திறந்தாச்சு பகல் நேர முதியோர் பராமரிப்பு மையம்! | Geriatric Day Care Centre @ Chennai

பகல் நேர முதியோர் பராமரிப்பு மைய தொடக்க விழா!
கூட்டுக் குடும்பம் உடைந்து வரும் சூழ்நிலையில் பல முதியோர்கள் தனியாக வசிக்கிறார்கள். தனிமையில் இருப்பவர்களுக்கு முதுமையின் விளைவுகள் ஆறு மடங்கு அதிகரிக்கும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. தொடர்ந்து தனிமையில் இருப்பவர்களுக்கு மனச்சோர்வும் மறதி நோய் ஏற்படும் அபாயமும் அதிகமாகும். தேவையான உடற்பயிற்சி இல்லாததால் உடற்பருமன் ஏற்படும். அது நீரிழிவு, இதய நோய் மற்றும் மூட்டு நோய் போன்ற பல பிரச்னைகளுக்கு வித்திடும்.
முதியோர்களுக்குக் குறிப்பாகப் பகல் வேளையில், உயிருக்கும் உடைமைக்கும் தக்க பாதுகாப்பு இல்லாததால் ஒருவித பயத்தோடுதான் நாட்களை நகர்த்தி வருகிறார்கள். இதுபோன்ற அனைத்துப் பிரச்னைகளுக்கும் உதவ தொடங்கப்பட்டதுதான் ‘பகல் நேர முதியோர் பராமரிப்பு மையம்’.
இச்சிறப்பு மையத்தை முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் அவர்கள் 2022 ஏப்ரல் 13 அன்று திறந்து வைத்தார். மருத்துவர் சு.தில்லைவள்ளல், மருத்துவ இயக்குநர் மற்றும் இதய நோய் நிபுணர், வெங்கடேஸ்வரா மருத்துவமனை, தியாகி லஷ்மிகாந்தன் பாரதி மற்றும் மூத்த திரைப்பட இயக்குநர் திரு.எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இளைய தலைமுறையினர் அலுவலகம் செல்லும்போது முதியோர்களை வீட்டிலேயே தனியாக விட்டுவிட்டு அவர்கள் எப்படி இருக்கிறார்களோ, தவறாமல் சாப்பிட்டார்களா என்கிற கவலையுடன் அலுவலகத்தில் வேலை பார்ப்பார்கள். அந்தக் கவலை இனி வேண்டாம். அவர்களை நம் மையத்தில், காலையில் அலுவலகம் போவதற்கு முன்பு சேர்த்துவிட்டு மாலை வீடு திரும்பும்போது அழைத்துச் செல்லலாம். நாங்கள் அவர்களை அன்புடன் நன்றாகக் கவனித்துக்கொள்வோம்.
இம்மையத்தின் சேவைகள்
உடல்நலம் பேணுதல்
இம்மையத்தில் காலை 7:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை முதியோர்கள் தங்கிப் பின்வரும் வசதிகளைப் பெற்றுப் பயனடையலாம். இம்மைய உறுப்பினர்களுக்குத் தினமும் உடல் பரிசோதனை, உயர் ரத்த அழுத்தப் பரிசோதனை மற்றும் இயன்முறை சிகிச்சையளிக்கப்படும்.
மனநலம் பேணுதல்
அவர்களின் மனநலம் பேண, மனநல ஆலோசனைகளையும் இலவசமாகப் பெற்றுப் பயனடையலாம். காலையில் சிறு குழுவாகப் பிரிந்து சிறு சிறு விளையாட்டுகளின் மூலம் பொழுதை மகிழ்ச்சியுடன் கழிக்கலாம். இங்கு தொலைக்காட்சி வசதியும் உண்டு. இங்குள்ள நூலகத்தில் ஆன்மிகம், சரித்திரம், உடல் நலம், மன நலம் மற்றும் நகைச்சுவை சார்ந்த நூல்களும் இடம் பெற்றுள்ளன.
தடுப்பூசி போடுதல்
முதியோர்களுக்குத் தேவைப்படும் நிமோனியா, இன்ஃப்ளுயன்சா, டெட்டனஸ் போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்படும்.
சிறப்புச் சொற்பொழிவு
முதியோர்களுக்குத் தகுந்த மதிய உணவு வழங்கப்படும்.
மதிய ஓய்வுக்குப் பின்னர் மாலையில் தினமும் பல துறையைச் சார்ந்த சிறப்பு மருத்துவர்களின் சொற்பொழிவு நடைபெறும். முதியோர்கள் அவர்களின் இல்லத்துக்கு மாலையில் சென்றுவிடலாம். தேவைப்படுவோருக்கு வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்படும்.
இம்மையம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும்.
குறுகிய மற்றும் நீண்ட காலப் பராமரிப்புச் சேவை
திருமண விழா, கோயிலுக்குச் செல்வது மற்றும் சுற்றுலா செல்வது போன்ற சூழல்களில் இம்மையத்தில் சேர்த்துவிட்டால், அந்தக் குறிப்பிட்ட நாள்களில் முதியோர்களை நன்கு கவனித்துக்கொள்வோம். வெளிநாடு செல்லும்போது அப்பா, அம்மா அல்லது தாத்தா, பாட்டியைத் தனியாக விட்டுவிட்டுப் போக வேண்டாம். நீங்கள் வரும்வரை இந்த மையம் நன்றாகக் கவனித்துக்கொள்ளும்.
டிமென்சியா, உதறுவாதம் என்கிற பார்க்கின்சன்ஸ் நோய், மூட்டு வலி மற்றும் புற்று நோய் போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு நீண்டகாலப் பராமரிப்பு அவசியம். அவர்களை வீட்டில் உள்ளவர்கள் கவனித்துக்கொள்வதைப் போலவே இங்குள்ள செவிலியர்களும் டாக்டர்களும் நன்றாகக் கவனித்துக் கொள்வார்கள். ஆகையால், முதியோர்களை எங்களிடம் சேர்த்துவிட்டு நீங்கள் கவலையின்றி நிம்மதியாக இருக்கலாம். உங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் எங்கள் சேவை அமையும்.
மேலும் விவரங்களுக்கு:
திரு. பாலச்சந்தர், செல்: 72996 77700

