Sri Sathya Sai Chalisa Tamil Song |ஸ்ரீ ஸத்ய ஸாயி சாலீஸா|ஆராதனா மகோத்சவ சிறப்பு வெளியீடு

Музыка

#soothing #relaxing #peaceful #music #spiritual #populardevotional #srisathyasai #radiosai #sathyasaibaba #prasanthinilayam #popular #srisathyasaitamil #sathyasaichalisa
ஶ்ரீராமனின் தாசனான ஹனுமானின் புகழ் பாடும் ஹனுமான் சாலீஸா போலவே இந்த ஶ்ரீ ஸத்ய சாயி சாலீஸாவும் நாற்பது கண்ணிகளில் நம்மை ஆட்கொண்ட ஸ்வாமியின் அளவிட முடியாத கருணையையும், அது தரும் எல்லையற்ற நன்மைகளையும் விவரிக்கிறது. அந்தக் கருணையைத் தந்து அருளும்படி ஸ்வாமியிடம் வேண்டச் சொல்லி உள்ளத்திற்கு அறிவுறுத்துகிறது.
பகவானின் பொற்பாத கமலங்களில் ஸ்ரீ ஸத்ய சாயி சாலீஸாவை ஆராதனா நன்னாளில் சமர்ப்பிக்கிறோம்
Credits:
இயற்றியவர்: திருமதி பவானி வாஞ்சிநாதன்
பாடியவர்கள்: திருமதி G.மீனாக்ஷி, திருமதி G.வித்யா
வாத்தியங்கள்:
திரு முடிகொண்டன் ரமேஷ் - வீணை
திரு S.J. அர்ஜுன் - மிருதங்கம்
புல்லாங்குழல்: திரு நீலகண்டன்
தபேலா & முகர்சிங் - திரு. N. சுந்தர்
கஞ்சீரா & தாளம் - திரு சாயி பரத்
ஆடியோ பதிவு: Sai Rocks Studio, Chennai
*ஸ்ரீ ஸத்ய ஸாயி சாலீஸா*
ஸ்ரீ குரு தேவா ஸத்ய ஸாயிராம்
திருவடி சரண் அடைந்தேனே
அருள் செய்ய தருணமிதே கனஷ்யாம்
தஞ்சம் என்றே உரைத்தேனே
அறம் பொருள் இன்பமும் வீட்டுடன்
தரப்பணிந்தேன் திருத்தாளை
ஏதும் ஞானமில்லா ஏழை என்றாலும்
சூட்ட வந்தேன் புகழ் மாலை
1. ஜெய ஸாயிராமன் புகழ்தனைப்பாடு
மனமே ஆனந்த நாட்டியம் ஆடு
2. நித்யமானதொரு பொருளினைத் தேடு
ஸத்ய ஸாயிராமன் சரணினைக் கூடு
3. ஈச்வராம்பா ஈந்த இனிய குமாரன்
தீனரைக் காத்திடும் திவ்ய சுகுமாரன்
4. சொல்லுக்குள் அடங்குமோ சுந்தரமுகமே
நல்வினைப் பயனால் காண்பது நிஜமே
5. லிங்கோத்பவம் செய்யும் பங்கய உதரம்
மங்களப் புன்னகை மலரும் பொன்னதரம்
6. புட்டப்பர்த்தி வாழும் புண்ணிய ரூபன்
இஷ்டமானவரம் ஈந்திடும் ஈசன்
7. கண்ணனும் ராமனும் கணபதி வேலனும்
தண்மதி சூடிய சிவனுடன் ப்ரம்மனும்
8.பெண்ணுருக்கொண்டருள் புரிகின்ற சக்தியும்
எண்ணரும் தெய்வங்கள் இவன் என்றுணர்ந்திடு
பர்த்தி நிவாசா ஸாயி ராம்
பரம தயாளா ஸாயி ராம் (2 தடவை)
9. ஓதிடும் வேதத்தின் உட்பொருள் தானாய்
உருகிடும் உள்ளமாம் மதிதொடும் வானாய்
10. பருகிடப் பருகிடத் தித்திக்கும் தேனாய்
பர்த்தியில் அமர்ந்திட்டான் ஸாயி பகவானாய்
11. எங்கும் நிறைந்ததோர் அந்தர்யாமி
அடியவரழைப்பதோ ஆசையாய் ஸ்வாமி
12. விண்ணவர் ஏத்தும் இவ்விமலனைத் தந்து
புண்ணியம் கொண்டதே பாரத பூமி
13. பந்தபாசம் பின்னால் அலையும் அஞ்ஞானம்
தன்னை உயர்வாய் எண்ணித் தருக்கிடும் மானம்
14. சிந்தையில் தெய்வத்தை சிக்கென இருத்தி
வந்தனை செய்திடும் வாய்த்தநல் ஞானம்
15. நடப்பது அறியாய் எதுவென நாளை
துன்பமோ இன்பமோ தொடர்ந்திடும் வேளை
16. கற்றறி ஞானமும் கவைக்குதவாதே
பற்றிடு பரமனின் பங்கயத்தாளை
பர்த்தி நிவாசா ஸாயி ராம்
