Namasivaya Pathigam I நமசிவாய வாழ்கI காதலாகி கசிந்து I மற்றுப்பற்றென I துஞ்சலும் I சொற்றுணை

Музыка

Sung by Thirumayilai Sargurunatha Othuvar நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10
ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15
ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் மோய உரைப்பன்யான் 20
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40
ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே
இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70
அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

Пікірлер: 448

  • @ramasubramaniangurumurthy3273
    @ramasubramaniangurumurthy3273Ай бұрын

    என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இப்பிறப்பில். ‌ஓம்‌ நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவாயநம திருச்சிற்றம்பலம் மிக மிக அருமையான இனிய குரல் அய்யா

  • @angulakshmir2969
    @angulakshmir2969 Жыл бұрын

    நான் இந்துவாக பிறந்து நல்ல குடும்ப த்தில்பிறந்துகண்இருந்தும்குருடாகி இருந்துவிட்டேனே ஓம்நமசிவாயா

  • @chandaranchandaran4011
    @chandaranchandaran4011 Жыл бұрын

    உங்களுடைய குரல் அருமை உங்கள் பாடல் என்னை என் ஐயன் ஈசனிடம் அழைத்துச் சென்று விடுகிறது

  • @durairajsubramaniyam1981
    @durairajsubramaniyam19812 жыл бұрын

    திருச்சிற்றம்பலம். ஓதுவார் குரல்வளம் அருமையாக உள்ளது. சிவாய நமக தில்லை நடராஜர் அருள்கிடைக்க வேண்டும்.

  • @rajenrajendiran5603

    @rajenrajendiran5603

    Жыл бұрын

    Sivaya namah ayya

  • @subramonianganesan1541
    @subramonianganesan154110 ай бұрын

    உண்மையிலேயே மனதை உருக்கும் அருமையான குரல். சிவன் அருகில் சென்று வந்ததை போல் இருந்தது

  • @subbayasubbaya3949

    @subbayasubbaya3949

    7 ай бұрын

    னனனன

  • @user-ou8yx9uc2p

    @user-ou8yx9uc2p

    4 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @d.balajidamodaran4655
    @d.balajidamodaran46556 ай бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @chellappans3992
    @chellappans3992 Жыл бұрын

    சட்டென என் கவனத்தை ஈர்த்த சிவனடியார் பாடல் இது தான் . எனவே உடனே download பண்ணி விட்டேன்

  • @Premavathi-lu5jo

    @Premavathi-lu5jo

    Жыл бұрын

    CT❤

  • @vivegamharish.d7934
    @vivegamharish.d7934 Жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் சிவாயநம

