұрын

    Enga pana kastam அதிகம் இருக்கும்.

  • @thiruvarulkarunai4553

    @thiruvarulkarunai4553

    2 жыл бұрын

    இந்த பாடல் வரிகள் எங்கே கிடைக்கும்

  • @malathyshanmugam313
    @malathyshanmugam3133 жыл бұрын

    தன்னிடம் இருந்த அனைத்தையும் வறுமையிலும் அளித்த அன்னை துறவியை கவர்ந்து அவர் இறைவனிடம் வேண்டி செல்வம் அருளச் செய்ததை எளிமையான தமிழில் அனைவரும் மகிழ தந்த கவியரசு புகழ் ஓங்குக.புகழ் பரவ பாடுபடும் குடும்பத்தினர் வாழ்க வளமுடன்.

  • @ceeyarramasamy7577

    @ceeyarramasamy7577

    3 жыл бұрын

    I like somuch

  • @tmsundaram

    @tmsundaram

    2 жыл бұрын

    Awesome!

  • @priyalakshmimuthaiah595

    @priyalakshmimuthaiah595

    Жыл бұрын

    Ok

  • @rubimathi4056

    @rubimathi4056

    Жыл бұрын

    ccxx xxx c.f..

  • @arjunarumugasamy7829

    @arjunarumugasamy7829

    Жыл бұрын

    🤣🤣🤣ய் ilke no

  • @muthukumara2557
    @muthukumara2557 Жыл бұрын

    பாடலை கேட்டதும் மெய் சிலிர்த்து கண்ணீர் வந்தது 🙏🙏🙏🙏

  • @kadhir1939
    @kadhir19393 жыл бұрын

    பாடுபவர்கள் குரல் மிக இனிமையாக இருந்தது ஆனால் இசையமைப்பு திருப்திகரமாக இல்லை. நானும் நீண்ட நாட்களாக இப்பாடலை தேடி இன்றுதான் கண்டு பிடித்தேன்

  • @ananthakumarkandhiabalasin3749

    @ananthakumarkandhiabalasin3749

    2 жыл бұрын

    நீங்க இசையமைத்துபதிவேற்றுங்கள் கைவண்ணம் கேட்க ஆவலாக உள்ளது

  • @msselvam28

    @msselvam28

    Жыл бұрын

    yes ..Kadhir sir ....awaiting your music tune.. too,.. ,pls..

  • @malathyshanmugam313
    @malathyshanmugam3133 жыл бұрын

    ஓர் கணம் தொழுதால் கூட ஓடி வந்து அளிப்பாய் போற்றி-பிரார்த்தனை மகிமை உரைத்தமை அருமை.

  • @iratchaguyr1601
    @iratchaguyr16012 жыл бұрын

    என் தாய் தமிழில் தாயை வணங்குவதற்கு கொடுத்த கன்ணதாசணூக்கும் இந்த சேனலுக்கும் நன்றி

  • @ranik275

    @ranik275

    Жыл бұрын

    &h&Hf

  • @gayathrirangarajujairam3369

    @gayathrirangarajujairam3369

    Жыл бұрын

    R3

  • @SkramarSkramar

    @SkramarSkramar

    Жыл бұрын

    Tq ma

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy55992 жыл бұрын

    என்தாய் மொழியால் என் தாயை வணங்க தன் தனித்தமிழால் வாழ்த்திய கவியரசருக்கு நன்றி வாழ்க நின் புகழும் போற்றிய திருவருள் போல் என்றும்

  • @jayameenalsrinivasan5818
    @jayameenalsrinivasan58182 жыл бұрын

    கேட்க கேட்க ,செவிக்கு இன்பம்,வார்த்தை வரிகளை கூறக்கூற வாய்க்கு அமுதம்,மொத்தத்தில் மனதிற்கு பேரானந்தம்

  • @muthukrishnansrinivasan5122
    @muthukrishnansrinivasan51222 жыл бұрын

    வடமொழி தெரிந்த அறிஞர் மூலம் பொருள் அறிந்து இனிய தமிழில் பாடல் வரைந்த அற்புத கவிஞர் கண்ணதாசன் நாவில் கலைமகள் குடி இருந்தால் மட்டுமே இவ்வாறு அற்புதமாக எழுத முடியும் காலத் தால் அழியாத கவிஞர் பாடல் என்றும் நிலைத்து நிற்கும் கவிஞர் என்றும் என்றும் நெஞ்சில் நிலைத்து நிற்பார்

  • @maniankjs

    @maniankjs

    6 ай бұрын

    Great,God bless us, Wonderful words Beautyful songs Vazhga KAVINGER PUGAZH❤❤❤

  • @anandkanaga4378
    @anandkanaga43783 жыл бұрын

    வணக்கம்! தேனினிமைக் குரலில் கவிஞர் பொன்மழை விழங்கும் தூய்தமிழில் பாடியதற்கு வாழ்த்துக்கள்! கடவுள் கருணை!!!

  • @rengasamyr880

    @rengasamyr880

    2 жыл бұрын

    Who is the Singer of version 2?..Please update...

  • @bhavanipriyac4824
    @bhavanipriyac482427 күн бұрын

    16 மைவழிக் குவளைக் கண்ணாய் வரையிலாத் திருவே போற்றி! வானவர் மண்ணோர்க் கெல்லாம் வணக்கமாய் நின்றாய் போற்றி! மெய்விழி செவிவாய் நாசி விழைத்திடும் இன்பம் போற்றி! விரித்தமேற் புலனுக் கெல்லாம் விளங்காத பொருளே போற்றி! கைநிறை செல்வம் யாவும் கடைக்கண்ணால் அருள்வாய் போற்றி! காக்கையை அரச னாக்கும் கைமலர் உடையாய் போற்றி! செய்ததீ வினையை எல்லாம் தீர்க்கின்ற நெருப்பே போற்றி! சிறுமையைப் பெருமை யாக்கும் திருப்பதம் போற்றி! போற்றி! 17 மோகனன் துணையே போற்றி! முழுநில வடிவே போற்றி! மூவுல கங்கள் தேடும் முதற்பெரும் பொருளே போற்றி! தேகத்தே ஒளியை வைத்த செம்மணிக் குன்றே போற்றி! தீராத ஆசைக் குள்ளே திருவென நிற்பாய் போற்றி! ஓர்கணம் தொழுதாற் கூட ஓடிவந் தளிப்பாய் போற்றி! ஊர்ந்தமா மேக வண்ணன் உவப்புறச் சிரிப்பாய் போற்றி! தாள்களில் பணிந்தே னம்மா தண்ணருள் தருவாய் போற்றி! தலைமுதல் பாதம் மட்டும் தாழ்கின்றேன் போற்றி! போற்றி! 18 கண்பட்டால் மனது பாடும் கார்குழல் அலையே போற்றி! காதள வோடும் கண்ணால் காசினி அளந்தாய் போற்றி! வெண்பட்டால் அழகை மூடும் வியத்தகும் சிலையே போற்றி! வெண்மல்லி கைப்பூ மாலை விளையாடும் தோளீ போற்றி! பண்பட்டார் இல்லா தார்தம் பக்குவம் அறிவாய் போற்றி! பணிபவர் இதயத் துள்ளே பாசுரம் படிப்பாய் போற்றி! விண்முட்டும் ஞானம் பெற்ற வேதநா யகியே போற்றி! வேயிறு தோளின் சக்தி விரித்தருள் போற்றி! போற்றி! 19 மண்டலத் திசைகள் தோறும் மதகிரி குடங்கள் ஏந்தி மங்கைக்கு நன்னீ ராட்ட கங்கைநீர் குடத்தில் மாந்தி, தண்டலைக் கூந்தல் ஊற சர்வமங் களநீ ராட்டி, தாமரைப் பூவின் மேலோர் தாமரைப் பூவைச் சூட்டி, மண்டிய தூய்மைத் தாய்க்கு மற்றுமோர் தூய்மை நல்கி மறுவிலாப் பளிங்கின் மேனி மாசறத் துலங்கச் செய்யும் அண்டமா நெடியோன் தேவீ, அலைகடல் அரசன் பெண்ணே! அரிதுயில் கொள்ளும் காலை அடியவன் வணங்கு கின்றேன்! 20 பூவினில் உறையும் பூவே! பொன்னிடை உறையும் பொன்னே! பூஜைக்கே உரியோன் பூஜை புரிகின்ற காதற் செல்வி! ஏவுமோர் உலகத் துள்ளே இன்மையான் ஒருவ னேதான் இவனுனை இரந்த நிற்க இதுவொரு நியாயம் போதும்! தாவுநீர்க் கடலைப் போல தண்ணருள் அலைகள் பொங்கும் சந்திரப் பிறைப்பூங் கண்ணி சற்றுநீ திரும்பிப் பார்த்தால் மேவிய வறுமை தீர்ப்பேன்; மெல்லிடை பூங்கோ தாய்,நின் மின் னிடும் விழிகள் காண விழைந்தனேன் போற்றி! போற்றி! 21 முப்புவி ஈன்ற தாயே, மோகனச் சிரிப்பின் செல்வி! மூவிரண் டொன்றாய் வந்த பிரமத்தின் மொத்த மாக அற்புதம் காட்டி நிற்கும் அழகிய சிற்பச் சோதி ஆனந்தத் தெய்வ மாதா அரும்பெறல் அன்னை பேரில் இப்பொழு துரைத்த பாடல் எவரெங்கு பாடி னாலும் இப்புவி உளநாள் மட்டும் இன்பமும் அறிவும் சேரும்; நற்பெரும் பேறும் கிட்டும்! நன்னிலை வளரும்; என்றும் நாட்டுக்கே ஒருவராக நாளவர் உயர்வார் உண்மை!

