கடன் தீர பதிகம் | வேத வேள்வியை நிந்தனை செய்துழல் | திருஞானசம்பந்த சுவாமிகள் | Kadan Theera Pathigam

Kadan Theera Pathigam - Vedha Velviyai - Kadan Theera Sivan Padalgal
கடன் தீர பதிகம் - வேத வேள்வியை நிந்தனை செய்துழல் - கடன் பிரச்சனை தீர சிவன் பாடல்
திருமுறை : மூன்றாம் திருமுறை
பதிகம் : 108
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
பண் : பழம்பஞ்சுரம்
நாடு : பாண்டியநாடு
தலம் : ஆலவாய் (மதுரை)
சிறப்பு: நாலடிமேல் வைப்பு
பாடியவர் : திருவிடைமருதூர் S.சம்பந்த தேசிகர்
திருச்சிற்றம்பலம்
பாடல் : 1
வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி அமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
பாதி மாதுட னாய பரமனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
பாடல் : 2
வைதி கத்தின் வழியொழு காதவக்
கைத வமுடைக் காரமண் தேரரை
எய்தி வாதுசெ யத்திரு வுள்ளமே
மைதி கழ்தரு மாமணி கண்டனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
பாடல் : 3
மறைவ ழக்கமி லாதமா பாவிகள்
பறித லைக்கையர் பாயுடுப் பார்களை
முறிய வாதுசெ யத்திரு வுள்ளமே
மறியு லாங்கையில் மாமழு வாளனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
பாடல் : 4
அறுத்த வங்கமா றாயின நீர்மையைக்
கறுத்த வாழமண் கையர்கள் தம்மொடுஞ்
செறுத்து வாதுசெ யத்திரு வுள்ளமே
முறித்த வாண்மதிக் கண்ணி முதல்வனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
பாடல் : 5
அந்த ணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே
வெந்த நீற தணியும் விகிர்தனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
பாடல் : 6
வேட்டு வேள்வி செயும்பொரு ளைவிளி
மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே
காட்டி லானை உரித்தஎங் கள்வனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
பாடல் : 7
அழல தோம்பும் அருமறை யோர்திறம்
விழல தென்னும் அருகர் திறத்திறங்
கழல வாதுசெ யத்திரு வுள்ளமே
தழல்இ லங்கு திருவுருச் சைவனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
பாடல் : 8
நீற்று மேனிய ராயினர் மேலுற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
தேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே
ஆற்ற வாளரக் கற்கும் அருளினாய்
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
பாடல் : 9
நீல மேனி அமணர் திறத்துநின்
சீலம் வாதுசெ யத்திரு வுள்ளமே
மாலும் நான்முக னுங்காண் பரியதோர்
கோல மேனிய தாகிய குன்றமே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
பாடல் : 10
அன்று முப்புரஞ் செற்ற அழகநின்
துன்று பொற்கழல் பேணா அருகரைத்
தென்ற வாதுசெ யத்திரு வுள்ளமே
கன்று சாக்கியர் காணாத் தலைவனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
பாடல் : 11
கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு
வாடல் மேனி அமணரை வாட்டிட
மாடக் காழிச்சம் பந்தன் மதித்தஇப்
பாடல் வல்லவர் பாக்கிய வாளரே.
திருச்சிற்றம்பலம்
#aalayamselveer #kadantheerapathigam #panniruthirumurai #pathigam #thirugnanasambandar #thirugnanasambantharpathigam #thevaram #thevaramsongsintamil #thevarampadalkal #thevaramsong

Пікірлер: 657

  • @sumathiperiyan4939
    @sumathiperiyan49394 жыл бұрын

    Ithu nooru saveetham unmai. Nan anupavithu ullen. Thangal pani sirakka valthukkal. 🙏🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sumathiperiyan4939