  • @A-Thirunavukkarasu23
    @A-Thirunavukkarasu23Ай бұрын

    மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப் பாத மேமனம் பாவித்தேன் பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற வாத தன்மைவந் தெய்தினேன் கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே. 1 இட்ட னும்மடி யேத்து வார்இகழ்ந் திட்ட நாள்மறந் திட்டநாள் கெட்ட நாளிவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரி வட்ட வாசிகை கொண்ட டிதொழு தேத்து பாண்டிக் கொடுமுடி நட்ட வாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே. 2 ஓவு நாளுணர் வழியும் நாளுயிர் போகும் நாளுயர் பாடைமேல் காவு நாளிவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரிப் பாவு தண்புனல் வந்தி ழிபரஞ் சோதி பாண்டிக் கொடுமுடி நாவ லாஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே. 3 எல்லை யில்புகழ் எம்பி ரானெந்தை தம்பி ரானென்பொன் மாமணி கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி காவி ரியதன் வாய்க்கரை நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி வல்ல வாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே. 4 அஞ்சி னார்க்கரண் ஆதி யென்றடி யேனும் நான்மிக அஞ்சினேன் அஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள் நல்கி னாய்க்கழி கின்றதென் பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந் தாடு பாண்டிக் கொடுமுடி நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே. 5 ஏடு வானிளந் திங்கள் சூடினை என்பின் கொல்புலித் தோலின்மேல் ஆடு பாம்பத ரைக்க சைத்த அழக னேயந்தண் காவிரிப் பாடு தண்புனல் வந்தி ழிபரஞ் சோதி பாண்டிக் கொடுமுடி சேட னேயுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே. 6 விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந் தேன்வி னைகளும் விண்டனன் நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற நின்ற காவிரிக் கோட்டிடைக் குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந் தாடு பாண்டிக் கொடுமுடி விரும்ப னேயுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே. 7 செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந் தீயெ ழச்சிலை கோலினாய் வம்பு லாங்குழ லாளைப் பாகம மர்ந்து காவிரிக் கோட்டிடைக் கொம்பின் மேற்குயில் கூவ மாமயி லாடு பாண்டிக் கொடுமுடி நம்ப னேயுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே. 8 சார ணன்தந்தை எம்பி ரானெந்தை தம்பிரா னென்பொன்மா மணியென்று பேரெ ணாயிர கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார் நார ணன்பிர மன்றொ ழுங்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடிக் கார ணாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே. 9 கோணி யபிறை சூடியைக் கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப் பித்த னைப்பிறப் பில்லியைப் பாணு லாவரி வண்ட றைகொன்றைத் தார னைப்படப் பாம்பரை நாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை சொல்லு வார்க்கில்லை துன்பமே.

  • @ramkumarRK05
    @ramkumarRK05 Жыл бұрын

    ஓம் நமசிவாய சிவாய நம

  • @rajA-hc2rs
    @rajA-hc2rs11 ай бұрын

    ஓம் நமசிவாய நன்றி கோடி கோடி ஐயா இனிமையான பதிவு. தவமும் தவம் உடையார்க்கே ஆகும். சிவ நா.மதி

  • @balachandar694

    @balachandar694

    9 ай бұрын

    இந்த நமச்சிவாய பதிகத்தை செவிமடுப்பதற்கே நாம் மிகுந்த புண்ணியம் செய்திருக்க வேண்டும். இந்த அருமையான ஈடில்லா பதிகங்களை கேட்டு ரசித்து ருசித்தாலே போதும் எல்லாம் வல்ல அந்த நமசிவாயன் நம் மனதிலே அமர்ந்து திருவருள் புரிவான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. திருச்சிற்றம்பலம்.

  • @user-ou8yx9uc2p
    @user-ou8yx9uc2p4 ай бұрын

    ஓம் நமசிவாய. மயக்கும் குரல் மனம் சிவன் உள்ளே சென்றுவிட்டது. நன்றி

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Жыл бұрын

    தேனினும் இனிய குரலில் தாங்கள் மனம் உருகிப் பாடியதோடு அல்லாமல் எங்கள் மனமும் உருகும் படியாகப்பாடி எங்கள் மனதை இறைவனோடு லயிக்கும் படி செய்துவிட்டீர்கள். இறைவனுக்கும் தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் .

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 Жыл бұрын

    ஓம் நமச்சிவாய அருமையான குரல் வளம் தங்களுக்கு தங்களின் இறை பணி தொடரட்டும் ஓம் நமச்சிவாய🙏🙏🙏

  • @mohans9383
    @mohans9383 Жыл бұрын

    திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏🙏🙏🙏nalvar🙏🙏🙏🙏🙏malarati🙏🙏🌹போற்றி. Sadguru🙏நாதன் 🌹🌹🌹iyyapani🙏தொடரட்டும். 🙏🙏🙏🙏திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramachandranrajagopalan7709
    @ramachandranrajagopalan7709 Жыл бұрын

    தேனினும் இனிய பதிகங்கள் தெய்வீக குரல் சிவனடி சேர்க்கிறது எப்படி இசையோடு பாடுவது என்று சிந்தித்தேன் ஆனால் சிவனருளால் கூடவே பாடினேன். இன்னிசையாலும் இறையருளாலும் இப்பொழுது நன்றாகவே பாடமுடிகிறது ஓதுவார் திரு சற்குருநாதருடைய இனிய குரல்வளம் சக்தி வாய்ந்தது. நன்றி பல சிவனடி போற்றி போற்றி