  • @nathanvms7419
    @nathanvms74192 жыл бұрын

    என்ன அருமையான , அற்புதமான,தெய்வீக சொற்கள். தமிழ் வாழையடிவாழையாக என்றும் வளரும். வாழ்க கண்ணதாசன் புகழ்.

  • @moderntamilan6863
    @moderntamilan68632 жыл бұрын

    மிகவும் அழகான மற்றும் இனிமையான வரிகள் மயக்கும் குரலில் அமைந்துள்ள இப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்க மனம் விளைகிறது.🎧🎶🎵🎼

  • @birunthalakshmis5022
    @birunthalakshmis50223 жыл бұрын

    கவிஞர் ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்

  • @santhiprema7033

    @santhiprema7033

    2 жыл бұрын

    அப்பா உன் 🙏

  • @Tharasuman969

    @Tharasuman969

    2 жыл бұрын

    Yes heartfelt thanks to Kannadasan kavingar

  • @mylathalnanjappan4538
    @mylathalnanjappan4538 Жыл бұрын

    கனகதாரா ஸ்தோத்திரம் படிக்க படிக்க செல்வம் வளர்கிற தை உணர்கிறேன் தாயே சரணம்

  • @papathya2120
    @papathya21204 ай бұрын

    🥲🥲🥲இந்த கனகதாரா ஸ்தோத்திரம் பாடலை யான் அறியச் செய்த லட்சுமி தேவிக்கு என் நன்றிகள்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @user-fi7rp9mv8l
    @user-fi7rp9mv8l3 ай бұрын

    கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் மிகவும் அற்புதமாக இருக்கிறது வாழ்க தமிழ்!வளர்க தமிழ்!! கண்ணதாசன் ஐயாவுக்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤🌹🌹🌹🙏🙏🙏

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao98032 жыл бұрын

    பாடல் கேட்க கேட்க கண்களில் நீர் தான் வருது. கண்ணதாசனுக்கு இன்னும் 50 வருடமாவது இந்தம்பாள் அருள் புரிந்திருக்கக் கூடாதா.

  • @balasubramanin7563

    @balasubramanin7563

    2 жыл бұрын

    நன்றி நான் நினைத்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள் நன்றி தொடரட்டும் உங்கள் பணி 🙏🙏🙏🙏🙏

  • @ananthithiruvengadam8233

    @ananthithiruvengadam8233

    2 ай бұрын

    மகாலட்சுமி கவிஞர் மீது செல்வ மழையோடு ஆயுளையும் கூட்டி கொடுத்து இருக்கலாம்

  • @k.rajaragavi869
    @k.rajaragavi8692 жыл бұрын

    தெளிவான குரல் கேட்பதற்கு மிகவும் இனிமையான பாடல்.

  • @rajendranthenappan834
    @rajendranthenappan8343 жыл бұрын

    ஒவ்வொரு வரியும் ஆழமான கருத்துக்கள் உள்ளன.

  • @33infinity33

    @33infinity33

    3 жыл бұрын

    Pl watch Kanakadhara Stotram kzread.info/dash/bejne/nax41ruoh5mpctI.html Give your feedback

  • @murugananthi8482
    @murugananthi84823 жыл бұрын

    குரல் மிகவளமய் இருக்கிறது தினமும் ஐந்து முறை யாவது கேட்பேன்

  • @ramajeyam2782

    @ramajeyam2782

    2 жыл бұрын

    Ok kettadhu ku aparam edhavdhu vitla mattram irukkugala

  • @rengasamyr880

    @rengasamyr880

    2 жыл бұрын

    Singer please..

  • @Tharasuman969

    @Tharasuman969

    2 жыл бұрын

    @@ramajeyam2782 Unga manasuku Entha matram theriyatha pothu illathil ulla matram theriyathu

  • @thangavelbalasamy7022

    @thangavelbalasamy7022

    Жыл бұрын

    @@rengasamyr880 Bombay sisters

  • @ananthithiruvengadam8233
    @ananthithiruvengadam82332 ай бұрын

    எக்காலத்திலும் மறக்க முடியாத கவியரசு கண்ணதாசன் அவர்கள் வார்த்தைகளுக்கு சக்தி மிக அதிகம் கவிஞருக்கு நன்றி,......

  • @subramaniyans7540
    @subramaniyans75403 жыл бұрын

    Super ennaku migavum pudicha songs thanks

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh3 ай бұрын

    நான் எதிர்பார்க்காமல் இந்த பொன்மழை பாடல் அருமை👌👌👌நான் இந்த பாடலை தேட வேண்டும் என்று இருந்தேன் என் தாய் மகாலட்சுமி எனக்கு அருள அவர்களே வந்து விட்டார் 🙏🙏🙏காருண்யா மனமுடைய மகாலட்சமி தாயே காசுமழை கனகமழை பொழிகவே 🙏🙏தனமின்றி இப்புவியில் வாழ்கின்ற தருமனை தனவந்தன் ஆக்க அருள் புரிகவே 🙏🙏🙏🙏ஓம் மகாலட்சுமி தாயே போற்றி🙏🙏🙏

  • @m.devaki4989
    @m.devaki498910 ай бұрын

    தமிழில் கேட்பது மனதை நெகிழச் செய்கிறது. கவிஞர் கண்ணதாசன் கோடி கோடி நமஸ்காரம்

  • @RahulKumar-wp2kt
    @RahulKumar-wp2kt3 жыл бұрын

    நான் நீண்ட மாதங்களாக தேடிக்ககொன்டு இருந்த பாடல்.நன்றிகள் பல இந்த சானலுக்கு,...,...