Пікірлер: 58

  • @raghavandesikan6170
    @raghavandesikan61702 жыл бұрын

    மிக மிக அருமையான ஒரு பெரும் முயற்சி நிச்சயமாக உதவிகரமாக இருக்கும் பணம் பணம் அலையும் பெருவாரியான மக்களின் மனநிலையில் இதுமாதிரியான விஷயம் மிகவும் உற்சாகம் கொடுக்கும் நிகழ்ச்சி தனது இல்லத்தை இப்படி ஒரு கைங்கரியம் பண்ணும் இந்த உத்தம அதி உத்தம மனித தெய்வத்துக்கு சாஷ்டாங்க நமஸ்காரங்கள்

  • @100shanmuga
    @100shanmuga Жыл бұрын

    A wonderful platform to take care of elderly people.. A new concept and a most needed for the welfare of elderly people

  • @shaikfareed6579
    @shaikfareed6579 Жыл бұрын

    A great pioneering effort. Not profit based. Nowhere one can find such a centre. It should pave way for similar efforts in other parts of Tamilnadu. Thanks for Dr. Thillai Vallal.

  • @aruljothen.k1647
    @aruljothen.k16472 жыл бұрын

    Great start God bless

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan62412 жыл бұрын

    மிக பெரிய உதவி, வாழ்த்துக்கள் 🙏🙏

  • @malathinarayanan233
    @malathinarayanan2332 жыл бұрын

    What a great service. Iam sure many Will be benefited.

  • @ananthrammelodies
    @ananthrammelodies2 жыл бұрын

    Congratulations Dr Thillai vallal and Dr V S Natarajan

  • @GandhiKarunanidhi
    @GandhiKarunanidhi2 жыл бұрын

    இனிது.. பாராட்டுகள்..

  • @prsahoo2
    @prsahoo22 жыл бұрын

    Service to mankind is service to God!!!