  • @GOWTHAMGOWTHAMAN007-db9bx
    @GOWTHAMGOWTHAMAN007-db9bx Жыл бұрын

    சிவாயநம 🙏

  • @chellappans3992
    @chellappans3992 Жыл бұрын

    இதை கேட்க கேட்க மனம் அமைதி அடைவது தின்னம்

  • @SannasiSithar
    @SannasiSithar5 ай бұрын

    ❤ I love my india my hindu only ❤ birth of live and death me hindu soul ❤❤❤

  • @vennilavennila537
    @vennilavennila5378 ай бұрын

    ஓம் நமசிவாய பாப்பா போற்றி 🪔🙏🔱🕉️🌹🍎🌷🌼💐🔔🛕🌟👏👍👌🎉🕌😍🏠🌚🥵🕺😣🌜💃👋🌛😩😞😪🇾🇪

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman99013 жыл бұрын

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺திருவாலவாய்🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌻🔱

  • @annapooranamthiruvarul368
    @annapooranamthiruvarul3682 жыл бұрын

    நாதன் நாமம் நமசிவாயவே ! நன்றி வாழ்த்துக்கள🙏

  • @shivashangkareeshangkaree4064
    @shivashangkareeshangkaree406411 ай бұрын

    ஓம் நமச்சிவாய

  • @phandu7288
    @phandu72885 ай бұрын

    சிவாய திரு சிற்றம்பலம் 🙏

  • @sengottuvelu9916
    @sengottuvelu99162 жыл бұрын

    நன்று. வார்த்தைகள் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. நல்ல குரல் வளம். பதிகத்தை கேட்டு சிவனே என்று இருந்தாலே இறையருள் கிட்டும்.

  • @agriseeni7407

    @agriseeni7407

    2 жыл бұрын

    True sir

  • @ramasubramaniangurumurthy3273
    @ramasubramaniangurumurthy327319 күн бұрын

    நமச்சிவாய பதிகம் மிக மிக அருமையான இனியது அய்யா. தங்கள் இசைப் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @om8387
    @om83873 ай бұрын

    ஓம் நமசிவாய நாதன் ஒருவனே நமக்கென்றும் துணையே அவன் பாதகமலமே பற்றிப்பிடிப்போமே ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக

  • @kankiritharan3418
    @kankiritharan3418 Жыл бұрын

    நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லு நா நமச்சிவாயவே 🙏

  • @kris2161
    @kris21612 жыл бұрын

    கோ.முருகன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @kanagasabapathykanagasabai7313
    @kanagasabapathykanagasabai7313 Жыл бұрын

    ஓம் நமசிவாய நமசிவாய 🙏🙏🙏

  • @gopalankuttyezhuthachan8953
    @gopalankuttyezhuthachan8953Ай бұрын

    Ohm Nama shivaya, ohm Nama shivaya, ohm Nama shivaya, ohm Nama Shivaya Ohm Nama Shivaya saranam, saranam, saranam,saranam, saranam 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔

  • @gowrimahadevan5420
    @gowrimahadevan54202 жыл бұрын

    Enna punniyam seidhomo iraivaa idhu kurala illai malaithenaa 🙏🙏🙏🙏🙏🌹⚘🌷🌻🌺om Namasivaya 🕉♥

  • @rajendranshankar2602

    @rajendranshankar2602

    Жыл бұрын

    Kombuthen!!