    @sumathiperiyan4939

    4 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @prabhakaran1028

    @prabhakaran1028

    4 жыл бұрын

    @@AalayamSelveer nandri

  • @seenukrish3763

    @seenukrish3763

    4 жыл бұрын

    KO

  • @iswariganeshan8322

    @iswariganeshan8322

    3 жыл бұрын

    @@seenukrish3763 sir engaluku help pangu ena panuninga pathigam detaileda sollunga humble request

  • @monikaarumugam5643
    @monikaarumugam56432 жыл бұрын

    கடவுளே என் கடன் அனைத்தும் விரைவில் அடைய வேண்டும் 🙏

  • @suthinthirasuthinthira2902
    @suthinthirasuthinthira29022 жыл бұрын

    என் கடன் தீர வேண்டும் நிறைவான வருமானம் தர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் இறைவா 🙏🙏🙏🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    சகோ, ஈசன் அருளால் உங்கள் பிராத்தனை விரைவில் நிறைவேறும் நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்🙏🙏

  • @jaileader
    @jaileader4 ай бұрын

    இறைவா எங்கள் கடன் நீங்கி நிம்மதியாக வாழ அருள் புரியவும் 🙏🙏🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 ай бұрын

    🙏🙏🙏

  • @bhuvaneswariarul2841
    @bhuvaneswariarul28414 жыл бұрын

    "திருச்சிற்றம்பலம்" மிக்க நன்றி சகோதரரே அதுவும் முதல் பதிவாக "கடன் தீர பதிகம்" . இந்த பதிவு என்னை போன்ற பலரது வாழ்வில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டி கொள்கிறேன். "திருச்சிற்றம்பலம்"

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @suyambuselvan4378
    @suyambuselvan437825 күн бұрын

    ஓம் நமச்சிவாயா எங்களுடைய கடன் அத்தனையும் தீர இறைவனை பிரார்த்திக்கிறேன் மிகவும் கஷ்டமாக உள்ளது கவலை அனைத்தும் விலக இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    25 күн бұрын

    🙏🙏🙏

  • @suyambuselvan4378

    @suyambuselvan4378

    25 күн бұрын

    @@AalayamSelveer தினமும் செல்கிறேன்

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    25 күн бұрын

    ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோ, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @lalithaaravindan5686
    @lalithaaravindan5686Ай бұрын

    நான் திருச்சேறை சென்று வந்தேன் பாதிக்கடன் அடைத்துவிட்டேன் இன்னும் மீதமுள்ள கடனை அடைக்க எனக்கு வழி தெரியவில்லையே திக்கற்றோருக்கு தெய்வமேஎன் அப்பனே துணை என்று இருக்கிறேன் ஈசா உன் கரம் பிடித்த என்னை கரையேற்று ஓம் நமசிவாய

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Ай бұрын

    ஈசன் அருளால் விரைவில் உங்கள் மீதி கடன் அடைபடும்,, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @lovefamily1865
    @lovefamily18652 жыл бұрын

    அப்பா எங்கள் கடன் எல்லாம் அடைக்க வழி காட்டப்பா.... அடைமானத்தில் உள்ள சொந்த இடத்தை மீட்க பண உதவி புரியுங்கள் அப்பா..... ஓம் நமசிவாய 🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    ஈசனின் அருளால் நல்லதே நடக்கும் சகோ, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்

  • @theerthagiri0714
    @theerthagiri07143 жыл бұрын

    நன்றி வாழ்த்துக்கள் கடன் தீரதீர உங்களுக்கு புண்ணியங்கள் சேர்ந்து கொண்டே இருக்கும்

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    வணக்கம் எல்லாம் அவன் செயல்🙏🙏 திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் kzread.info/dash/bejne/ZWGN17Jwn8fJk84.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @sivagamasundari3681

    @sivagamasundari3681

    3 ай бұрын

    ஆம் நன்றி நன்றி

  • @thiyagarajanrtrajan9764
    @thiyagarajanrtrajan97644 жыл бұрын

    திருச்சிற்றம்பலம், அவன் அருளாலே அவன் தாள் பணிவோம் பொன்னம்பலத்தானே போற்றிடுவோம்

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    🙏🙏🙏

  • @sureshsuresh1362
    @sureshsuresh136210 ай бұрын

    Muruga en kadan muzhuvathum theera vendum Appane🙏🙏🙏🙏🙏🙏

  • @valar9131
    @valar91314 жыл бұрын

    பலருக்கும் பயன் தரும் அருமையான பதிவு. மேலும் பதிகங்கள் முழுமையாக இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொடரட்டும் தங்கள் பணி. திருச்சிற்றம்பலம்.