  • @nagalakshmibalusamyhddj5229

    @nagalakshmibalusamyhddj5229

    3 жыл бұрын

    K no big

  • @muthusamy5703

    @muthusamy5703

    3 жыл бұрын

    நன்றி

  • @muthusamy5703

    @muthusamy5703

    3 жыл бұрын

    நான்சின்னவயதில்பாடியது.தற்போதுமறந்துவிடுட்டுதேடியதுநனறிகள்பலகோடி

  • @muthusamy5703

    @muthusamy5703

    3 жыл бұрын

    ஐயாநான்முத்துசாமிமனைவி

  • @kanchanaravichandran1521

    @kanchanaravichandran1521

    3 жыл бұрын

    @@muthusamy5703 e

  • @selvaa2627
    @selvaa2627 Жыл бұрын

    8 எத்தனை பேர்க்குக் கிட்டும் இறையருள் ஆன்ம சாந்தி? இகமெனும் கடலில் வீழ்ந்து எவர்பிழைத் தார்கள் நீந்தி? தத்துவப் படியே யாவும் தலைமுறை வழியே கிட்டும்! தவமெனும் முயற்சி யாலே பவவினை தணிந்து போகும்! அத்தனை முயற்சி என்ன அண்ணல்மா தேவி கண்ணில் அருள்மழை வந்தாற் போதும் அகம்புறம் முக்தி யாகும்! இத்தனை சொன்ன பின்னும் இன்னுமா தயக்கம் தாயே! இல்லத்தைச் செல்வ மாக்கி இன்னருள் புரிவாய் நீயே! 9 நீருண்ட மேகக் கண்கள் நிழலுண்ட கரிய கூந்தல்; நேர்கொண்ட மாந்தர் வீட்டில் நிலைகொண்ட செல்வப் பந்தல்! சீர்கொண்ட அமுதச் செல்வி சில்லென்ற காற்றுப் பாய்ந்தால் சேர்கின்ற மேகத் தண்ணீர் சிதறுண்டு பாய்வ தைப்போல் வேர்கொண்ட பாவ மேனும் வினைகொண்ட பாவ மேனும் வேய்கொண்ட தோளி னாய்உன் விழிகண்டால் தீர்ந்து போகும்! தேர்கோண்டேன் புரவி இல்லை; செல்வமாம் புரவி யாலே திருவருள் செய்வாய் நீயே தேப்பெரும் கமலத் தாயே! 10 ஆக்கலும் அழித்தல் காத்தல் அருள்நிறை இறைவன் சக்தி! அன்னவன் தோளில் நீயே அனைத்துமாய் விளங்கும் சக்தி! ஆக்கலில் வாணி யாவாய்; அளித்தலில் திருவாய் நிற்பாய்; அழிக்கின்ற வேளை வந்தால் அந்தமில் துர்க்கை யாவாய்! தீக்கொண்ட கரத்து நாதன் திருப்பரா சக்தி யாக திரிபுரம் ஏழு லோகம் திருவருள் புரிந்து நிற்பாய்! வாக்குயர் கமலச் செல்வி வாடைநீ, தென்றல் நீயே! வளமென இரப்போர்க் கெல்லாம் வந்தருள் புரிகின் றாயே! 11 வேதத்தின் விளைவே போற்றி! வினைப்பயன் விளைப்பாய் போற்றி! சீதத்தா மரையே போற்றி! செம்மைசேர் அழகே போற்றி! கோதைப்பண் புடையாய் போற்றி! குளிர்ந்தமா மழையே போற்றி! ஓர்தத்து வத்தில் நிற்கும் உமையவள் வடிவே போற்றி! பாதத்தைக் கமலம் தாங்கப் பல்லுயிர் காப்பாய் போற்றி! நாதத்து நெடியோன் கொண்ட நங்கைநீ போற்றி! போற்றி! பாதத்தில் சிரசை வைத்துப் பணிகின்றேன் போற்றி! போற்றி! மாதத்தில் ஒருநாள் கூட மறந்திடாய் போற்றி! போற்றி! 12 அன் றலர் கமலம் போன்ற அழகிய வதனி போற்றி! அலைகடல் அமுத மாக அவதரித் தெழுந்தாய் போற்றி! குன்றிடா அமுதத் தோடு கூடவே பிறந்தாய் போற்றி! குளிர்ந்தமா மதியி னோடும் குடிவந்த உறவே போற்றி! மன்றத்து வேங்க டேசன் மனங்கவர் மலரே போற்றி! மாயவன் மார்பில் நின்று மயிலெனச் சிரிப்பாய் போற்றி! என்றைக்கும் நீங்கா தாக இருக்கின்ற திருவே போற்றி! எளியவன் வணங்கு கின்றேன் இன்னருள் போற்றி! போற்றி! 13 தாமரை மலரில் நிற்கும் தளிரன்ன திருவே போற்றி! தாமரை வதனங் கொண்ட தங்கமா மணியே போற்றி! தாமரை கரத்தில் ஏந்தித் தவமென நிற்பாய் போற்றி! தாமரைக் கண்ணான் காக்கும் தரணியைக் காப்பாய் போற்றி! தாமரை போல வந்த தவமுனி தேவர்க் கெல்லாம் தாமரைக் கைகள் காட்டி தயைசெயும் திருவே போற்றி! தாமரைக் கண்ணால் செல்வம் தந்தருள் புரிவாய் போற்றி! தாள், மறை, நானோ வார்த்தை; தர்மமே போற்றி! போற்றி! 14 பெண்ணெனப் பிறந்தா யேனும் பெரும்திறன் கொண்டாய் போற்றி! பிருகுவம் சத்தில் வந்த பீடுடை வதனம் போற்றி! தண்ணளி வேங்க டத்தான் தழுவிடும் கிளியே போற்றி! தத்துநீர்க் குளத்தில் ஆடும் தருணியே லக்ஷ்மீ! போற்றி! சித்திரக் கொடியே போற்றி! செம்மணி நகையே போற்றி! ஸ்ரீதரன் திருப்பா தங்கள் சேவைசெய் குயிலே போற்றி! பத்தினிப் பெண்டிர் தம்மைப் பார்வையில் வைப்பாய் போற்றி! பக்தருக்(கு) அருள்வாய் போற்றி! பணிந்தனம் போற்றி! போற்றி! 15 கண்களைப் பறிக்கும் காட்சி கவிந்தநின் வடிவம் போற்றி! கமலப்பூ வதனம் போற்றி! கமலமா விழிகள் போற்றி! மண்ணிலும் விண்ணு ளோர்க்கும் மங்கலம் நிறைப்பாய் போற்றி! மண்டல இயக்கத் திற்கே மந்திர(ம்) ஆனாய் போற்றி! விண்ணவர் வணங்கும் தேவி விந்தையின் மூலம் போற்றி! விரிமலர் கண்ணன் தேவன் விரும்பிடும் நகையே போற்றி! எண்ணிய படியே உன்னை ஏத்தினேன் போற்றி! போற்றி! இசைபட வாழ வைப்பாய் இலக்குமி போற்றி! போற்றி! 16 மைவழிக் குவளைக் கண்ணாய் வரையிலாத் திருவே போற்றி! வானவர் மண்ணோர்க் கெல்லாம் வணக்கமாய் நின்றாய் போற்றி! மெய்விழி செவிவாய் நாசி விழைத்திடும் இன்பம் போற்றி! விரித்தமேற் புலனுக் கெல்லாம் விளங்காத பொருளே போற்றி! கைநிறை செல்வம் யாவும் கடைக்கண்ணால் அருள்வாய் போற்றி! காக்கையை அரச னாக்கும் கைமலர் உடையாய் போற்றி! செய்ததீ வினையை எல்லாம் தீர்க்கின்ற நெருப்பே போற்றி! சிறுமையைப் பெருமை யாக்கும் திருப்பதம் போற்றி! போற்றி!

  • @e.m.ashamai7434

    @e.m.ashamai7434

    8 ай бұрын

    நன்றிங்க

  • @selvadhanish153

    @selvadhanish153

    3 ай бұрын

    நன்றி ❤

  • @selvadhanish153

    @selvadhanish153

    3 ай бұрын

    நன்றி ❤

  • @selvadhanish153

    @selvadhanish153

    3 ай бұрын

    நன்றி ❤

  • @wreckercodm2713

    @wreckercodm2713

    3 ай бұрын

    Thank you

  • @bhavanipriyac4824
    @bhavanipriyac482427 күн бұрын

    11 வேதத்தின் விளைவே போற்றி! வினைப்பயன் விளைப்பாய் போற்றி! சீதத்தா மரையே போற்றி! செம்மைசேர் அழகே போற்றி! கோதைப்பண் புடையாய் போற்றி! குளிர்ந்தமா மழையே போற்றி! ஓர்தத்து வத்தில் நிற்கும் உமையவள் வடிவே போற்றி! பாதத்தைக் கமலம் தாங்கப் பல்லுயிர் காப்பாய் போற்றி! நாதத்து நெடியோன் கொண்ட நங்கைநீ போற்றி! போற்றி! பாதத்தில் சிரசை வைத்துப் பணிகின்றேன் போற்றி! போற்றி! மாதத்தில் ஒருநாள் கூட மறந்திடாய் போற்றி! போற்றி! 12 அன் றலர் கமலம் போன்ற அழகிய வதனி போற்றி! அலைகடல் அமுத மாக அவதரித் தெழுந்தாய் போற்றி! குன்றிடா அமுதத் தோடு கூடவே பிறந்தாய் போற்றி! குளிர்ந்தமா மதியி னோடும் குடிவந்த உறவே போற்றி! மன்றத்து வேங்க டேசன் மனங்கவர் மலரே போற்றி! மாயவன் மார்பில் நின்று மயிலெனச் சிரிப்பாய் போற்றி! என்றைக்கும் நீங்கா தாக இருக்கின்ற திருவே போற்றி! எளியவன் வணங்கு கின்றேன் இன்னருள் போற்றி! போற்றி! 13 தாமரை மலரில் நிற்கும் தளிரன்ன திருவே போற்றி! தாமரை வதனங் கொண்ட தங்கமா மணியே போற்றி! தாமரை கரத்தில் ஏந்தித் தவமென நிற்பாய் போற்றி! தாமரைக் கண்ணான் காக்கும் தரணியைக் காப்பாய் போற்றி! தாமரை போல வந்த தவமுனி தேவர்க் கெல்லாம் தாமரைக் கைகள் காட்டி தயைசெயும் திருவே போற்றி! தாமரைக் கண்ணால் செல்வம் தந்தருள் புரிவாய் போற்றி! தாள், மறை, நானோ வார்த்தை; தர்மமே போற்றி! போற்றி! 14 பெண்ணெனப் பிறந்தா யேனும் பெரும்திறன் கொண்டாய் போற்றி! பிருகுவம் சத்தில் வந்த பீடுடை வதனம் போற்றி! தண்ணளி வேங்க டத்தான் தழுவிடும் கிளியே போற்றி! தத்துநீர்க் குளத்தில் ஆடும் தருணியே லக்ஷ்மீ! போற்றி! சித்திரக் கொடியே போற்றி! செம்மணி நகையே போற்றி! ஸ்ரீதரன் திருப்பா தங்கள் சேவைசெய் குயிலே போற்றி! பத்தினிப் பெண்டிர் தம்மைப் பார்வையில் வைப்பாய் போற்றி! பக்தருக்(கு) அருள்வாய் போற்றி! பணிந்தனம் போற்றி! போற்றி! 15 கண்களைப் பறிக்கும் காட்சி கவிந்தநின் வடிவம் போற்றி! கமலப்பூ வதனம் போற்றி! கமலமா விழிகள் போற்றி! மண்ணிலும் விண்ணு ளோர்க்கும் மங்கலம் நிறைப்பாய் போற்றி! மண்டல இயக்கத் திற்கே மந்திர(ம்) ஆனாய் போற்றி! விண்ணவர் வணங்கும் தேவி விந்தையின் மூலம் போற்றி! விரிமலர் கண்ணன் தேவன் விரும்பிடும் நகையே போற்றி! எண்ணிய படியே உன்னை ஏத்தினேன் போற்றி! போற்றி! இசைபட வாழ வைப்பாய் இலக்குமி போற்றி! போற்றி!