பரம தயாளா ஸாயி ராம் (2 தடவை)
17. மாற்றரும் பவப்பிணி மாற்றிடும் மருந்து
மாதவன் தரிசனம் கண்ணுக்கு விருந்து
18. கணம் மறந்தாலும் கதியில்லை அறிந்து
பணிந்திடு மனமே பரமனைப் புரிந்து
19. காமக்குரோதலோபக் குணங்களைத் தள்வாய்
நாமம் ஒன்றே துணை நரகினை வெல்வாய்
20. கூப்பியே கரங்களைக் கும்பிடச் சொல்வாய்
பூட்டியே உள்ளத்தில் புனிதனைக் கொள்வாய்
21. காப்பவன் நீயெனக் கால்களில் விழுவாய்
கண்மணி நீர் கொண்டு கழுவியே எழுவாய்
22. கருணையின் கடல் அவன் பெரும்பயம் தணிவாய்
கைவிடமாட்டான் என்றுள்ளம் துணிவாய்
23. உயிர் எல்லாம் ஒன்றென எண்ணிடப் பழகு
உயர்வில்லை தாழ்வில்லை உள்ளுவதழகு
24. மானுடர் வாழ்க்கை உயர்ந்திடத் தேவை
மன்னுயிர் வாழ்ந்திடச் செய்திடும் சேவை
பர்த்தி நிவாசா ஸாயி ராம்
பரம தயாளா ஸாயி ராம் (2 தடவை)
25. பிறர்நலம் பேணிடக் காட்டிடும் வேகம்
பரகதி வாய்த்திட உதவும் விவேகம்
26. சொன்னவன் தேவன் ஏற்றிட வேண்டும்
மறந்திடில் விழுவாய் நரகிடை மீண்டும்
27. பாரதப்போரன்று பாண்டவர் வாழ
கீதையைச் சொன்னான் பார்த்தனின் ஸாரதி
28. மாமதப் போரின்று மக்களைக் காக்க நல்
பாதையைச் சொன்னான் ஸனாதன ஸாரதி
29. தாயுடன் தந்தை தனிப்பெரும் குருவாய்
ஆனவன் இவனே ஆனந்த உருவாய்
30.காத்திடும் தெய்வமும் ஆனதனாலே
போற்றிப் புகழ்ந்திடு புதிய பண்ணாலே
31. பாதித்து சோதிக்கும் பற்பல கிரகங்கள்
பாதம் பிடித்தவரைப் பார்ப்பதும் இல்லை
32.விட்டகலாது தொடர்ந்திடும் விதியும்
பட்டென நீங்குமே படுவரோ தொல்லை
பர்த்தி நிவாசா ஸாயி ராம்
பரம தயாளா ஸாயி ராம் (2 தடவை)
33.ஸத்ய தர்ம சாந்தி ப்ரேமைக்கு (உ)தாரணன்
ப்ரசாந்தி நிலையத்தின் சத்யநாராயணன்
34. அருள்மிகு கை தரும் அற்புத உதியே
அன்பர்க்கோ மாறும் நூறாயிரம் விதியே
35.கருணைக்கண் நோக்கிட ஓடிடும் நோயும்
கால்களில் சிரம்படப் பாபங்கள் தேயும்
36.மதமுடன் வேட்கையும் மனதினில் குறையும்
இதமிகு நிம்மதி இதயத்துள் நிறையும்
37.பாபா நாற்பதும் சமர்ப்பித்தேன் பணிவாய்
பர்த்தி புரீச்வரா பதமலர்க்கு(அ)ணிவாய்
38.தேவா எந்தன் வினை தீர்த்தருள் புரிவாய்
இனிப் பிறவாவகை திருப்பதம் தருவாய்
39.ஸாயி புகழ் சொல்லும் நாற்பது பாட்டும்
படிப்பவர் உள்ளத்தில் பரவசமூட்டும்
40.பெரும் புகழ் செல்வமும் ஆயுளும் கூட்டும்
பரமனை அடையும் நல் பாதையைக் காட்டும்
பர்த்தி நிவாசா ஸாயி ராம்
பரம தயாளா ஸாயி ராம் (2 தடவை)
எங்கும் நிறைந்த பரம் பொருளே
மங்கள ஸாயி கண் பாராய்!
சந்ததமும் உனை மறவாதபடி என்
நெஞ்சில் அமர்ந்திட வாராய்!
*ஜெய் சாயி ராம்*
For more updates:
Website: www.sssmediacentre.org/
Facebook: / sri.sathya.sai.baba
Twitter: / radiosaih2h
Instagram: / srisathyasaiofficial
KZread Main Channel: / radiosaivideos
Linkedin - / sri-sathya-sai-media-c...
Now You can watch on 'Prasanthi Connect' Mobile App
Google : bit.ly/3r25M7N
Apple : apple.co/3KfWj3F
- Sri Sathya Sai Media Centre