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @shanmuganathanms3824
    @shanmuganathanms38243 жыл бұрын

    தென்நாடுடையசிவனேபோற்றி எந்நாட்டவா்க்கும்இறைவா போற்றி. தி௫ச்சிற்றம்பலம்

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    🙏🙏🙏

  • @VanajaVanaja-im1eg
    @VanajaVanaja-im1eg10 ай бұрын

    ஓம் நமசிவாய போற்றி தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    10 ай бұрын

    🙏🙏🙏

  • @visakanvisakan8740
    @visakanvisakan87402 жыл бұрын

    கடவுளே என் கடன் முழுவதும் அடைய வேண்டும்

  • @soloshorts9964
    @soloshorts9964 Жыл бұрын

    இறைவா எனது கடன்கள் அனைத்தும் விரைவில் அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @hiphopgamingtamizha574
    @hiphopgamingtamizha5745 ай бұрын

    👌👌

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 ай бұрын

    🙏🙏🙏

  • @Rahinirani
    @Rahinirani16 күн бұрын

    Nangalum thirucherai oru varudamaga sendru varugirom nalla palan kidaikirathu om nama shivaya

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    16 күн бұрын

    🙏🙏🙏

  • @vadivazhagiguna6594
    @vadivazhagiguna6594 Жыл бұрын

    Om namachivaya om namachivaya om namachivaya

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @s.karthiyani1831
    @s.karthiyani18319 ай бұрын

    சிவாய நம சிவா திருச்சிற்றம்பலம்

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    9 ай бұрын

    🙏🙏🙏

  • @rajalakshmik2492
    @rajalakshmik2492 Жыл бұрын

    இறைவா என் பிறவி கடன் சீக்கிரம் அடையவேண்டும். சிவாய நம.

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 Жыл бұрын

    ஓம நமச்சிவாய நமஹ

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @b.dhanyasarathi8756

    @b.dhanyasarathi8756

    Жыл бұрын

    நன்றிகள் பல கோடி

  • @vidyesvidu2367
    @vidyesvidu23672 жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க. ஓம் சச்சிதாநன்தா வாழ்க வாழ்க. ஓம் சற்குரு நாதர் வாழ்க வாழ்க.🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    🙏🙏🙏

  • @selvasathish341
    @selvasathish341Ай бұрын

    Afamanathil erukkim veedum, nagaum nallabadiyaga meetka vendum ..... Sivanae potri... 🙏🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Ай бұрын

    ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோ, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @dharshini1645
    @dharshini16454 ай бұрын

    Appne om namasivaye en kadan anaithum thernthu vetta arul puri appa om shivaya namah

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 ай бұрын

    🙏🙏🙏

  • @umasrimatibala1792
    @umasrimatibala17925 ай бұрын

    எங்க கடன் எல்லாம் அடையனும் கடவுளே

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 ай бұрын

    கவலை வேண்டாம் சகோதரி விரைவில் அடைபடும், நாங்களும் ஈசனிடம் வேண்டிக்கொள்கிறோம்

  • @umasrimatibala1792

    @umasrimatibala1792

    5 ай бұрын

    @@AalayamSelveer ரொம்ப நன்றிம்மா🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @revathyrevathy926
    @revathyrevathy9264 ай бұрын