  • @muthusamyp1982
    @muthusamyp19823 жыл бұрын

    அமுதமழை! அருள்மழை!! தமிழ்மழை!!! கவிமழை!!!! இசைமழை!!!!! இன்குரல்மழை!!!!!!

  • @tmselvilic7971

    @tmselvilic7971

    2 жыл бұрын

    மிகவும் அருமையான பாடல். நான் தினமும் கேட்பேன்

  • @thangama4249
    @thangama4249 Жыл бұрын

    இந்த அற்புதமான பாடலை தமிழில் எழு திய துநமக்கு கிடைத்த பரிசு கவிஞ ரை வணங்கு கிறேன்

  • @rajikishona
    @rajikishona3 жыл бұрын

    This song really amazed With sweet and short lyrics

  • @ramasellappan7799
    @ramasellappan77998 ай бұрын

    யாருடைய குரல்? மெய் சிலிர்க்க வைக்குது. தேனைவிட இனிமையாக உள்ளது

  • @Muruga888
    @Muruga888 Жыл бұрын

    நான் கேட்கும்போதெல்லாம் அனுபவிப்பேன் நன்ட்ரி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Tharasuman969
    @Tharasuman9692 жыл бұрын

    Pls add lyrics in the description box so that we all can sing along with this song 🙏🏻

  • @meenakshimuthia2466

    @meenakshimuthia2466

    Жыл бұрын

    Yes please add lyrics Iya. Gratitude

  • @shivanithoughts

    @shivanithoughts

    7 ай бұрын

    Google la kannadasan ponmalainnu type pannunga varum

  • @kalai1469
    @kalai14693 жыл бұрын

    WE DO NOT KNOW THE SWEETNESS, SHARPNESS, DEPTH, OF TAMIL LANGUAGE TILL KANNADASAN WRITES IN 20TH AND 21ST CENTURIES.

  • @ganesanthiagarajan4367

    @ganesanthiagarajan4367

    8 ай бұрын

    What a melodious voice I donot know why tears coming down from my eyes. Thanks a lot for giving this song

  • @ganesanthiagarajan4367

    @ganesanthiagarajan4367

    8 ай бұрын

    Who se voice is. this? My blessings to the singer

  • @anandaraj9630
    @anandaraj9630 Жыл бұрын

    இந்த கனகதாரா ஸ்தோத்திரம் பயனுள்ளதாக இருந்தது தமிழில் அழகாகத் தந்துள்ளார் கண்ணதாசன் இதை எல்லோரும் பயனடைய வெளியிட்டதற்கு நன்றி

  • @jayabharathi6909

    @jayabharathi6909

    Жыл бұрын

    ❤❤❤❤❤❤

  • @rssampathkumar7556
    @rssampathkumar7556 Жыл бұрын

    இது புத்தக வடிவில் விளக்கத்துடன் உள்ளது. புத்தக கடைகளில் கிடைக்கிறது

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal89016 ай бұрын

    காலத்தை வென்ற கவியரசர் கண்ணதாசன் அவர்கள் புகழ் என்றும் நிலைக்கும் நீடிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை தான்! கவிஞரின் கவிதைகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்

  • @ramuratha3260
    @ramuratha32603 жыл бұрын

    என்ன ஒரு அருமை யான பாடல்..... கேட்க கேட்க கண்ணீர் பெருகுகிறது..... ..என்னே ... லட்சுமி தேவியின் அழகும் அருமையும் .. . என்ன தவம் செய்தேனோ இப்பாடலை அடைவதற்கு...மிக்க நன்றிகள்... பாடலை பதிவேற்றம் செய்தவர்க்கு.......

  • @gowrinatarajan6693

    @gowrinatarajan6693

    2 жыл бұрын

    Arumaiyana varikal

  • @ananthakrishnankuppusamy7494

    @ananthakrishnankuppusamy7494

    2 жыл бұрын

    Very arputam

  • @ashokKumar-rs7ul

    @ashokKumar-rs7ul

    2 жыл бұрын

    @@ananthakrishnankuppusamy7494 😂jj Jo 0 Jo all

  • @priyavasu7219
    @priyavasu72194 ай бұрын

    மகலஷ்மி தாயே எங்களோட கஷ்டத்தையும் தீர்த்து வையுங்கள் லக்ஷ்மி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @ratnarajshanmugam8690
    @ratnarajshanmugam8690 Жыл бұрын

    It is true. I have been studying this song since 1984. Now I am 53. I shared this song to many people. I have Kannadasan's original Ponmalai book. I typed this song and gave to many people and they also got benefits. Still I am doing this. Thanks Mahalaxmi matha and Athi sangar and Kannadasan.

  • @periyasaamyjeganathan9301

    @periyasaamyjeganathan9301

    10 ай бұрын

    வெரி good comment

  • @kovaixerox1456

    @kovaixerox1456

    6 ай бұрын

    Good job please send me the typed song if u don't mind thanks in advance

  • @rengasivamc1137
    @rengasivamc11372 жыл бұрын

    தினம் தினம் அள்ளி பருகும் அமிர்தம் இது.

  • @vathsalabhavithra8479
    @vathsalabhavithra84794 ай бұрын

    மகாலக்ஷ்மி செல்வம் பக்தியுடன் பணிவுடன் கேட்கும் தமிழின் அழகு வார்த்தை இல்லை நன்றிகள் கோடி

  • @annitrust8231
    @annitrust82314 ай бұрын

    லட்சுமி தாயே என்னை கஷ்டத்தில் இருந்து காப்பாற்றுங்கள் தாயே என் பிள்ளைகளின் வாழ்கை செழிப்பாக‌ வேண்டும் தாயே

  • @thirumalaikumaranarunachal9622
    @thirumalaikumaranarunachal96223 жыл бұрын

    அருமை மிகு பாடல்கள்

  • @mohanam7934
    @mohanam79343 ай бұрын

    பாடுகின்ற குரல் கேட்பதற்கு தெளிவாக உள்ளது. வீடியோ ஸ்கிரீனில் பாடல்கள் வரிகள் வந்தால் நன்றாக இருக்கும்.

