ஒரு புதிய மொழியை விரைவாகக் கற்றுக்கொள்வது எப்படி? | Fluent Forever Book Review

Тәжірибелік нұсқаулар және стиль

Get your copy of 'Fluent Forever' book: amzn.to/3YGh1kH
Remnote invite to try (free version available): tinyurl.com/4vcjjevw
எனது (இங்கிலிஷ்) தேவதைகள் | My (English) Angels | ஆங்கிலம் எனும் கதவு: kzread.info/dash/bejne/ZIyKzstmc5C5l9Y.html
***
- குழந்தைகள் மொழி கற்பதற்கும் பெரியவர்கள் கற்பதற்கும் உள்ள வேறுபாடுகளை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது?
- மொழி கற்றலின் ஐந்து அடிப்படை விதிகள் என்ன?
- ஏன் பாரம்பரிய மொழி கற்கும் உத்திகள் பெரிய பலன்கள் அளிப்பதில்லை?
- இன்றைய சூழலில் மொழி கற்க உள்ள புதுக் கருவிகள் எவை? (பல இலவசமாகக் கிடைக்கின்றன)
- மொழி கற்பதை விளையாட்டாக அணுகுவது எப்படி?
***
உலகில் முதன்முறையாக நெடிய மொழி வரலாற்றில் சீன மொழியிலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பு செய்தவன் நான். ஆனால், மொழி கற்றலுக்கு எனக்குமான உறவு ஆரம்பத்தில் அத்தனை சுலபமாக இருக்கவில்லை. அது ஆங்கிலம் கற்பதிலிருந்து துவங்கியது.
சின்ன வயதிலேயே புத்தகம் படிக்கும் ஆர்வத்தால் தமிழ் வசமானது. ஆனாலும் பள்ளியில் தமிழில் சராசரி மதிப்பெண் தான். வாழ்க்கை சடாரென்று திசை மாறி +1இல் இங்கிலிஷ் மீடியம் சேர்ந்ததும் கை கால் உதறியது. கல்லூரிப்படிப்பும் போராட்டமாகத் தொடர்ந்தது. தமிழ் மேடைகள் மனஉறுதி தந்தன. ஆனால், மொழிப் பாடங்களிலும் சேர்த்து, ஒரு சராசரி மதிப்பெண்கள் எடுக்கும் மாணவனாகவே தொடர்ந்தேன்.
மற்ற பாடங்களோ மொழியோ, விஷயம் சப்ஜெக்ட்டில் இல்லை, கற்கும் முறையில் இருக்கிறது என்று புரிந்தபோது, “ச்சீ! இதுக்கா பயந்தோம்!?” என்று விட்டுப்போனது.
அதன் பிறகு, மொழியிலும் ஏறு முகம் தான்.
இந்திய அயலுறவுப் பணியில் சேரும் அலுவலர்கள் ஒரு கட்டாய அயல் மொழியைக் கற்க வேண்டும். எனக்கு வாய்ப்பிருந்த நான்கைந்து மொழிகளில் சீன மொழியைத் தேர்ந்தெடுக்கக் காரணங்கள் இரண்டு: 1. எனக்குச் சீனமொழி துளியும் தெரியாது. 2. அது உலகின் மிகக் கடினமான மொழிகளில் ஒன்று என்று சொன்னார்கள்.
பிறகு நடந்தவை, வரலாறு. எனது ஐந்து நூல்களில் இரண்டு சீனமொழியை அறிமுகப்படுத்துவன. மீதி இரண்டும் சீனமொழியிலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்புகள். அதில் முதலில் வந்த ‘கவித்தொகை: சீனாவின் சங்க இலக்கியம்’ என்கிற நூல் தான் சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பில் வந்த முதல் நூல் என்று தெரியவந்தபோது, எனது பள்ளிக்கால மொழிப்பாட மதிப்பெண்களையும் நினைத்துக்கொண்டேன்.
மொழி கற்றல் என்பதும் ஒரு திறமை தான். சரியான வழிகாட்டல் இருந்தால், யாரும் புது மொழிகளைக் கற்று பல மனங்களையும் புத்தம்புது உலகங்களையும் திறக்கலாம். இந்தக் காலத்தில் இது இன்னும் எளிதாகியிருக்கிறது.
ஆனால், இப்போதைய எல்லா விஷயங்களையும் போல, இதிலும் உங்கள் வழிகாட்டிகளை கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்தப் பின்னணியில், மொழி கற்றல் பற்றிய அடிப்படைகளைத் தொடும் நூல்கள் எனக்குப் பிரியமானவை. நடைமுறையில் பயன்படும் விஷயங்களை எளிதாகச் சொல்லும் நூல்கள் அரிது. அவற்றில் நிச்சயமாக இடம்பெற வேண்டிய நூல் இது: Fluent Forever: How to Learn Any Language Fast and Never Forget It by Gabriel Wyner (“எப்போதும் சரளமாக: எந்த மொழியையும் விரைவாகக் கற்றுக்கொள்வதும் அதை மறக்காமல் இருப்பதும் எப்படி?” - கேப்ரியல் வைனர்)
Fluent Forever என்கிற மொழி கற்கும் இணைய தளத்தை நிறுவி, அதன் மூலம் தனது மொழி கற்கும் வழிமுறைகளைச் சொல்லித்தரும் கேப்ரியல் வைனர், அமெரிக்காவில் மேற்கத்திய செவ்விசைப் பாடகர். ஐரோப்பா சென்று இசை கற்றுக்கொண்டபோது மொழி தடையாக இருக்கவே, மொழி கற்றல் பற்றிய அடிப்படைகளை உள்வாங்கிக்கொண்டு வெற்றி கண்டவர். இப்போது பன்மொழி வல்லுனர் (polyglot).
அவருடைய நூலை அறிமுகம் செய்து, அதிலுள்ள முக்கிய விஷயங்களைப் பேசியிருக்கிறேன்.
***
🌐📷💙🦜👔📽️ bio.link/dharan
***
நான் யார்?
🌳 ஸ்ரீதரன். சென்னை.
👔 இந்திய அயலுறவுத்துறை (Indian Foreign Service). எனவே, நாடோடி.
📕 உலகில் முதலாவதாக: சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பு நூலின் ஆசிரியர் ('வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை'). இலக்கியம்/சீனமொழி/சைக்கிள் பயணம் பற்றி 5 நூல்களின் ஆசிரியர்.
Music Vlad Gluschenko - Autumn Walk - Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0