    ஐயா நல்ல பதிகம் தந்ததற்கு நன்றி ஐயா எல்லா மக்களும் கடன் தீருந்து நல்ல வாழ்வு வாழ வேண்டும் இறைவா பரம் பொருளே என் கடன் தீருந்து என் பிள்ளைகள் க்கு திருமணம் நடக்க வேண்டும் இறைவா அருள்புரிய வேண்டும் இறைவா ஒம் நமசிவாயம் 🙏🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 ай бұрын

    வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் kzread.info/dash/bejne/ZWGN17Jwn8fJk84.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @seenivasan374
    @seenivasan3747 ай бұрын

    Arumai

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    7 ай бұрын

    வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் kzread.info/dash/bejne/ZWGN17Jwn8fJk84.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @muthumarimuthumari6149
    @muthumarimuthumari6149 Жыл бұрын

    Omm namachivaia

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @PowerRangerIND
    @PowerRangerIND Жыл бұрын

    Om mageshwaraya namaha, Appa enaku kadan irukave kudathu, enaku nalla velaiya kudu pa athula romba sambalam/laabam varanum appa, enoda kastatha pokugha sivaperumane , sivan ku nanri, thirugnanaSampathar ku nanri , youtube channel ku nanri 💮

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @sethukarthikeyan1985
    @sethukarthikeyan1985 Жыл бұрын

    சிவா திருசிற்றம்பலம்🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @user-ge2wl4nz3b
    @user-ge2wl4nz3b2 ай бұрын

    முருகா 🙏என் கடன் அனைத்தும் விரைவில் அடைய வேண்டும்🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 ай бұрын

    🙏🙏

  • @puppybowbow9815
    @puppybowbow9815 Жыл бұрын

    OM OM OM

  • @balakrishnans2605
    @balakrishnans26054 жыл бұрын

    திருச்சிற்றம்பலம் பெண்களுக்கு நேரும் மானபங்கம் போன்ற கொடுமைகள் தவிர்க்க திருமுறை மூலம் உதவுங்கள்

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    ஆராய்ந்து பதிவிடுகிறோம் நண்பரே

  • @anusuyajayaraj174
    @anusuyajayaraj1743 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் kzread.info/dash/bejne/ZWGN17Jwn8fJk84.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Жыл бұрын

    🙏🌼💐சிவ சிவ🌿🌼🥥🌹திருச்சிற்றம்பலம் ❤🍁🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal72434 жыл бұрын

    அனைவருக்கும் பயன் படும் பதிப்பகம் அருமை ராகம் சூப்பர் நன்றி வாழ்க வளமுடன்

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @saraswathid111
    @saraswathid111 Жыл бұрын

    ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏.

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @meenakashishankar9292
    @meenakashishankar92924 жыл бұрын

    Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @profcsivakumar2569
    @profcsivakumar25694 ай бұрын

    Super

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 ай бұрын

    🙏🙏🙏

  • @pavanisairamar6283
    @pavanisairamar6283 Жыл бұрын

    நமச்சிவாய வாழ்க ஓம் சக்தி ஆனந்தம் வாழ்க ஓம் சற்குருநாதர் வாழ்க சற்குருநாதர் வாழ்க எனது கடன் விரைவில் அடைய வேண்டும் ஓம் நமச்சிவாயா சுபம், சுபமஸ்து பண மஸ்து

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @amuthaaavin7100
    @amuthaaavin710011 күн бұрын

    Muruga en kadan theera vazi kattuppa.