  • @ananthithiruvengadam8233

    @ananthithiruvengadam8233

    2 ай бұрын

    Yes

  • @palaniappans.r.7474
    @palaniappans.r.74743 жыл бұрын

    Thank you for uploading this version. It is so soothing to ears

  • @kasivishwanathan3106

    @kasivishwanathan3106

    2 жыл бұрын

    கண்ணதாசன் அவர்களின் அருள் சுரக்கவைக்கும் அற்புத வரிகள்.. நன்றி

  • @thamavela5416
    @thamavela5416 Жыл бұрын

    நெஞ்சில் அமைதி பிறக்கிறது பிறவிக்கவிஞனுக்கு கோடி கோடி நன்றிகள்

  • @meenakshisundaramperumal2389
    @meenakshisundaramperumal238911 ай бұрын

    அவன் அருளால் அவன்தாள் வணங்குகிறேன். நன்றி. ❤❤❤

  • @msselvam28
    @msselvam28 Жыл бұрын

    ஸ்ரீ மகாலட்சுமி திருத்தாள் போற்றி,.. திருமகளை நோக்கிப் பாடி ஸ்ரீ ஆதிசங்கரர்க்கு நன்றி. இப்பாடலை எழுதி இனிமையான இசைத்து, இனிமையான தெளிவான குரல்லுக்கு பாடி வெளியிட்ட அனைவர்க்கும் மனமார்ந்த கோடான கோடி நன்றி. என்தாய் தமிழில் ஸ்ரீ மகாலட்சுமி தாயை வணங்குவதற்கு கொடுத்த கவியரசருக்கு நன்றி. திரு காந்தி கண்ணதாசன் அவர்களுக்கு எனது நன்றிகள்….நன்றி….நன்றி,,🙏🙏

  • @bhavanipriyac4824

    @bhavanipriyac4824

    27 күн бұрын

    1 மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ! மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்! நீலமா மேகம் போல நிற்கின்ற திருமா லுந்தன் நேயத்தால் மெய்சி லிரித்து நிகரிலாச் செல்வம் கொண்டான்! மாலவன் மீது வைத்த மாயப்பொன் விழிஇ ரண்டை மாதுநீ என்னி டத்தில் வைத்தனை என் றால் நானும் காலமா கடலில் உந்தன் கருணையால் செல்வம் பெற்று கண்ணிறை வாழ்வு கொள்வேன் கண்வைப்பாய் கமலத் தாயே! 2 நீலமா மலரைப் பார்த்து நிலையிலாது அலையும் வண்டு நிற்பதும் பறப்ப தும்போய் நின்விழி மயக்கம் கொண்டு கோலமார் நெடுமால் வண்ணக் குளிர்முகம் தன்னைக் கண்டு கொஞ்சிடும், பிறகு நாணும் கோதையார் குணத்தில் நின்று! ஏலமார் குழலி அந்த இருவிழி சிறிது நேரம் என்வசம் திரும்பு மாயின் ஏங்கிய காலம் சென்று ஆலமா மரங்கள் போல அழிவிலாச் செல்வம் கொண்டு அடியவன் வாழ்வு காண்பேன் அருள்செய்வாய் கமலத் தாயே! 3 நற்குடிப் பிறந்த பெண்கள் நாயகன் தனைப்பார்த் தாலும் நாணத்தால் முகம்பு தைத்து நாலிலோர் பாகம் பார்ப்பார்! பற்பல நினைத்த போதும் பாதிக்கண் திறந்து மூடி பரம்பரைப் பெருமை காப்பார்! பாற்கடல் அமுதே! நீயும் அற்புத விழிக ளாலே அச்சுத முகுந்தன் மேனி அப்படிக் காண்ப துண்டு ஆனந்தம் கொள்வ துண்டு! இப்பொழு(து) அந்தக் கண்ணை என்னிடம் திருப்பு தாயே! இருமையும் செழித்து வாழ இகத்தினில் அருள்வாய் நீயே! 4 மதுஎனும் பெயரில் வாழ்ந்த மனமிலா அரக்கன் தன்னை மாபெரும் போரில் வென்ற மாலவன் மார்பி லாடும் அதிசய நீல மாலை அன் னநின் விழிகள் கண்டு அண்ணலும் காலந் தோறும் ஆனந்தம் கொள்வ துண்டு! பதுமநேர் முகத்தி னாளே! பதுமத்தில் உறையும் செல்வி! பாற்கடல் மயக்கும் கண்ணை பதியின்மேற் பாய்ந்த கண்ணை பேர்த்தெடுத் தென்மேல் வைத்தால் பிழைப்பன்யான் அருள்செய் வாயே, பேரருள் ஒருங்கே கொண்ட பிழையிலாக் கமலத் தாயே!

  • @bhavanipriyac4824

    @bhavanipriyac4824

    27 күн бұрын

    5 கைடப அரக்கன் தன்னை கடிந்தநின் கணவன் மார்பு கார்முகில் அன்னத் தோன்றி கருணைநீர் பொழியுங் காலை, மைதவழ் மார்பில் வீசும் மயக்குறும் மின்னல் ஒன்று! மயக்குவன் திருமால்; பின்னர் மகிழ்வன்நின் விழிதா னென்று! செய்தவப் பிருகு வம்சச் சேயெனப் பிறந்து எங்கள் திருவென வளர்ந்த நங்காய்! தினமும்யாம் வணங்கும் கண்ணாய்! கொய்தெடு விழியை என்மேல் கொண்டுவந் தருள்செய் வாயே கொற்றவர் பணிகள் செய்யும் கோலமார் கமலத் தாயே! 6 போரினில் அரக்கர் கூட்டம் புறங்கண்ட நெடியோன் தன்னை போரின்றிக் குருதி யின்றிப் புறங்காணத் துடித்து வந்த மாரனை ஊக்கு வித்த வாளெது கமல நங்காய்? மங்கை நின் விழிக ளன்றோ! மாலவன் தன்னை வென்ற தேரிய மாரன் உன்னைத் தேரெனக் கொண்ட தாலே திருமலை வேங்க டேசன் திறத்தினை வென்றான் அன்றோ! கூரிய விழியாய் உன்றன் குறுவிழி தன்னை என்பால் கொண்டுவந் தால்யான் உய்வேன் கொடுத்தருள் கமலத் தாயே! 7 ’மந்திரம் உரைத்தாற் போதும் மலரடி தொழுதாற் போதும்’ மாந்தருக்(கு) அருள்வேன் என்று மலர்மகள் நினைத்தால் போதும் இந்திர பதவி கூடும்; இகத்திலும் பரங்கொண் டாடும்; இணையறு செல்வம் கோடி இல்லத்தின் நடுவில் சேரும்! சந்திர வதனி கண்கள் சாடையிற் பார்த்தாற் போதும் தாய்விழிப் பட்ட கல்லும் தரணியில் தங்க மாகும்! எந்தவோர் பதவி வேட்டேன் எளியனுக்(கு) அருள்செய் வாயே! இகத்தினில் செல்வம் தந்து இயக்குவாய் கமலத் தாயே! 8 எத்தனை பேர்க்குக் கிட்டும் இறையருள் ஆன்ம சாந்தி? இகமெனும் கடலில் வீழ்ந்து எவர்பிழைத் தார்கள் நீந்தி? தத்துவப் படியே யாவும் தலைமுறை வழியே கிட்டும்! தவமெனும் முயற்சி யாலே பவவினை தணிந்து போகும்! அத்தனை முயற்சி என்ன அண்ணல்மா தேவி கண்ணில் அருள்மழை வந்தாற் போதும் அகம்புறம் முக்தி யாகும்! இத்தனை சொன்ன பின்னும் இன்னுமா தயக்கம் தாயே! இல்லத்தைச் செல்வ மாக்கி இன்னருள் புரிவாய் நீயே!