Пікірлер: 30

  • @dhanaassociate7009
    @dhanaassociate7009 Жыл бұрын

    புதிய மொழியையும், புதிய விஷயங்களையும் கற்றுக் கொள்ள துடிக்கும் அனைவருக்கும் மிக சிறந்த பாடம்.

  • @Payani

    @Payani

    Жыл бұрын

    மிக்க நன்றிங்க! 🙏🌺🌹

  • @krishna_saadhu
    @krishna_saadhuКүн бұрын

    Wow.very interesting sir. I am a portrait artist. Not only i have passion of english language. I have been studying vocabulary everyday

  • @muhammedibrahim4980
    @muhammedibrahim4980 Жыл бұрын

    அருமை ஐயா, நன்றி சார். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். F = -F கூற்றின் படி உங்களுக்கும் நல்லவை விளையட்டும் ...

  • @Payani

    @Payani

    Жыл бұрын

    மிக்க நன்றிங்க! 🌻

  • @sugumaranb1986
    @sugumaranb19862 күн бұрын

    Super sir thank you

  • @srinivasaraghavan9214
    @srinivasaraghavan9214 Жыл бұрын

    சிறப்பு சார் 🌹 மேலும் தங்களது பதிவுகள் சிறக்க வாழ்த்துக்கள் 🌺

  • @Payani

    @Payani

    Жыл бұрын

    மிக்க நன்றிங்க! 🙌

  • @ArunPrasathTKR
    @ArunPrasathTKR2 ай бұрын

    Useful Video, Thank you for sharing this wonderful video

  • @Payani

    @Payani

    Ай бұрын

    You are most welcome. Cheers!

  • @shunmugapriyai801
    @shunmugapriyai8016 ай бұрын

    Thank you master

  • @Payani

    @Payani

    3 ай бұрын

    மிக்க நன்றி, ஷண்முகப்ரியா! 🙏

  • @Johabz
    @Johabz6 ай бұрын

    Valuable information

  • @Payani

    @Payani

    3 ай бұрын

    Glad you think so! மிக்க நன்றிங்க! 🌸

  • @sivakumar-qs6se
    @sivakumar-qs6se7 ай бұрын

    Thank you sir

  • @Payani

    @Payani

    3 ай бұрын

    மிக்க நன்றிங்க! 🌸

  • @srinivasaraghavan9214
    @srinivasaraghavan9214 Жыл бұрын

    பிரமாதமான வீடியோ சார் தங்களது பணி சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளது வாழ்த்துக்கள் 🌺🌹

  • @Payani

    @Payani

    Жыл бұрын

    நன்றிங்க! 🙏

  • @kumaranramarajj2833
    @kumaranramarajj2833 Жыл бұрын

    Thank you, Sir. I am following and you are my inspiration, sir. In my school days, most of the words are mispronounced by my school teacher since I studied in a Tamil Govt school so if anyone pronounces the words in differently I don't feel comfortable and felt very bad. Is it possible to learn pronunciation properly now? 1. Pronunciation 2. No translation 3. SRS - Spaced Repetition. Thank you, sir. Feeling interested to learn after watching your videos. Thank you so much sir !

  • @Payani

    @Payani

    Жыл бұрын

    Excellent. உச்சரிப்பைக் கற்றுக்கொள்ள இப்போதெல்லாம் நிறைய வழிகள் உள்ளன. சும்மா, யூடியூபில் 'How to pronounce [comfortable / excellent / omnipresent]?" என்று தேடினாலே போதும். Google search கூட இப்போதெல்லாம் உச்சரிப்பு (வாயசைப்பு உற்பட) உதவி தருகிறது. இந்தச் சானல்களையும் பார்க்கலாம்: www.youtube.com/@bbclearningenglish www.youtube.com/@englishwithcollinsdictionary Best wishes.

  • @SasirekaPanchacharam
    @SasirekaPanchacharamАй бұрын

    Great sir

  • @Payani

    @Payani

    23 күн бұрын

    மிக்க நன்றிங்க! 🙏

  • @raghuramsrinivasan1371
    @raghuramsrinivasan1371 Жыл бұрын

  • @Payani

    @Payani

    Жыл бұрын

    🌸🙏🌹

  • @rameshm425
    @rameshm4258 ай бұрын

    Good message sir. I am 52 years old how to develop my english sir. Spoken &writing.

  • @Payani

    @Payani

    3 ай бұрын

    மிக்க நன்றிங்க! 🙌 Best wishes!

  • @yasswanth8472
    @yasswanth84727 ай бұрын

    Get a girlfriend or boyfriend in that particular language to learn faster

  • @Payani

    @Payani

    3 ай бұрын

    :-)

  • @shaaradhabaalub5571
    @shaaradhabaalub55716 ай бұрын

    Thank you so much sir ur video is very motivational for me im a student i need to contact you help me out to reach u sir im from chennai

  • @Payani

    @Payani

    3 ай бұрын

    நன்றிங்க! 🌻 Best wishes.