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    11 күн бұрын

    🙏

  • @arunk3809
    @arunk38099 ай бұрын

    om nama shivaya yen kadan muluvathum adaika vendum arul purivai iraiva

  • @sakthivelsundarasan319
    @sakthivelsundarasan319 Жыл бұрын

    Om namasivaya om namasivaya jaihind

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    🙏🙏

  • @kowsalyak2140
    @kowsalyak21403 жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் kzread.info/dash/bejne/ZWGN17Jwn8fJk84.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @senjulamohan9062
    @senjulamohan9062 Жыл бұрын

    Om sivaya

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @arunk3809
    @arunk38099 ай бұрын

    varumaanam niraivai thara vendum param poruley

  • @meenakshishankar9183
    @meenakshishankar918311 ай бұрын

    Thanks for this video, please post all padigam. Thank you

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    11 ай бұрын

    வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் kzread.info/dash/bejne/ZWGN17Jwn8fJk84.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @mano88raj42
    @mano88raj424 жыл бұрын

    மிக்க நன்றி. நற்றுணையாவது நமசிவாயமே🙏🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @prabuarumugam2785
    @prabuarumugam27852 жыл бұрын

    ஓம் நமச்சிவாயா

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Aanmiga Parigarangal(ஆன்மீக பரிகாரங்கள் ) Playlist for more such interesting videos at kzread.info/dash/bejne/m2yutKmNqsnIaaw.html

  • @malligamalli4793
    @malligamalli47934 ай бұрын

    என் கடன் தீர வேண்டும் 🙏🙏🙏 தெய்வமே

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 ай бұрын

    🙏🙏🙏

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj3 жыл бұрын

    எல்லாம் சிவ மயம் எங்கும் சிவ மயம் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் kzread.info/dash/bejne/ZWGN17Jwn8fJk84.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @Prabhakarangovarthani
    @Prabhakarangovarthani Жыл бұрын

    manasu rompa kastama iruku engal kadan adaiya vendum.ellarukum nalla irukanum

  • @thulasiramsedithippa7725
    @thulasiramsedithippa77254 жыл бұрын

    திருச்சிற்றம்பலம். நன்றி ஐயா.

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sharadhadevi7226
    @sharadhadevi7226 Жыл бұрын

    Eangal kashtathaiyum therthu veikanum deivama.om nama shivaya

  • @revathyrevathy926
    @revathyrevathy9264 ай бұрын

    என் கடன் தீர வேண்டும் தெய்வமே...ஃ🙏🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 ай бұрын

    🙏🙏🙏

  • @muthumarimuthumari6149
    @muthumarimuthumari6149 Жыл бұрын

    Kadavulay ennnkadanai adaika valikodu ayaia🙏🙏🙏🙏🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    🙏🙏

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram Жыл бұрын

    Om namasivaya

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @gayathridevic9401
    @gayathridevic94014 жыл бұрын

    நன்றி ஐயா எங்களின் தேவை அறிந்து தந்ததற்கு...... தொழில் தங்கு தடையின்றி சிறக்க பதிகம் தருகம் ஐயா நன்றி......

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    நன்றி சகோதரி.. விரைவில் பதிவிடுகிறோம்

  • @YogiSureshRaman
    @YogiSureshRaman4 жыл бұрын

    நன்றி thank you

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @mumahesh84
    @mumahesh844 жыл бұрын

    சிவாய நம......

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    🙏🙏

  • @sangarapillaishanmugam1208
    @sangarapillaishanmugam1208 Жыл бұрын

    nandri iyya atputhmana pathiham thiruchitrambalam

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @GowthamanSubramani-gj2tf
    @GowthamanSubramani-gj2tf3 ай бұрын

    kadan prachanai theravendum karunai kattungal om namatchi vayam Thenattutaya sivaney potri ennattavargum eraiva potri

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @n.mahalakshminagarajan.a1755
    @n.mahalakshminagarajan.a175511 ай бұрын

    என் கணவர் வாங்கிய கடனை மிக விரைவில் அடைக்க வேண்டும் அருள் புரிக ஈசனே... அவரை காத்து ரட்ஷியுங்கள் இறைவா

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    11 ай бұрын

    கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @user-yv2ym5cq5e
    @user-yv2ym5cq5e5 ай бұрын

    எங்கள் கடன்கள் நிவாரணம் அடைய அருள்புரியவேண்டும்🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 ай бұрын

    🙏🙏

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 Жыл бұрын

    thiruchitrambalam

  • @lakshmilakshmi7109
    @lakshmilakshmi71093 жыл бұрын

    நன்றி வாழ்க

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் kzread.info/dash/bejne/ZWGN17Jwn8fJk84.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @ManinkmMani
    @ManinkmMani8 ай бұрын

    Mulu manathara paatungal oru vilakku yetri vaiththu saththiyamana unmai pathigam paduvathu nichaiyam orupthum thorppathu illai naan saththiyamaga unargiren neengal veendi kidaikkamal irukkathu neengal ulllamara padi nadakka villai yentral neengal yennai thodarpu kollungal saththiyamaga intha kaliyugaththil kidaiththa arum arpputham pathigam naan yelithil nampa matten yennaiye saachi solla vaiththathu thiru pathigam.....unmai unmai unmai......1000%

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    8 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @user-sy3wm3bb9f
    @user-sy3wm3bb9f3 жыл бұрын

    சிவசிவா

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் kzread.info/dash/bejne/ZWGN17Jwn8fJk84.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @sathyapalanichamy8620
    @sathyapalanichamy86204 жыл бұрын

    Om Nama Shivaya

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    🙏🙏👍👍☺️☺️

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam80412 жыл бұрын

    நன்றி நன்றி 🌹🌹🌹

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் kzread.info/dash/bejne/ZWGN17Jwn8fJk84.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @gunasekarans3256
    @gunasekarans32564 жыл бұрын

    Mikka Nanri Ayya, Vaaltha Vayadhillai Vanangugiren Ayya

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @yogisutharshan1679
    @yogisutharshan16794 жыл бұрын

    When you sing with deep love and feeling by holding the holy feet of almighty god, wonders will happen!

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    Well said sir☺️🙏👍

  • @sivailavarasu7096
    @sivailavarasu70962 жыл бұрын

    Om thiruchitrambalam

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    🙏🙏🙏

  • @arunakshya5140
    @arunakshya51404 жыл бұрын

    Iraivan thiruvadigalukku Namaskarangal....🙏🙏🙏🙏...... thangalin pathivirku nandrigal......

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @trajkumar1804
    @trajkumar1804 Жыл бұрын

    ஓம் நமசிவாய உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐🌷🌺🙏🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் kzread.info/dash/bejne/ZWGN17Jwn8fJk84.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @srikumar1251
    @srikumar12514 жыл бұрын

    Good morning brother paadal romba nalla iruku adhum Friday kekavey romba romba nalla iruku thank you so much

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    Thank you bro

  • @elangoelan4249
    @elangoelan42493 жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் kzread.info/dash/bejne/ZWGN17Jwn8fJk84.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi45454 жыл бұрын

    🙏🙏ஓம் நமசிவாய ... அர்த்தம் கூட சேர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும்

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    இதற்க்கு அடுத்து பதிவிட்டுள்ள பதிகங்களுக்கு பதிவின் முடிவில் அர்த்தம் சேர்த்து உள்ளோம் சகோதரி

  • @sriganapathytourstravals8664
    @sriganapathytourstravals86642 жыл бұрын

    Sri ganapathy tours and painting works Coimbatore VallgA vallamudun siva siva siva siva om

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam38544 жыл бұрын

    கோயிலில் இருப்பது போன்ற உணர்வு நல்ல குரல் நல்ல பதிகம் நன்றி

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @samundeeswarinagarajan3552

    @samundeeswarinagarajan3552

    4 жыл бұрын

    Yes enagum atha feeling.

