புத்தகம் எழுதுவது எப்படி? முனைவர் வெ.இறையன்பு அவர்களின் அற்புதமான வழிகாட்டல்..!

How to write a book? How can write a book? Book writing workshop
Dr Iraianbu, IAS., speech on book writing
முனைவர் வெ.இறையன்பு, ஐ.ஏ.எஸ்., Ezhudhuga EZHUDHUGA EZHUTHUGA Ezhuthuga புத்தகம் எழுதுவது எப்படி? முனைவர் வெ.இறையன்புவின் அற்புதமான வழிகாட்டல்...Book writing training programme
சென்னையில் நடைபெற்ற புத்தகம் எழுதப் பயிற்றுவிக்கும் ஒரு நாள் சிறப்பு நேரடிப் பயிலரங்கம். மாணவர்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தவும் மாணவர்களின் படைப்புத்திறனை வெளிக்கொணர்ந்து புத்தகம் படிப்பவர்களைப் புத்தகம் படைப்பவர்களாக உருவாக்கும் உயரிய நோக்கிலும் புத்தகம் எழுதப் பயிற்றுவிக்கும் ஒரு நாள் சிறப்பு நேரடிப் பயிலரங்கம் “எழுதுக” அமைப்பு சார்பில் 20.02.2024 செவ்வாய்க்கிழமை அன்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் நடைபெற்றது.
எழுதுக 2024 - மூன்றாவது அணி தொடக்கம் இதில் தலைமை விருந்தினராக தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் முனைவர் வெ.இறையன்பு, ஐ.ஏ.எஸ்., அவர்கள் கலந்துகொண்டு பயிலரங்கைத் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு புத்தகம் எழுதுவது குறித்து பயிற்சி வழங்கினார்.
பயிலரங்கின் இறுதியில் பேசிய மாணவர்கள், "புத்தகம் எழுதுவது கடினமாக இருக்கும் என நினைத்தேன் இந்த பயிலரங்கம் கலந்து கொண்ட பிறகு அது மிக சுலபம் என நினைக்கிறேன்" இன்று தங்களது நம்பிக்கையான கருத்துகளை வெளிப்படுத்தினர்.
படிக்கும் பருவத்திலேயே மாணவர்கள் மூலம் தரமான புத்தகங்களைச் வெளிக் கொண்டுவரும் உயரிய நோக்கில் நடத்தப்பட்ட இப்பயிலரங்கில் கதை, கவிதை, சிறுகதை, நாவல் என எழுத வேண்டும் என்ற ஆர்வம் உள்ள மாணவ மாணவியர் கலந்து கொண்டு தெளிவு பெற்றனர்.
பயிலரங்கின் போது வழங்கப்பட்ட தலைப்புகளில் மாணவர்கள் உடனுக்குடன் கவிதை எழுதி மேடையேறி வாசித்தது அவர்கள் ஐயமின்றியும் தயக்கமின்றியும் எழுதத் தொடங்கி விட்டதை உணர்த்துவதாக இருந்தது.
"எழுதுக" அமைப்பின் ஆலோசகர் திரு க.ஷண்முகம், சுகுமாறன் & தொடக்கக் கல்வி இயக்குநர் திரு மு.சிவகுமார், கிள்ளிவளவன் வே.கிள்ளிவளவன், ஒருங்கிணைப்பாளர். அலைபேசி: 7009138643 KILLIVALAVAN KILLI VALAVAN
எழுதுக (1st Batch) முதல் அணி :
கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழகம் நெடுகிலும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு புத்தகம் எழுதப் பயிற்சியளித்து மாணவர்களை 100 புத்தகங்கள் எழுதச்செய்து, அப்புத்தகங்கள் அனைத்தும் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சரால் 31.07.2021 அன்று வெளியிடப்பட்டது.
எழுதுக (2nd Batch) இரண்டாவது அணி :
கடந்த 2023ஆம் ஆண்டு “எழுதுக” அமைப்பின் மூலமாக பயிற்சி பெற்ற 150 மாணவர்கள் எழுதிய 150 புத்தகங்கள் மேனாள் தலைமைச் செயலர் முனைவர் வெ.இறையன்பு,ஐ.ஏ.எஸ்., அவர்களால் 11.10.2023 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது.
எனவே இத்தகு ஆர்வமுள்ள மாணவர்களை இந்நிகழ்வில் கலந்து கொள்ளச் செய்யுமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறோம். இதில் கலந்து கொள்ள எந்தவொரு கட்டணமும் இல்லை.புத்தகம் எழுத வேண்டும் என்ற ஆர்வம்,புத்தக வாசிப்பு பழக்கம், தன்னைச் சுற்றி நடப்பவற்றை கவனித்தல்,
கதை சொல்லுதல், கடின உழைப்பு /ஒழுக்கம் ஆகிய தகுதிகள் மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது.

Пікірлер: 10

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821Ай бұрын

    திரு இறையன்பு ஐ ஏ எஸ் அவர்கள் நமது தமிழ் நாட்டிற்குக் கிடைத்த பொக்கிஷம் எனக்கு மிகவும் பிடித்த உயர்ந்த மனிதர் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள் நன்றி அய்யா

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam62032 ай бұрын

    'சுற்றிலும் நடக்கும் ஊழல் அநியாயத்தைப் பார்த்துகொண்டு சும்மாயிருந்து பதவியில் சுயநலமாக முன்னேறியது எப்படி " என்றும் எழுதலாம்!

  • @ramasundaramkarupaswamy6668

    @ramasundaramkarupaswamy6668

    9 күн бұрын

    அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்த போது நாட்டில் எந்த தப்பும் நடக்கவில்லையா? அவரவருக்கு நேர்மையாக இருந்தார்கள்.

  • @kulandhaivel7892
    @kulandhaivel78922 ай бұрын

    நூல் பல கல்.. அதற்குத் தக நில்❤

  • @jenirose6297
    @jenirose62972 ай бұрын

    மிக்க நன்றி ,இறையன்பு சார்.

  • @ponselvakumar6766
    @ponselvakumar6766Ай бұрын

    மிகவும் அருமை 🎉

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy7572 ай бұрын

    மிக மிக சிறப்பு அய்யா

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq2 ай бұрын

    Thank dear god Dear Ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @gowthamanantony8982
    @gowthamanantony89822 ай бұрын

    "தமிழ்",இயற்கை யான கனிம தாது வளம் தோண்ட தோண்ட. கிடைக்கின்ற. பேருண்மை ...மிக்க சிறப்பு வாழ்க வையகம்! ,வாழ்க வளமுடன் "!,

  • @t.vathsalavathsala3043

    @t.vathsalavathsala3043

    2 ай бұрын

    Pp9p

Келесі