  • @kazhagesan2366
    @kazhagesan23662 жыл бұрын

    மனமே வாழ்வு சிறக்கும் வாழ்வு வாழ மனமே நேர்மையான வழியில் செல்ல நமசிவாய நாமம் ஒன்றே சிறப்பான பதிவு நன்றி ஐயா திரு ச்சிற்றம்பலம் சிவ சிவா

  • @vallamvallam5268
    @vallamvallam52686 ай бұрын

    நான் இந்துவாய் பிறந்ததை விட மனிதனாய் பிறவியுற்றதே பெருமை என்பேன்

  • @vanmathiprabhakaran545
    @vanmathiprabhakaran545 Жыл бұрын

    நன்னெறியாவது நமச்சிவாயவே ஓம் நமச்சிவாய

  • @vimalakumar9140
    @vimalakumar91402 жыл бұрын

    சிவராத்திரி நன்னாளில் இந்த பதிகங்கள் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. மிகவும் அருமையான குரல். ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @kulasingampuvaneshwary7462

    @kulasingampuvaneshwary7462

    Жыл бұрын

    Sivan song Arumagana Song

  • @jaisign3238

    @jaisign3238

    Жыл бұрын

    🥭🥭🍇🍎🍌

  • @kamalakumar9799
    @kamalakumar9799 Жыл бұрын

    சிவாய நம சிவாய என்னப்பன் சிவனுக்கே போற்றி

  • @chidambaramnarayanasamy9591
    @chidambaramnarayanasamy95913 ай бұрын

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devimohan3883
    @devimohan38832 жыл бұрын

    குரல் வளம் மிக அருமையாக உள்ள து. மிக தெளிவாக பாடியுள்ளார் பின்னனி இசை சற்றுகுறைவாக இருந்தால் தேவாரம் பயில்பவர்களுக்கு மிக தெளிவாக இருக்கும் இது எங்களைப் போன்று பயில்பவர்களின் கருத்து 🙏🙏🙏

  • @sachchithananthamsubramani5812
    @sachchithananthamsubramani5812Ай бұрын

    ஓம் நமசிவாய போற்றி

  • @kalavathidevijeyachandhira124
    @kalavathidevijeyachandhira124 Жыл бұрын

    Arumai Touch my heart

  • @krishnanm2100
    @krishnanm21006 ай бұрын

    சிவபுராணம் கேட்டு மகிழ்ந்தேன்

  • @jayakrishnant4128
    @jayakrishnant41282 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nil487
    @nil487Ай бұрын

    Morning sivan songs Mana amaithikku vazhi vaguthathathu. Avan andri oar anuvum asaiyaathu. Nandri displaying. namaste

  • @balasubramani1855
    @balasubramani18553 ай бұрын

    Om Nama Sivaya

  • @rajendrans1217
    @rajendrans12176 ай бұрын

    இன்னிசைகேட்டுஇன்புறசெவித்திறன்அருளும்சிவனேபோற்றி போற்றி.

  • @s.muruganandham7061
    @s.muruganandham70612 жыл бұрын

    👣🌺🌺🌺🙏🙏🙏 நமஸ்காரம் நன்றி ஐயா மிகவும் அருமை அருமை 🙏💐 திருச்சிற்றம்பலம் 🙏

  • @karthikeyanr6023
    @karthikeyanr6023 Жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abimaki3692
    @abimaki3692 Жыл бұрын

    ஓம் நமசிவாய 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @manirajah811
    @manirajah8112 жыл бұрын

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்👍🙏🏽

  • @cpet396
    @cpet3963 жыл бұрын

    சிவாயநம. .சிவாயநம. .சிவாயநம. .🙏திருச்சிற்றம்பலம். . .

  • @kapilesh.pkapil839
    @kapilesh.pkapil8396 ай бұрын

    ஓம் நமசிவாய

  • @kingsmediatv9085
    @kingsmediatv90853 ай бұрын

    Thiruvasagapperumale Potti Potti ❤❤❤ Thiruvasagapperumale Potti Potti ❤❤❤ Thiruvasagapperumale Potti Potti ❤❤❤

  • @ganeshn.k.g9712
    @ganeshn.k.g9712 Жыл бұрын

    அருமை ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @irulandimuthu8606
    @irulandimuthu86062 жыл бұрын

    ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம சங்கரனாரேநின்பாதம்போற்றிபோற்றி சதாசிவனாரேநின்பாதம்போற்றிபோற்றி பொங்கரவனாரேநின்பாதம்போற்றிபோற்றி புண்ணியனாரேநின்பாதம்போற்றிபோற்றி அங்கமலத்துஅயனோடுமாலுங்கானரேஅனலுருவனாரேநின் பாதம்போற்றிபோற்றி செங்கமலதிருப்பாதம்போற்றிபோற்றி திருமூலட்டானவரேநின்பாதம்போற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரர்தந்தையாரேமங்களேஸ்வரிதாயாரேபோற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌺🌸🏵💮☘️🥀💐🍀🌷🌼🍌🍌🍇🍋🍒🍐🍉🍍🍊🍎🍓🌾🍬🥥🥥⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @thangamanim2036
    @thangamanim20362 жыл бұрын

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @murgeshan3161
    @murgeshan31612 жыл бұрын

    சிவ சிவ திருச்சிற்றம்பலம் சிவ திருச்சிற்றம்பலம்

  • @hariharanpr8561
    @hariharanpr8561 Жыл бұрын

    அற்புதக்குரல்வளம். அமைதிதவழ்கின்ற ஆலயத்தில் ஆன்மீகஅதிர்வுகளை அனைவருக்கும் அலைபாயச்செய்யும்குரல்!

  • @vathsalabhavithra8479
    @vathsalabhavithra8479Ай бұрын

    இனி ஒரு பிறவி வேண்டாம் பிறந்தாலும் சிவனை மறவாத நிலை வேண்டும்

  • @ShaishanmukaSri
    @ShaishanmukaSri5 ай бұрын

    Om Siva Sivayaa Namaha thiruchitambala Nathan tiruvadigal potri🙏🙏🙏🙏🙏

  • @kamalakkannans2952
    @kamalakkannans29522 жыл бұрын

    கேட்க மிகவும் அருமையான பாடல்கள். இனிமையான தொனி.🙏திருச்சிற்றம்பலம்.

  • @radhakavi6724

    @radhakavi6724

    Жыл бұрын

    Sweet voice.divine song. Ohm Namasivaya namaha 🙏🙏

  • @saravanansakthivel6403
    @saravanansakthivel64032 жыл бұрын

    🙏திருச்சிற்றம்பலம். .

  • @user-gq2tp4vt1y
    @user-gq2tp4vt1y3 ай бұрын

    Om namah shivaya

  • @paramasivam4695
    @paramasivam46955 ай бұрын

    Omnamasivayam.valha. valhavalamutan ❤

  • @BTSLOVER-ee5vm
    @BTSLOVER-ee5vm2 жыл бұрын

    🙏🙏🙏🙏ஓம் நமசிவாய 🌿 🌿 🌿 🌿 🌾🌾🌾🌾🌾🤲🤲🤲🤲🤲🤲காபலி போற்றி

  • @user-qb1kd8wo5s
    @user-qb1kd8wo5s18 күн бұрын

    Super உங்கள் குரல் வாழ்கவளமுடன்

  • @kamalakumar9799
    @kamalakumar9799 Жыл бұрын

    திருச்சிற்றம்பலம் சிவனே போற்றி போற்றி

  • @thirunavukarasus1516
    @thirunavukarasus15165 ай бұрын

    Ohm nameshivaya porti porti porti

  • @muthumuthu1-jh1nk
    @muthumuthu1-jh1nk Жыл бұрын

    Om namachivaya🙏🙏🙏

  • @dshankar294
    @dshankar2942 жыл бұрын

    கேட்க மிகவும் அருமையான பாடல்கள். இனிமையான தொனி

  • @arumugamsanthi6706

    @arumugamsanthi6706

    2 жыл бұрын

    தெளிவான கணீரென்ற உச்சரிப்பு நல்லிசைப்பயிற்சி.முற்பிறவி பயன். வாழ்ங வளமுடன்

  • @vasudevangopal2448
    @vasudevangopal24482 жыл бұрын

    எத்தனை பிறவி எடுத்தாலும் sivabakthanave பிறக்க வேண்டும்

  • @snarendran8300

    @snarendran8300

    2 жыл бұрын

    நண்பரே! மனிதனுக்கு ