கண் காட்டு நுதலானும் | மகப்பேறு அருளும் திருப்பதிகம் | திருஞானசம்பந்த சுவாமிகள் | ஷ்ரவன் கலை

Музыка

காவிரிக் கரையில் உள்ள ஆறு சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவெண்காடு தலமும் ஒன்றாகும். மற்றவை திருவையாறு, திருசாய்க்காடு (சாயாவனம்), திருவிடைமருதூர், திருவாஞ்சியம் மற்றும் மயிலாடுதுறை ஆகும்.
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அக்கினி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், என்னும் முக்குளங்களிலும் முறையே நீராடி மூலவர் சுவேதாரண்யேஸ்வரை வழிபட்டால் பெரும் பலனும் நன்மக்கட்பேறும் இறைவன் அருளால் கிடைக்கும். திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகங்கள் ஒன்றின் இரண்டாவது பாடலில் இதை குறிப்பிடுகிறார்.
திருமுறை : இரண்டாம் திருமுறை 048 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
இசை - ஷ்ரவன் கலை
பாடியவர்கள் - ஷ்ரவன் கலை & கோல்டு தேவராஜ
Lyrical Video - Shravan Kalai
🎧Kindly use headphones for a better experience
Looking forward for all your love and support😀😀
திருச்சாய்க்காட்டில் பதிகங்கள் பாடி வழிபட்ட திருஞானசம்பந்தர், இறைவர் எழுந்தருளி இருக்கும் திருவெண்காட்டினைப் பணியப் புறப்பட்டார். திருவெண்காட்டில் உள்ள தொண்டர்கள், பிள்ளையாரை வரவேற்று, அழைத்துக்கொண்டு அந்நகரத்துள் புகுந்தனர். பிள்ளையார் திருக்கோபுரத்தைத் தாழ்ந்து வணங்கி, உட்சென்று திருக்கோயிலை வலம் வந்து, இறைவரின் திருமுன்பு சென்று, நிலம் பொருந்த விழுந்து தொழுது, பணிந்து போற்றியது இத்திருப்பதிகம்.
கண் காட்டும் நுதலானும் கனல் காட்டும் கையானும்
பெண் காட்டும் உருவானும் பிறை காட்டும் சடையானும்
பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே. ..... (01)
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ளம் நினைவு
ஆயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்
வேயன தோளுமை பங்கன் வெண்காட்டு முக்குள நீர்
தோய் வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே. ..... (02)
மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதி இரவி
எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண்திசையும்
பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே. ..... (03)
விடமுண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக் கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே. ..... (04)
வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி வண் சாந்தால் வழிபடு நன்மறையவன் தன்
மேலடர் வெங்காலன் உயிர் விண்ட பினை நமன் தூதர்
ஆலமிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவரே. ..... (05)
தண்மதியும் வெய்யரவும் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர் கூறு உகந்தான் உறைகோயில்
பண்மொழியால் அவன் நாமம் பல ஓத பசுங்கிள்ளை
வெண்முகில் சேர் கரும்பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே. ... (06)
சக்கரம் மாற்கு ஈந்தானும் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரை மேல் அசைத்தானும் அடைந்து அயிராவதம் பணிய
மிக்கதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும் வினை துரக்கும்
முக்குளம் நன்கு உடையானும் முக்கணுடை இறையவனே. ..... (07)
பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள் செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல் முழங்க
விண்மொய்த்த பொழில் வரிவண்டு இசை முரலும் வெண்காடே. ... (08)
கள்ளார் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
வெள்ளானை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று
உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே. ..... (09)
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்கள் அவர் பிரிமின் அறிவுடையீர் இது கேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர் வியன்திரு வெண்காட்டான் என்று
ஓதியவர் யாதுமொரு தீதுலர் என்று உணருமினே. ..... (10)
தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ் ஞானசம்பந்தன்
விண்பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
பண்பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலியப் புகுவாரே. ..... (11)
Check out my social media handles:
KZread: / shravankalai
Instagram: / shravan_kalai
Facebook: / shravan.kalai
Twitter: / shravankalai

Пікірлер: 31

  • @amalantrendscorner1606
    @amalantrendscorner1606Ай бұрын

    செய்யுள் இசை வடிவில் அதன் தன்மை மேலும் மெருகு கூடி இந்த காலத்தில் பிறந்து நாங்கள் கேட்டு பாக்கியம் பெற்றோம் நன்றி 🎉🎉

  • @Shravankalai

    @Shravankalai

    Ай бұрын

    நன்றிகள் 😊🙏🏻

  • @eshwar1506
    @eshwar150610 ай бұрын

    Thank you Lord for your special mercy on me...... Your name alone be praised my Lord..... ஓம் நமச்சிவாய

  • @CyberSecgalaxy
    @CyberSecgalaxy7 ай бұрын

    This song gives great divine vibe ஓம் நமசிவாய ❤😍🥺😢🔱💥

  • @Shravankalai

    @Shravankalai

    7 ай бұрын

    Thank you😊🙏

  • @amalantrendscorner1606
    @amalantrendscorner1606Ай бұрын

    வாழ்த்துக்கள்

  • @Shravankalai

    @Shravankalai

    Ай бұрын

    நன்றி☺🙏

  • @vivekmanoharan3877
    @vivekmanoharan38772 жыл бұрын

    Soul touching stuff ! So Intense & raw. The chants, the voice, & the music (especially the piece 0:36 to 0:46 ) takes you somewhere & does something :)

  • @Shravankalai

    @Shravankalai

    2 жыл бұрын

    Thank you 😊

  • @lakshmimanoharan9967
    @lakshmimanoharan99672 жыл бұрын

    Heart melting music and voice.

  • @Shravankalai

    @Shravankalai

    2 жыл бұрын

    Thank you 😊

  • @vijayalakshmi.2894
    @vijayalakshmi.289410 ай бұрын

    Music gives peace🙏Nice... Keep Rocking 💥

  • @Shravankalai

    @Shravankalai

    10 ай бұрын

    Thank you😊🙏🏻

  • @amalantrendscorner1606
    @amalantrendscorner160629 күн бұрын

    இந்த பாடல் பெரும் இசை தாகத்தை ஏற் படுத்துகின்றது 2வருடம் முன்பே இப்படி இன்னும் பல பாடல்கள் இறைவனின் கருணையால் தங்கள் இசை வடிவில் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ❤❤❤❤

  • @Shravankalai

    @Shravankalai

    29 күн бұрын

    இறைவன் அருளும், தங்களைப் போன்ற அன்பு உள்ளங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களும் என்னை மேன்மேலும் இது போன்ற படல்களை உருவாக்க உத்வேகப்படுத்தும். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 😊🙏🏻

  • @user-dp5cy1xn5t
    @user-dp5cy1xn5t2 жыл бұрын

    🔥🔥🔥🔥

  • @Shravankalai

    @Shravankalai

    2 жыл бұрын

    🙏🙏😊😊

  • @senthilshares1306
    @senthilshares13062 жыл бұрын

    Good

  • @NRRaajaa
    @NRRaajaa2 жыл бұрын

    👍🏻👍🏻

  • @Shravankalai

    @Shravankalai

    2 жыл бұрын

    🙏🙏😊

  • @magi024
    @magi0242 жыл бұрын

    👍👍👍👍

  • @Shravankalai

    @Shravankalai

    2 жыл бұрын

    🙏🙏😊

  • @vadivarasus9901
    @vadivarasus99012 жыл бұрын

    மிக அருமை பாஸ். இருவருக்கும் வாழ்த்துகள்.. :)

  • @Shravankalai

    @Shravankalai

    2 жыл бұрын

    நன்றிகள் boss😍😍

  • @krishnansivakarthikeyan3143
    @krishnansivakarthikeyan3143Ай бұрын

    Great attempt. Very nice effort on great sound quality. Tamil Subtitle is useful. Good pronunciation. Thanks for trying to stick to the originality.

  • @Shravankalai

    @Shravankalai

    Ай бұрын

    Thank you😊🙏🏻

  • @manimegalaisankaran646
    @manimegalaisankaran646 Жыл бұрын

    Beautiful. Please upload Sivan. Pachai and Kolaru. Pathigam also. And Shivpuranam

  • @Shravankalai

    @Shravankalai

    Жыл бұрын

    Sure and thank you 😊🙏

  • @gowrysraj
    @gowrysraj Жыл бұрын

    Arumaiyana isai.. anna...

  • @Shravankalai

    @Shravankalai

    Жыл бұрын

    Thank you 😊

Келесі