  • @bhavanipriyac4824

    @bhavanipriyac4824

    27 күн бұрын

    9 நீருண்ட மேகக் கண்கள் நிழலுண்ட கரிய கூந்தல்; நேர்கொண்ட மாந்தர் வீட்டில் நிலைகொண்ட செல்வப் பந்தல்! சீர்கொண்ட அமுதச் செல்வி சில்லென்ற காற்றுப் பாய்ந்தால் சேர்கின்ற மேகத் தண்ணீர் சிதறுண்டு பாய்வ தைப்போல் வேர்கொண்ட பாவ மேனும் வினைகொண்ட பாவ மேனும் வேய்கொண்ட தோளி னாய்உன் விழிகண்டால் தீர்ந்து போகும்! தேர்கோண்டேன் புரவி இல்லை; செல்வமாம் புரவி யாலே திருவருள் செய்வாய் நீயே தேப்பெரும் கமலத் தாயே! 10 ஆக்கலும் அழித்தல் காத்தல் அருள்நிறை இறைவன் சக்தி! அன்னவன் தோளில் நீயே அனைத்துமாய் விளங்கும் சக்தி! ஆக்கலில் வாணி யாவாய்; அளித்தலில் திருவாய் நிற்பாய்; அழிக்கின்ற வேளை வந்தால் அந்தமில் துர்க்கை யாவாய்! தீக்கொண்ட கரத்து நாதன் திருப்பரா சக்தி யாக திரிபுரம் ஏழு லோகம் திருவருள் புரிந்து நிற்பாய்! வாக்குயர் கமலச் செல்வி வாடைநீ, தென்றல் நீயே! வளமென இரப்போர்க் கெல்லாம் வந்தருள் புரிகின் றாயே! 11 வேதத்தின் விளைவே போற்றி! வினைப்பயன் விளைப்பாய் போற்றி! சீதத்தா மரையே போற்றி! செம்மைசேர் அழகே போற்றி! கோதைப்பண் புடையாய் போற்றி! குளிர்ந்தமா மழையே போற்றி! ஓர்தத்து வத்தில் நிற்கும் உமையவள் வடிவே போற்றி! பாதத்தைக் கமலம் தாங்கப் பல்லுயிர் காப்பாய் போற்றி! நாதத்து நெடியோன் கொண்ட நங்கைநீ போற்றி! போற்றி! பாதத்தில் சிரசை வைத்துப் பணிகின்றேன் போற்றி! போற்றி! மாதத்தில் ஒருநாள் கூட மறந்திடாய் போற்றி! போற்றி! 12 அன் றலர் கமலம் போன்ற அழகிய வதனி போற்றி! அலைகடல் அமுத மாக அவதரித் தெழுந்தாய் போற்றி! குன்றிடா அமுதத் தோடு கூடவே பிறந்தாய் போற்றி! குளிர்ந்தமா மதியி னோடும் குடிவந்த உறவே போற்றி! மன்றத்து வேங்க டேசன் மனங்கவர் மலரே போற்றி! மாயவன் மார்பில் நின்று மயிலெனச் சிரிப்பாய் போற்றி! என்றைக்கும் நீங்கா தாக இருக்கின்ற திருவே போற்றி! எளியவன் வணங்கு கின்றேன் இன்னருள் போற்றி! போற்றி! 13 தாமரை மலரில் நிற்கும் தளிரன்ன திருவே போற்றி! தாமரை வதனங் கொண்ட தங்கமா மணியே போற்றி! தாமரை கரத்தில் ஏந்தித் தவமென நிற்பாய் போற்றி! தாமரைக் கண்ணான் காக்கும் தரணியைக் காப்பாய் போற்றி! தாமரை போல வந்த தவமுனி தேவர்க் கெல்லாம் தாமரைக் கைகள் காட்டி தயைசெயும் திருவே போற்றி! தாமரைக் கண்ணால் செல்வம் தந்தருள் புரிவாய் போற்றி! தாள், மறை, நானோ வார்த்தை; தர்மமே போற்றி! போற்றி!

  • @bhavanipriyac4824

    @bhavanipriyac4824

    27 күн бұрын

    14 பெண்ணெனப் பிறந்தா யேனும் பெரும்திறன் கொண்டாய் போற்றி! பிருகுவம் சத்தில் வந்த பீடுடை வதனம் போற்றி! தண்ணளி வேங்க டத்தான் தழுவிடும் கிளியே போற்றி! தத்துநீர்க் குளத்தில் ஆடும் தருணியே லக்ஷ்மீ! போற்றி! சித்திரக் கொடியே போற்றி! செம்மணி நகையே போற்றி! ஸ்ரீதரன் திருப்பா தங்கள் சேவைசெய் குயிலே போற்றி! பத்தினிப் பெண்டிர் தம்மைப் பார்வையில் வைப்பாய் போற்றி! பக்தருக்(கு) அருள்வாய் போற்றி! பணிந்தனம் போற்றி! போற்றி! 15 கண்களைப் பறிக்கும் காட்சி கவிந்தநின் வடிவம் போற்றி! கமலப்பூ வதனம் போற்றி! கமலமா விழிகள் போற்றி! மண்ணிலும் விண்ணு ளோர்க்கும் மங்கலம் நிறைப்பாய் போற்றி! மண்டல இயக்கத் திற்கே மந்திர(ம்) ஆனாய் போற்றி! விண்ணவர் வணங்கும் தேவி விந்தையின் மூலம் போற்றி! விரிமலர் கண்ணன் தேவன் விரும்பிடும் நகையே போற்றி! எண்ணிய படியே உன்னை ஏத்தினேன் போற்றி! போற்றி! இசைபட வாழ வைப்பாய் இலக்குமி போற்றி! போற்றி! 16 மைவழிக் குவளைக் கண்ணாய் வரையிலாத் திருவே போற்றி! வானவர் மண்ணோர்க் கெல்லாம் வணக்கமாய் நின்றாய் போற்றி! மெய்விழி செவிவாய் நாசி விழைத்திடும் இன்பம் போற்றி! விரித்தமேற் புலனுக் கெல்லாம் விளங்காத பொருளே போற்றி! கைநிறை செல்வம் யாவும் கடைக்கண்ணால் அருள்வாய் போற்றி! காக்கையை அரச னாக்கும் கைமலர் உடையாய் போற்றி! செய்ததீ வினையை எல்லாம் தீர்க்கின்ற நெருப்பே போற்றி! சிறுமையைப் பெருமை யாக்கும் திருப்பதம் போற்றி! போற்றி! 17 மோகனன் துணையே போற்றி! முழுநில வடிவே போற்றி! மூவுல கங்கள் தேடும் முதற்பெரும் பொருளே போற்றி! தேகத்தே ஒளியை வைத்த செம்மணிக் குன்றே போற்றி! தீராத ஆசைக் குள்ளே திருவென நிற்பாய் போற்றி! ஓர்கணம் தொழுதாற் கூட ஓடிவந் தளிப்பாய் போற்றி! ஊர்ந்தமா மேக வண்ணன் உவப்புறச் சிரிப்பாய் போற்றி! தாள்களில் பணிந்தே னம்மா தண்ணருள் தருவாய் போற்றி! தலைமுதல் பாதம் மட்டும் தாழ்கின்றேன் போற்றி! போற்றி! 18 கண்பட்டால் மனது பாடும் கார்குழல் அலையே போற்றி! காதள வோடும் கண்ணால் காசினி அளந்தாய் போற்றி! வெண்பட்டால் அழகை மூடும் வியத்தகும் சிலையே போற்றி! வெண்மல்லி கைப்பூ மாலை விளையாடும் தோளீ போற்றி! பண்பட்டார் இல்லா தார்தம் பக்குவம் அறிவாய் போற்றி! பணிபவர் இதயத் துள்ளே பாசுரம் படிப்பாய் போற்றி! விண்முட்டும் ஞானம் பெற்ற வேதநா யகியே போற்றி! வேயிறு தோளின் சக்தி விரித்தருள் போற்றி! போற்றி!

  • @bhavanipriyac4824

    @bhavanipriyac4824

    27 күн бұрын

    19 மண்டலத் திசைகள் தோறும் மதகிரி குடங்கள் ஏந்தி மங்கைக்கு நன்னீ ராட்ட கங்கைநீர் குடத்தில் மாந்தி, தண்டலைக் கூந்தல் ஊற சர்வமங் களநீ ராட்டி, தாமரைப் பூவின் மேலோர் தாமரைப் பூவைச் சூட்டி, மண்டிய தூய்மைத் தாய்க்கு மற்றுமோர் தூய்மை நல்கி மறுவிலாப் பளிங்கின் மேனி மாசறத் துலங்கச் செய்யும் அண்டமா நெடியோன் தேவீ, அலைகடல் அரசன் பெண்ணே! அரிதுயில் கொள்ளும் காலை அடியவன் வணங்கு கின்றேன்! 20 பூவினில் உறையும் பூவே! பொன்னிடை உறையும் பொன்னே! பூஜைக்கே உரியோன் பூஜை புரிகின்ற காதற் செல்வி! ஏவுமோர் உலகத் துள்ளே இன்மையான் ஒருவ னேதான் இவனுனை இரந்த நிற்க இதுவொரு நியாயம் போதும்! தாவுநீர்க் கடலைப் போல தண்ணருள் அலைகள் பொங்கும் சந்திரப் பிறைப்பூங் கண்ணி சற்றுநீ திரும்பிப் பார்த்தால் மேவிய வறுமை தீர்ப்பேன்; மெல்லிடை பூங்கோ தாய்,நின் மின் னிடும் விழிகள் காண விழைந்தனேன் போற்றி! போற்றி! 21 முப்புவி ஈன்ற தாயே, மோகனச் சிரிப்பின் செல்வி! மூவிரண் டொன்றாய் வந்த பிரமத்தின் மொத்த மாக அற்புதம் காட்டி நிற்கும் அழகிய சிற்பச் சோதி ஆனந்தத் தெய்வ மாதா அரும்பெறல் அன்னை பேரில் இப்பொழு துரைத்த பாடல் எவரெங்கு பாடி னாலும் இப்புவி உளநாள் மட்டும் இன்பமும் அறிவும் சேரும்; நற்பெரும் பேறும் கிட்டும்! நன்னிலை வளரும்; என்றும் நாட்டுக்கே ஒருவராக நாளவர் உயர்வார் உண்மை!

  • @murugananthi8482
    @murugananthi84823 жыл бұрын

    கனகதாரா இந்த பாடல் என் னிடத்தில் ஐந்து விதத்தில் உள்ளது

  • @msselvam28

    @msselvam28

    Жыл бұрын

    sir, link please, Tq

  • @kamarajs6021
    @kamarajs6021 Жыл бұрын

    கடல் சூழ்ந்தாலும் படைப்புகள் கடல் தாண்டி செல்லும்

  • @nanrunachalam2294
    @nanrunachalam22942 жыл бұрын

    செட்டிநாடு திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் அருள் பணி செயதவர்கள் தமிழ் மொழிப் புலமையில் ஈடு இணைய இல்லாதவர்கள். மகிபாலன் பட்டி கதிரேசன் செட்டி ஏகே. செட்டியார் சோமலெ கல்கண்டு தமிழ் வாணன் வானதி பதிப்பகம் கவிஞர் கண்ணதாசன் எல்லோரும் உயர்ந்த படைப்பாளிகள். அண்ணாமலை செட்டியார் பல்கலைக் கழகத்தை நிறுவி விபுலானந்த அடிகள் மற்றும் தமிழ் அறிஞர்கள் தமிழ் பாடம் எடுத்து எண்ணில் அடங்காத தமிழ் அறிஞர்களை நமக்கு கல்விப் பணிக்கு அனுப்பி தமிழ் இலக்கிய ஆர்வத்தை மேமபடித்தினர் கண்ணதாசன் ஆழ்ந்த புலமை நமக்கு கிடைத்த பாக்கியம்,

  • @rajendranthenappan834
    @rajendranthenappan8345 ай бұрын

    மனதில் பதிகின்ற பாடல்கள் எவ்வளவு ஆழமான கருத்துப்பெட்டகம் கவிஞ்கருக்கு நன்றிகள்

  • @shobanabalan4534
    @shobanabalan45344 ай бұрын

    லட்சுமி தாயே என் இல்லத்தில் நீ குடியேற வேண்டும்

  • @narayananganesh7389
    @narayananganesh73892 жыл бұрын

    ஓம் அம்மா மகாலட்சுமி தாயே போற்றி. ஓம் அம்மா மகாலட்சுமி தாயே போற்றி போற்றி. ஓம் அம்மா மகாலட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி... ஓம் அம்மா மகாலட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி.... ஓம் அம்மா மகாலட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி.....

  • @iyappanavk7387
    @iyappanavk7387 Жыл бұрын

    Nandrigal Mahaperiava ambahavaha ambahavaha kavingar kannadasan Aadhishanker swamigal🙏

  • @kamarajs6021
    @kamarajs6021 Жыл бұрын

    எங்கள் கவிஞரை நலமாய் பார்த்துக்கொள்ளுங்கள்

  • @user-kj8iv3dw4k
    @user-kj8iv3dw4k6 күн бұрын

    அருமையான பாடல் வரிகள் கேட்கும் தோறும் பக்தியும் இன்பமும் மனதில் தோன்றும் அண்ணலர் கமலம் போன்ற போற்றி ோற்றி

  • @dhanalakshmisenthil5899
    @dhanalakshmisenthil58993 жыл бұрын

    பாடல் வரிகள் 2 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன மற்றவை தந்தால் சிறப்பாக இருக்கும்

  • @karthikaanbu4210

    @karthikaanbu4210

    3 ай бұрын

    இந்தப் பாடலின் வரிகள் கூகுளில் விக்கிமூலம் என்ற லிங்கை தொட்டவுடன் அதில் பாடல் வரிகள் உள்ளன

  • @karthikaanbu4210

    @karthikaanbu4210

    3 ай бұрын

    முதலில் பாடலின் தலைப்பு எழுதி கூகுளில் செக் பண்ணி பிறகு

  • @gokulraj733
    @gokulraj7333 жыл бұрын

    Thanks for uploading this. I used to read this daily. Hearing this in vocal version is great. Thanks again.

  • @369balas

    @369balas

    3 жыл бұрын

    Such a soulful rendition! Great translation of Adi Sankarar's by Kaviyarasar Kannadasan.

  • @vrmeenal5622

    @vrmeenal5622

    Жыл бұрын

    @@369balasKatyyyk CY kanthanlthscab🏫v many ju

  • @pappasubammal2251

    @pappasubammal2251

    Жыл бұрын

    ​@@vrmeenal5622p,, CT

  • @rangisiva9356
    @rangisiva93562 жыл бұрын

    அருமையான பாடல். பதிவேற்றியதிற்கு நன்றி!

  • @Thavamani427
    @Thavamani4272 ай бұрын

    இந்த பாடலைதினமும் பாடிவருவதால் கஷ்டங்கள் குறைந்துவருகிறது.நன்றி.அனைலருக்கும்கஷ்டங்கள்குறைய இந்தபாடலை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • @narasimhank7967
    @narasimhank79673 жыл бұрын

    தேடித் தேடிக் கிடைத்துவிட்டது. பாடி ப்பாடிவறுமைகெட்டது.பாட்டு கேட்கும் போதுபாடல்வரிகள்திரையில்நகர்ந்துவருவதுபோலகாட்சிஅளித்தால்கண்ணும்காதும்நெஞ்சும்சங்கமிக்கும்.இசை அருமை.குரல்இனிமை.காந்தி கண்ணதாசன் மனம்வைக்கவேண்டும்.இன்று நல்ல நாள்.நன்றி. வணக்கம்.

  • @shunmugamcr4334
    @shunmugamcr43343 жыл бұрын

    Please make this the Official version. Add scrolling lines of the lyrics to enhance the experience. Thank you.

  • @kaaviyasubramaniam3018

    @kaaviyasubramaniam3018

    3 жыл бұрын

    Thank you very happy

  • @kannadasanpathippagam

    @kannadasanpathippagam

    3 жыл бұрын

    Working on it..

  • @thenmozhir3061

    @thenmozhir3061

    3 жыл бұрын

    Thank you veryhappy

  • @sivasankarr1859

    @sivasankarr1859

    3 жыл бұрын

    Mikka mandir Ellorum began para lyrics kodungal plese

  • @rengasamyr880

    @rengasamyr880

    2 жыл бұрын

    @@kannadasanpathippagam atleast பாடியவர் பெயர் சொல்லவும்..இனிமையான குரல்..

  • @murugananthi8482
    @murugananthi84823 жыл бұрын

    நிம்மதி யாய்எந்தபக்திப் பாடலும் கேட்க முடியவில்லை

  • @ammunnibalasubramanman3614
    @ammunnibalasubramanman36143 жыл бұрын

    A genius, Tamil annai embraced. We are fortunate to have such a person.

  • @naguleshwararajv4500
    @naguleshwararajv45002 жыл бұрын

    என்ன அற்புதமான தெய்வீக பாடல்

  • @sriagathiyarsidha
    @sriagathiyarsidha2 ай бұрын

    பாடல் வரிகளையும் சேர்த்தால் மிகவும் நல்லது. புண்ணியங்கள் கோடி உங்களுக்கு.