Пікірлер: 74

  • @venkateshbabus
    @venkateshbabusАй бұрын

    I Thank Swami for being the root cause of this wonderful Chalisa, and I thank the writer, composer and singer. 🙏🏻🙏🏻🙏🏻. When listening it realy a kind of joy springs out from the heart Thanks a lot. Jaisairam 🙏🏻🙏🏻🙏🏻

  • @gangadharanr148
    @gangadharanr148 Жыл бұрын

    தமிழை தாய் மொழியாகக்கொண்ட சாயி பக்தர்களுக்கு இந்த சாலீஸா ஒரு அரிய பொக்கிஷம். இதை தினமும் பூஜை யில் பாடி பக்தியில் அமிழ்ந்து திளைப்பது மஹா பாக்கியம். பாடலாசிரியர் செய்திருக்கும் சேவை சாதாரணமானது அல்ல. மகத்தான சேவை. அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பாடிய குழந்தைகளும் இதை தினமும் பாடப்போகும் ஸ்வாமியின் குழந்தைகளும் பாக்கியசாலிகள்.

  • @g.s.ramachandranramachandr2980
    @g.s.ramachandranramachandr298015 күн бұрын

    Om Sri Sai Ram my humble pranams at your lotus feet. Jai shree Sai Ram.

  • @g.s.ramachandranramachandr2980
    @g.s.ramachandranramachandr29802 ай бұрын

    Om Sri. Sai Ram Jai Jai Sai Ram

  • @g.s.ramachandranramachandr2980
    @g.s.ramachandranramachandr29803 ай бұрын

    Om Sri Sathya Sai Baba Namo 4:28 Namah. Jai Jai shree Sai Ram .