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    🙏

  • @murugadosss3598
    @murugadosss35984 жыл бұрын

    Thanks Alayam selveer ohm namasivaya

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    🙏🙏

  • @tsaravanaprakash9767
    @tsaravanaprakash97674 жыл бұрын

    மிக்க நன்றி

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @ajayvisakar6860
    @ajayvisakar68604 жыл бұрын

    நன்றி மிக்க நன்றி

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil69424 жыл бұрын

    பலருக்கு பயன் தரும் பதிகம் .....நன்றி சகோ........ 👌🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @malini9858
    @malini98587 ай бұрын

    Esaney en kadan theera vendum emperumaney

  • @Thilagamani369
    @Thilagamani3692 жыл бұрын

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽nantri

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் kzread.info/dash/bejne/ZWGN17Jwn8fJk84.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @user-ge2wl4nz3b
    @user-ge2wl4nz3b2 ай бұрын

    🙏🏻🙏🙏🙏🏻🙏🏻🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @kandasamysubramanian6994
    @kandasamysubramanian69944 жыл бұрын

    சகோ தங்களின் சேவை நமசிவாய

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @vijayakumaranithakeezhathi7617
    @vijayakumaranithakeezhathi76174 жыл бұрын

    அன்பே சிவம்

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    🙏🙏

  • @premalathar9151
    @premalathar91514 жыл бұрын

    Thank youதிருசிற்ம்பலம்

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    இன்று, முதல் திருப்பதிக பாடலை பதிவிட்டுள்ளோம் kzread.info/dash/bejne/ZWGN17Jwn8fJk84.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @shanthakumari1550
    @shanthakumari15504 жыл бұрын

    தயவு செய்து பிரிந்திருக்கும் கணவன் மனைவி விவாகரத்து வரை சென்றாலும் அத்தனை பிரச்சனைகளும் தவுடு பொடியாகி நாங்கள் ஒன்று சேர்ந்து அந்யுனியமாக வாழ பதிகம் தாருங்கள்😢🙏🙏🙏🙏🙏

  • @balajishock3546

    @balajishock3546

    4 жыл бұрын

    நிச்சயமாக நல்லதே நடக்கும்,சகோதரி. திருச்சிற்றம்பலம் 🙏

  • @shanthakumari1550

    @shanthakumari1550

    4 жыл бұрын

    @@balajishock3546 நன்றி அண்ணா

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    ஆராய்ந்து பதிவிடுகிறோம் சகோதரி. நல்லதே நடக்கும். கவலை வேண்டாம்

  • @shanthakumari1550

    @shanthakumari1550

    4 жыл бұрын

    @@AalayamSelveer மிக்க நன்றி அண்ணா. சுயநலவாதிகளிடமிருந்தும், தீய எண்ணம் உள்ளவர்களிடமும், தீய சக்திகளிடமிருந்தும் என் கணவரை மீட்டு கொண்டு வர என் அப்பன் ஈசன் அருள் செய்வார் என்ற நம்பிக்கையுள்ளது🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    @@shanthakumari1550 🙏🙏🙏

  • @sumathiperiyan4939
    @sumathiperiyan49394 жыл бұрын

    Thank you very much.

  • @murugadosss3598
    @murugadosss35984 жыл бұрын

    Thanks Alayam team all blessings.

  • @muthuselvammurugesan3217
    @muthuselvammurugesan3217 Жыл бұрын

    🙏..... இந்த மாதிரி நிறைய பதிகம் பதிவிடுவீங்கன்னு எதிர்பார்ப்புடன்..,......

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் kzread.info/dash/bejne/ZWGN17Jwn8fJk84.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @nesanthr.g.9101
    @nesanthr.g.91014 жыл бұрын

    Om namasivaya..

  • @raghulkannan4526
    @raghulkannan45264 жыл бұрын

    Mikka nandri bro

  • @palaniappansangilimuthu5271
    @palaniappansangilimuthu52713 жыл бұрын

    நன்றி.

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் kzread.info/dash/bejne/ZWGN17Jwn8fJk84.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @ssanthanalakshmi7157
    @ssanthanalakshmi71573 жыл бұрын

    பதிவு நன்மையுள்ளதாக இருக்கிறது. நன்றி ஆலயம் செல்வீர்

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் kzread.info/dash/bejne/ZWGN17Jwn8fJk84.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @user-ho2lq5po1b
    @user-ho2lq5po1b9 ай бұрын

    🙏🙏🙏

Келесі