  • @malathip58
    @malathip58 Жыл бұрын

    இப்படி ஒரு அருமையான ஏற்பாட்டினை ஏற்படுத்தியிருப்பது முதியோர்களுக்கு கிடைத்த வரப்ரசாதம். துறைசார்ந்த அத்துணை நல்லுள்ளங்களையும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். பாட்டு கேட்பது மனதுக்கு இதம் எனினும் கூறப்படும் விஷயங்கள் சரியாகக் கேட்கவில்லை. பாட்டின் சப்தம் குறைந்து ‌பேச்சு தெளிவாகக் கேட்கப் பட்டால் இன்னும் தெளிவாக இருக்கும் என்பது தாழ்மையான கருத்து. மனதில் பட்டதைச் சொல்லியுள்ளேன்.

  • @nalanikalaivanan4344
    @nalanikalaivanan43442 жыл бұрын

    Very very great service . Sincere Thanks to Dr. Thillaivallal and Dr.Natarajan Sir

  • @100shanmuga
    @100shanmuga Жыл бұрын

    I am glad to see my friend Mr.Rajasekaran Manimaran who is known in the trade for his excellence in service and bringing togetherness

  • @poongaatru

    @poongaatru

    Жыл бұрын

    Thank you Sir. We can start these facilities in your area too!

  • @jayashreekannan3213
    @jayashreekannan32132 жыл бұрын

    💐💐Wonderful, noble service, God bless ❣

  • @ramahsridharen4331
    @ramahsridharen43312 жыл бұрын

    Very much appreciated for your services

  • @PuduvaiUlla
    @PuduvaiUlla2 жыл бұрын

    உண்மையில் சிறப்பான விசயம்.. வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்..

  • @sugunaramamoorthy9257

    @sugunaramamoorthy9257

    2 жыл бұрын

    🔥🔥🔥

  • @padmajamohan6666
    @padmajamohan66662 жыл бұрын

    Great service 👌🙏👍👏

  • @veeragandhinagu9662
    @veeragandhinagu96622 жыл бұрын

    Hatsoff.,great efforts.congrats...

  • @chinnamaruthu3988
    @chinnamaruthu39882 жыл бұрын

    Best wishes. Its a need of the hour for elders.

  • @meenalochenir4817
    @meenalochenir48172 жыл бұрын

    Noble thought. Hats off to you. Vazhga Valamudan

  • @vanajaramaswamy7678
    @vanajaramaswamy76782 жыл бұрын

    God bless the good hearts

  • @malaradhakrishnani8822
    @malaradhakrishnani88222 жыл бұрын

    வாழ்க! வாழ்க! வாழ்க!

  • @vasukikrishn
    @vasukikrishn2 жыл бұрын

    Hats off to Thiruvallal🙏🙏 and others who are part of it Pray to God to bless you all with looong and healthy life

  • @drsmilezdental
    @drsmilezdental2 жыл бұрын

    Wonderful Sir

  • @Mano-ky6ip
    @Mano-ky6ip2 жыл бұрын

    Congratulations 🎉🦋🎉

  • @venkatanathans2643
    @venkatanathans26432 жыл бұрын

    It gives immense pleasure to know that there are some noble souls amongst us to dedicate their life to such a service to the old and sick. The governments with all the resources at is command to should have come up with such an institution. Alas their priorities are different. Public at large should help these private institution to sustain to provide uninterrupted service. Pray the almighty to bless those involved in this project/service a long healthy life and great success in their endeavor. 🙏

  • @poongaatru

    @poongaatru

    2 жыл бұрын

    Thank you for your kind words Sir.

  • @jayarajanful

    @jayarajanful

    2 жыл бұрын

    பயனுள்ள போற்றத்தக்க சேவை..தொடரட்டும் உங்கள் பணி. எங்கள் அன்பு வாழ்த்துக்கள்...

  • @baanumathyravikumar835
    @baanumathyravikumar8352 жыл бұрын

    Excellent All the bedt

  • @sumanapremkumar582
    @sumanapremkumar5822 жыл бұрын

    God bless you

  • @jayashreedasarathan8739
    @jayashreedasarathan87392 жыл бұрын

    Hearty congratulations sir to you and your team.Very very rare to see such types of people.kudos to all of you.Iam very sure this institution going to reach very great heights.much needed one for the society.felt very happy to see the video and subscribed immediately

  • @banumathij2999

    @banumathij2999

    2 жыл бұрын

    Great service . Get blessing of all senior citizens, the whole team. We see God in all of you.

  • @babulakshmanan2657
    @babulakshmanan26572 жыл бұрын

    Most wanted facility in present days. My hearty congratulations to all the organisers. Can you please let me know, as to how to subscribe to Poongattru?

  • @poongaatru

    @poongaatru

    2 жыл бұрын

    Thank you for your interest in 'mudhumai enum poongaatru' Tamil monthly magazine exclusively for elders. Pls contact Karthik @ 97908 74704 for details

  • @Taehyungkpoop7
    @Taehyungkpoop72 жыл бұрын

    ᴠᴏᴡ ᴠᴇʀy ɢʀᴇᴀᴛ

  • @parvathysruthilaya
    @parvathysruthilaya2 жыл бұрын

    Good service sir valthukal valthukal

  • @poongaatru

    @poongaatru

    2 жыл бұрын

    Thank you madam

  • @kalavathyj8953
    @kalavathyj8953 Жыл бұрын

    Great Doctor. Wonderful &useful concept. I pray to God for success in all your efforts.

  • @poongaatru

    @poongaatru

    Жыл бұрын

    thank you so much mam

  • @shobhanaren27
    @shobhanaren272 жыл бұрын

    The bgm is so loud, cant hear the doctor speaking out

  • @user-oc9er1dx2z
    @user-oc9er1dx2z2 жыл бұрын

    Very happy.For office going they may not able to attend.They can leave the their parents here.Nothing wrong.

  • @dhanalakshmic4268
    @dhanalakshmic42682 жыл бұрын

    Neenda nal kanavu. Yengal oorilum arampikka udava mudiuma?

  • @krishpadm5170
    @krishpadm51702 жыл бұрын

    Excellent service . Noble endeavour .

  • @yacobug4109

    @yacobug4109

    2 жыл бұрын

    உளமார்ந்த வாழ்த்துக்கள் சார்....

  • @malathym681
    @malathym6812 жыл бұрын

    Congrats Dr. Great deed. Where is this place? Could u please share your address

  • @malathym681

    @malathym681

    2 жыл бұрын

    Sir I asked for the address. Could you please tell me

  • @gopikrishnan2814
    @gopikrishnan28142 жыл бұрын

    Not much useful due to loud background music Very bad production. But a noble service.

  • @jayaramasamy2790
    @jayaramasamy27902 жыл бұрын

    யாரும் இல்லாதவர்கள் முழு நேரமும் தங்கலாமா

  • @poongaatru

    @poongaatru

    2 жыл бұрын

    No madam. This is a paid for, Day care center for elders. Elders can stay for short duration (few weeks to a month)

  • @lakshmik3747
    @lakshmik37472 жыл бұрын

    Please let me have the address

  • @poongaatru

    @poongaatru

    2 жыл бұрын

    No.20, Justice Sundaram Road Mylapore Chennai - 600004 (it is near Sai Baba Temple) Mobile - 97908 74704

  • @jskr3
    @jskr32 жыл бұрын

    Is it a brahmin concern?

  • @thangamanuthangamanu
    @thangamanuthangamanu2 жыл бұрын

    Sir. Vannakkam. ethu. Freeya.

  • @poongaatru

    @poongaatru

    2 жыл бұрын

    Not free Sir/Madam

  • @ranganathana2996

    @ranganathana2996

    2 жыл бұрын

    அருமையான திட்டம்.இதனை நான் ரொம்ப நாட்களாக செய்ய வேண்டி கடவுளை பிரார்த்தனை செய்தேன்.தற்செயலாக வந்துள்ளது. நன்றிகள் பல இதனை ஆரம்பித்தவர்களுக்கு.

  • @geethamami8121
    @geethamami81212 жыл бұрын

    Adress pl

  • @poongaatru

    @poongaatru

    2 жыл бұрын

    No.20, Justice Sundaram Road Mylapore Chennai - 600004 (it is near Sai Baba Temple) Mobile - 97908 74704

Келесі