  • @meenakshipriyasundar2247
    @meenakshipriyasundar22474 ай бұрын

    Very nice sahityam and singing percussions too Jai sairam

  • @Thedailydiary7
    @Thedailydiary78 күн бұрын

    Very nice.....om Sri Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061Ай бұрын

    Om Sri Sai Ram thanku Sai Ram

  • @kalasrikumar8331
    @kalasrikumar83312 ай бұрын

    Sai Saranam 🙏🙏♥️🙏

  • @chandranselvakkunachandran2005
    @chandranselvakkunachandran20059 ай бұрын

    ஓம் ஸ்ரீ சாயிராம்

  • @divyaas2689
    @divyaas2689 Жыл бұрын

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🐘🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🐘🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🐘🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @divyaas2689
    @divyaas26899 ай бұрын

    Romba arumaiyana padal🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🌹🌹🌹🌹JaiSairam🙏🏼🙏🏼🙏🏼

  • @ratnathaya3895
    @ratnathaya3895 Жыл бұрын

    Om sai ram 🌹🤲🙏

  • @PitchumaniSundaravaradhan
    @PitchumaniSundaravaradhan Жыл бұрын

    சாய்ராம். மனதை மயக்கும் இசையில் பகவானின் சாலிசா திருமதிபவானி வாஞ்சிநாதன் அவர்களின் வரிகளில் சாயி சகோதரிகளின் தேனின் இனிய குரலில் அற்புதமான பக்கவாத்தியங்களுடன் பகவானின் ஆராதனை நாள் அன்று அற்புதமாக அமைந்துள்ளது. கேட்க அமைந்த எங்கள் அனைவருக்கும் மிகப்பெரும் பாக்கியம். சாய்ராம் சாய்ராம் வாழ்க வளர்க தங்கள் பணி மென்மேலும் .ஜெய் சாய்ராம் 🙏🙏🙏

  • @dwarakamayee18

    @dwarakamayee18

    Жыл бұрын

    Excellent and peaceful music . I listen daily to get great solace .🎉❤😊

  • @vijayavenkataraman8691
    @vijayavenkataraman8691 Жыл бұрын

    Beautiful lyrics ssiram

  • @vimalasivagnanam9134
    @vimalasivagnanam91349 ай бұрын

    Very nice. Thank you SaiRam

  • @vkbaskaran427
    @vkbaskaran427 Жыл бұрын

    Super sir

  • @dwarakamayee18
    @dwarakamayee18 Жыл бұрын

    Jai Sairam 🙏 ⚘️ 🙏 ⚘️ 🙏 ⚘️ 🙏 ⚘️

  • @kumaresank3061
    @kumaresank3061 Жыл бұрын

    Om Sri Sai Ram

  • @srikala9458
    @srikala9458 Жыл бұрын

    Om Sri Sai Ram ❤அழகான பாடல் வரிகள். உன்னதமான கருத்துக்கள். மனதிற்கு மிகவும் அமைதியைத் தருகிறது. நன்றி ❤❤❤

  • @dwarakamayee18
    @dwarakamayee18 Жыл бұрын

    Very melodious presentation .Everyday I listen and get my soul purified . A great solace because iam recovering from a surgery . Sairam. 🎉

  • @venkateswarisatyanarayan9712
    @venkateswarisatyanarayan971210 ай бұрын

    My very favourite song.very very nicely sung.❤

  • @dwarakamayee18
    @dwarakamayee18 Жыл бұрын

    Jai Sairam. Jai Sairam 🙏 ⚘️ 🙏 ⚘️ 🙏 ⚘️ 🙏 ⚘️

  • @dwarakamayee18
    @dwarakamayee1811 ай бұрын

    Thankyou Sairam for curing my ailments after my surgery. My gratitude and humble Pranams to your Lotus feet.🎉😊❤🎉🎉

  • @dwarakamayee18
    @dwarakamayee18 Жыл бұрын

    Meaningful Melodies🎉😮

  • @neelapattabiraman3814
    @neelapattabiraman3814 Жыл бұрын

    ரொம்ப ரொம்ப அழகான வரிகளுடன் இனிமையான பகவான் பாடல் கேட்க கேட்க தெவிட்டாத இன்பம்🙏🏻🙏🏻🙏🏻

  • @geethalakshmi113
    @geethalakshmi113 Жыл бұрын

    Sairam, such soul fill lyrics with great subtle music and voice. Thank you Sairam ❤❤🙏🙏🙏

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan Жыл бұрын

    ஓம் ஸ்ரீ சாய்ராம் சோமவார திங்கட்கிழமை இன்று சுவாமி உந்தன் ஆராதனை தினம். உமது திருமேனி தரிசனம் உலக உயிர்கள், அனைவருக்கும் நல் அருள்மிகு கடாக்ச தரிசனம் ஜெய் ஜெய் சாய்ராம் ஜெய் ஜெய் சாய்ராம் ..இந்த ஜெகமும், ஜெகத் மக்களும் நல்வாழ்வு வாழ,நலம் கண்டு வளர நீ வந்து பிறந்தாய்..நம் தாயார் ஈஸ்வரம்பாள் திருவயிற்றில் தெய்வக் குழந்தையாக ...உன் நாமம் போற்றி போற்றி உன் பாதத்தில் அனைவரும்....உலக மாந்தர்கள் அனைவரும் சரணம் சரணம் சரணம்.

  • @harinikamesh8353

    @harinikamesh8353

    Жыл бұрын

    Sairam, wonderful Sai Chalisa, beautiful rendition. Very happy to listen on this auspicious day. Sairam

  • @hemasubramanian5528
    @hemasubramanian5528 Жыл бұрын

    Sairam

  • @nagaswamyvanchinathan1815
    @nagaswamyvanchinathan1815 Жыл бұрын

    Sairam Soulful rendition, touching the heart. The lyrics are loaded with Love towards Divinity. 🙏🙏