  • @selvadhanish153
    @selvadhanish1532 ай бұрын

    10 ஆக்கலும் அழித்தல் காத்தல் அருள்நிறை இறைவன் சக்தி! அன்னவன் தோளில் நீயே அனைத்துமாய் விளங்கும் சக்தி! ஆக்கலில் வாணி யாவாய்; அளித்தலில் திருவாய் நிற்பாய்; அழிக்கின்ற வேளை வந்தால் அந்தமில் துர்க்கை யாவாய்! தீக்கொண்ட கரத்து நாதன் திருப்பரா சக்தி யாக திரிபுரம் ஏழு லோகம் திருவருள் புரிந்து நிற்பாய்! வாக்குயர் கமலச் செல்வி வாடைநீ, தென்றல் நீயே! வளமென இரப்போர்க் கெல்லாம் வந்தருள் புரிகின் றாயே! 11 வேதத்தின் விளைவே போற்றி! வினைப்பயன் விளைப்பாய் போற்றி! சீதத்தா மரையே போற்றி! செம்மைசேர் அழகே போற்றி! கோதைப்பண் புடையாய் போற்றி! குளிர்ந்தமா மழையே போற்றி! ஓர்தத்து வத்தில் நிற்கும் உமையவள் வடிவே போற்றி! பாதத்தைக் கமலம் தாங்கப் பல்லுயிர் காப்பாய் போற்றி! நாதத்து நெடியோன் கொண்ட நங்கைநீ போற்றி! போற்றி! பாதத்தில் சிரசை வைத்துப் பணிகின்றேன் போற்றி! போற்றி! மாதத்தில் ஒருநாள் கூட மறந்திடாய் போற்றி! போற்றி! 12 அன் றலர் கமலம் போன்ற அழகிய வதனி போற்றி! அலைகடல் அமுத மாக அவதரித் தெழுந்தாய் போற்றி! குன்றிடா அமுதத் தோடு கூடவே பிறந்தாய் போற்றி! குளிர்ந்தமா மதியி னோடும் குடிவந்த உறவே போற்றி! மன்றத்து வேங்க டேசன் மனங்கவர் மலரே போற்றி! மாயவன் மார்பில் நின்று மயிலெனச் சிரிப்பாய் போற்றி! என்றைக்கும் நீங்கா தாக இருக்கின்ற திருவே போற்றி! எளியவன் வணங்கு கின்றேன் இன்னருள் போற்றி! போற்றி! 13 தாமரை மலரில் நிற்கும் தளிரன்ன திருவே போற்றி! தாமரை வதனங் கொண்ட தங்கமா மணியே போற்றி! தாமரை கரத்தில் ஏந்தித் தவமென நிற்பாய் போற்றி! தாமரைக் கண்ணான் காக்கும் தரணியைக் காப்பாய் போற்றி! தாமரை போல வந்த தவமுனி தேவர்க் கெல்லாம் தாமரைக் கைகள் காட்டி தயைசெயும் திருவே போற்றி! தாமரைக் கண்ணால் செல்வம் தந்தருள் புரிவாய் போற்றி! தாள், மறை, நானோ வார்த்தை; தர்மமே போற்றி! போற்றி! 14 பெண்ணெனப் பிறந்தா யேனும் பெரும்திறன் கொண்டாய் போற்றி! பிருகுவம் சத்தில் வந்த பீடுடை வதனம் போற்றி! தண்ணளி வேங்க டத்தான் தழுவிடும் கிளியே போற்றி! தத்துநீர்க் குளத்தில் ஆடும் தருணியே லக்ஷ்மீ! போற்றி! சித்திரக் கொடியே போற்றி! செம்மணி நகையே போற்றி! ஸ்ரீதரன் திருப்பா தங்கள் சேவைசெய் குயிலே போற்றி! பத்தினிப் பெண்டிர் தம்மைப் பார்வையில் வைப்பாய் போற்றி! பக்தருக்(கு) அருள்வாய் போற்றி! பணிந்தனம் போற்றி! போற்றி! 15 கண்களைப் பறிக்கும் காட்சி கவிந்தநின் வடிவம் போற்றி! கமலப்பூ வதனம் போற்றி! கமலமா விழிகள் போற்றி! மண்ணிலும் விண்ணு ளோர்க்கும் மங்கலம் நிறைப்பாய் போற்றி! மண்டல இயக்கத் திற்கே மந்திர(ம்) ஆனாய் போற்றி! விண்ணவர் வணங்கும் தேவி விந்தையின் மூலம் போற்றி! விரிமலர் கண்ணன் தேவன் விரும்பிடும் நகையே போற்றி! எண்ணிய படியே உன்னை ஏத்தினேன் போற்றி! போற்றி! இசைபட வாழ வைப்பாய் இலக்குமி போற்றி! போற்றி! 16 மைவழிக் குவளைக் கண்ணாய் வரையிலாத் திருவே போற்றி! வானவர் மண்ணோர்க் கெல்லாம் வணக்கமாய் நின்றாய் போற்றி! மெய்விழி செவிவாய் நாசி விழைத்திடும் இன்பம் போற்றி! விரித்தமேற் புலனுக் கெல்லாம் விளங்காத பொருளே போற்றி! கைநிறை செல்வம் யாவும் கடைக்கண்ணால் அருள்வாய் போற்றி! காக்கையை அரச னாக்கும் கைமலர் உடையாய் போற்றி! செய்ததீ வினையை எல்லாம் தீர்க்கின்ற நெருப்பே போற்றி! சிறுமையைப் பெருமை யாக்கும் திருப்பதம் போற்றி! போற்றி! 17 மோகனன் துணையே போற்றி! முழுநில வடிவே போற்றி! மூவுல கங்கள் தேடும் முதற்பெரும் பொருளே போற்றி! தேகத்தே ஒளியை வைத்த செம்மணிக் குன்றே போற்றி! தீராத ஆசைக் குள்ளே திருவென நிற்பாய் போற்றி! ஓர்கணம் தொழுதாற் கூட ஓடிவந் தளிப்பாய் போற்றி! ஊர்ந்தமா மேக வண்ணன் உவப்புறச் சிரிப்பாய் போற்றி! தாள்களில் பணிந்தே னம்மா தண்ணருள் தருவாய் போற்றி! தலைமுதல் பாதம் மட்டும் தாழ்கின்றேன் போற்றி! போற்றி! 18 கண்பட்டால் மனது பாடும் கார்குழல் அலையே போற்றி! காதள வோடும் கண்ணால் காசினி அளந்தாய் போற்றி! வெண்பட்டால் அழகை மூடும் வியத்தகும் சிலையே போற்றி! வெண்மல்லி கைப்பூ மாலை விளையாடும் தோளீ போற்றி! பண்பட்டார் இல்லா தார்தம் பக்குவம் அறிவாய் போற்றி! பணிபவர் இதயத் துள்ளே பாசுரம் படிப்பாய் போற்றி! விண்முட்டும் ஞானம் பெற்ற வேதநா யகியே போற்றி! வேயிறு தோளின் சக்தி விரித்தருள் போற்றி! போற்றி! செல்வகுமார்/நெய்வேலி/சிங்கப்பூர்

  • @ponugam
    @ponugam17 күн бұрын

    எங்கள் கடன்கள் அனைத்தும் தீர்ந்து செல்வவளத்துடன் இருக்க வேண்டும் தாயே

  • @kannangk7702
    @kannangk77023 ай бұрын

    Kavi அரசர் திரு. கண்ணதாசன் lives forever

  • @balrajkandasamy3891
    @balrajkandasamy38913 жыл бұрын

    Such a beautiful lyrics and nicely recited that I am totally immersed for entire 21 minutes even after listening this for more than 20 times. We are very fortunate to have this. My heartfelt and sincere thanks.

  • @eswarisanthanam2687

    @eswarisanthanam2687

    2 жыл бұрын

    ஸத்

  • @jothidhinakaran8455

    @jothidhinakaran8455

    2 жыл бұрын

    Super voice🙏🙏🙏

  • @panneerselvam7208

    @panneerselvam7208

    Жыл бұрын

    My name is p.deepak your song super cool

  • @maligamano6086

    @maligamano6086

    11 ай бұрын

    .

  • @sankarikalyanasundaram9854
    @sankarikalyanasundaram98544 ай бұрын

    Intha padalin varigalai Tamilil display seidhal romba nalla irukum

  • @loganayakirajendren2529
    @loganayakirajendren25292 жыл бұрын

    மிகவும் பிடித்த பாடல்

  • @venkatramambujavalli7164

    @venkatramambujavalli7164

    2 жыл бұрын

    இனிமையான குரலிசை அருமையான பாடல் மிகவும் உணர்வு பூர்வமாக பாடுகிறார் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஓம் ஸ்ரீம் மஹாலட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி

  • @gandhimedhi6950
    @gandhimedhi69503 жыл бұрын

    தமிழில் வரிகள் வந்தால் இன்னும் நன்றாக இருக்கும் நாங்கள் கூட சொல்ல நன்றி

  • @kaalipriya1234

    @kaalipriya1234

    3 жыл бұрын

    தமிழில் தான் வரிகள் உள்ளன சகோ

  • @gandhimedhi6950

    @gandhimedhi6950

    3 жыл бұрын

    Lyrics sir

  • @poorani3689

    @poorani3689

    3 жыл бұрын

    ஹாஹா

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn2 жыл бұрын

    அற்புதமான பாசிடிவ் வரிகள் தத்ரூபமாக மகாலட்சுமி கடாச்சம் கிடைக்கும்

  • @murugananthi8482
    @murugananthi84823 жыл бұрын

    விளம்பரங்கள் இருந்தால் தான்பக்திகூட விலையாகிறதோ

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 Жыл бұрын

    மஹாலஷ்மி போற்றி போற்றி!

  • @murugananthi8482
    @murugananthi84823 жыл бұрын

    விளம்பரங்கள் இடையூராக இருக்கின்றதே

  • @rameshs3788
    @rameshs37888 күн бұрын

    லட்சுமி தாயே கடன் பிரச்சினை இருந்து காப்பாத்து தாயே

Келесі