  • @deivanayagamv9532
    @deivanayagamv9532 Жыл бұрын

    ஓம் சத்திய சாயி பாபா துணை

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan Жыл бұрын

    ஓம் ஸ்ரீ சாய்ராம்...சீரடி, புட்டபர்த்தி சாயிராம் சாம்ராம் சாய்ராம்... அன்று வாயுபுத்திர அனுமன் சாலிசா வரைய பெற்று....இனிதே ..தமிழ் ஆக்கமும் கண்டு ... பாடப் பட்டு நாம் அனைவரும் காலம் காலமாய் செவிமடுத்து கேட்டு மகிழ்கிறோம் ... . சாய் ராம் ... இன்று நம் சுவாமி சாயி ஆராதனா தினம் முன்னிட்டு ...ராம காதை சபரிபோல் இக்காலத்திலும் பகவான் ஸ்ரீ சத்திய... சாயி..திரு கமலபாத பரம பக்தியில் மூழ்கி எப்போதும் அடுத்தவர் நலமும் நினைத்து ... ஜீவிக்கும்... நம் சாயி பக்தர்கள் .... அன்பிற்கும் மரியாதைக்குரிய....அனைவராலும் போற்றப்படும் வணங்கப்படும் .. ... நம் மூத்த சகோதரி திருமதி ...பவானி வாஞ்சிநாதர் அவர்கள் ...சாய்ராம் தனக்கு வழங்கிய கற்பனை களஞ்சியத்தை ஆதாரமாக வைத்து சுவாமி மீது சாலிசா ....ஆஹா ஆஹா ஆஹா திவ்யமான ஐலேசா .. ...இனிய சாயி பக்தர்கள் கூட்டம் இணைந்து இசைக்கும் பாங்கு ஸ்ரீ சத்திய சாயி திரு உள்ள... கடாக்ஷ சங்கல்ப படி நல்லிசை அமுதம் கலந்து தெளித்த பக்தி வானத்து இசை மழை ...காலம் காலம் போற்றி மகிழ்ந்து பாடப்படும் சுவாமி பிரசாதம் இந்த சாலிசா பிரசாதம் .. அனைவரும் மகிழும் வண்ணம் ஒன்று கூடி இதை தந்தருளிய அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி ...தன்னலம் கருத ஸ்ரீ சத்திய சாயி புகழ் பாடும் இந்த சாயி சேவை பணிக்கு அனைத்து உலக சாயி பக்தர்கள் அன்பு கனிந்த ஆத்மார்த்தமான மகிழ்ச்சிகள், ஆனந்தங்கள், சந்தோஷங்கள் நமஸ்காரங்கள் .. அவர் அனுக்கிரகம் இணைந்த அனைவர் கூட்டு முயற்சி .. இந்த சாலிசா இசை மலர் ..வாடா மலராக திகழப்போவது சர்வ உண்மை..இந்த அரும்பணி தெய்வீக இசை பணி ஸ்ரீ சக்தி சாயி .. ஆராதனா மகோத்சவதினம் அமையப்பெற்றது அவர் திரு உள்ளம் .. சுவாமி புகழ் பாடும் ஸ்ரீ சாயி சாலிசா ..அவர் அருளால் தந்தருளிய நம் மூத்த சகோதரி திருமதி பவானி வாஞ்சிநாதன் அவர்களுக்கு உலக சாயி பக்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி பொங்க சமர்ப்பிக்கும் பணிவான நமஸ்காரங்கள். ஜெய் சாய்ராம் *சர்வ லோக சுகினோ பவந்து *ராம் ராம் ராம் சாய் ராம் ..எளிய நடை எழுத்து இனிய இசை கூட்டி ஆஹா ஆஹா ஆஹா சாயி சாலிசா அருமை அருமை அருமை ...இதை நாம் தினம் தினம் பிரதி தினம் செவிமடுத்து கேட்டால்... நம் நம் மனம் லயித்து ..சுருதி கூட்டி பாடினால் அனைவருக்கும் இல்லை வறுமை.. எதிலும்....

  • @lakshmibalu4339

    @lakshmibalu4339

    Жыл бұрын

    Sai ram sai ram

  • @meenaannamalai3255
    @meenaannamalai3255 Жыл бұрын

    Om Sri SaiRam... Soulful Rendition.. Awesome lyrics Bavani Mami..

  • @ushaganesan
    @ushaganesan Жыл бұрын

    Jai Sairam 🌹🙏

  • @santhoshn.c7284
    @santhoshn.c7284 Жыл бұрын

    Soulful and heart piercing melodious voice. Swami has given such a sweet voice to this singer. Just in tears

  • @dwarakamayee18

    @dwarakamayee18

    Жыл бұрын

    🎉😊❤

  • @dwarakamayee18

    @dwarakamayee18

    Жыл бұрын

    😂🎉😊

  • @dwarakamayee18
    @dwarakamayee18 Жыл бұрын

    Sairam kindly shower your Grace to us.🙏🙏🙏⚘️⚘️⚘️⚘️🙏🙏🙏🙏🙏

  • @lakshmibalu4339
    @lakshmibalu4339 Жыл бұрын

    Sai ram sai ram 🙏🙏🙏

  • @annapoorninatarajan2682
    @annapoorninatarajan2682 Жыл бұрын

    Om sri Sairam 🙏🙏

  • @syamalavs7559
    @syamalavs7559 Жыл бұрын

    🙏Om Sri Sairam

  • @srikala9458
    @srikala9458 Жыл бұрын

    Om Sri Sai Ram ❤

  • @padmajaveeraraghavan8665
    @padmajaveeraraghavan8665 Жыл бұрын

    Humble sairam Greetings🙏 Blissful 🙇‍♀️🙇‍♀️

  • @dwarakamayee18
    @dwarakamayee18 Жыл бұрын

    Sairam ⚘️ ⚘️ ⚘️ ⚘️ 🎉😊❤

  • @sudhasundaram7312
    @sudhasundaram7312 Жыл бұрын

    Very Divine and melodious. Lyrics are full of Bhakthi and rendition is full of Bhaavam. மிக மிக அருமை. ஓம் ஶ்ரீ சாய்ராம் 🙏🙏

  • @aravind.j86
    @aravind.j86 Жыл бұрын

    சாய்ராம் ❤

  • @TheKeth04
    @TheKeth04 Жыл бұрын

    Thanks Sairam 🙏👍 Samantha lokaah Sukino Bhavanthu 🙏 Om Sri Sai Rama Jayam.❤

  • @thamaraichelvi7025
    @thamaraichelvi7025 Жыл бұрын

    ஓம் சாய் ராம்

  • @menasjaga692
    @menasjaga692 Жыл бұрын

    Om sri sairam 🙏🌹

  • @pararajasingamyogeswaran2417
    @pararajasingamyogeswaran2417 Жыл бұрын

    Om Sri Sai Ram ........

  • @vasukiramesh5059
    @vasukiramesh5059 Жыл бұрын

    Super,jai Sairam 🙏🙏

  • @chandrav9396
    @chandrav9396 Жыл бұрын

    Super Sairam 🙏🙏

  • @karpagamram245
    @karpagamram245 Жыл бұрын

    அருமை அருமை ஸாயிராம். மிக்க நன்றி.

  • @vedavidhyasamithi4572
    @vedavidhyasamithi4572 Жыл бұрын

    Very Moving words to Swami! Sais blessings.The text can be published separately so that each can chant I their Way! Sai Premi

  • @SriSathyaSaiTamil

    @SriSathyaSaiTamil

    Жыл бұрын

    Sairam... Recently the lyrics have been updated in the description for everyone's reference...

  • @venkateshbabus
    @venkateshbabus Жыл бұрын

    Arumai Sairam 🙏🙏🙏

  • @meenakshipriyasundar2247
    @meenakshipriyasundar2247 Жыл бұрын

    மிகவும் அழகு 🙏

  • @dwarakamayee18

    @dwarakamayee18

    Жыл бұрын

    Wonderful lyrics❤😮🎉

  • @hemasatagopan2981
    @hemasatagopan2981 Жыл бұрын

    அற்புதமான வரிகள். பொருள் பதிந்த பேரானந்தம்

  • @ganesang4121
    @ganesang4121 Жыл бұрын

    Om sri sai ram 🙏🙏

  • @sridharannatarajan7540
    @sridharannatarajan75403 ай бұрын

    Sairam I am blessed to hear enjoyed and mesmerized in dep ocean of soul touchingndevotional song

  • @SriSathyaSaiTamil

    @SriSathyaSaiTamil

    3 ай бұрын

    Sairam we are so grateful to you for your encouraging words. We are glad this video has helped you. It is Swami Himself conveying His love to us through you. Sairam...

  • @rajivenkatesan1164
    @rajivenkatesan1164 Жыл бұрын

    Very nice sweet voice 🙏🏻🙏🏻

  • @div_yh_sai
    @div_yh_sai Жыл бұрын

    Too divine ❤❤❤ sairam

  • @devakirajamani
    @devakirajamani Жыл бұрын

    Very nice. Clarity in pronunciation . Wonderful rendition

  • @rgo9221
    @rgo9221 Жыл бұрын

    Very melodious.. Is is possible for the Tamil lyrics available in English or telugu? Many don't no to read the Tamil lyrics .

  • @SriSathyaSaiTamil

    @SriSathyaSaiTamil

    Жыл бұрын

    Sairam, will soon share it here as a reply again.

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan Жыл бұрын

    சாய்ராம் √……… சாம்× ராம் அச்சுப்பிழை மன்னிக்க ..

  • @kumaresank3061
    @kumaresank30614 ай бұрын

    Om Sri Sai Ram thanku Sai Ram

  • @lathasrinivasan7308
    @lathasrinivasan7308 Жыл бұрын

    Om Sri Sai Ram

Келесі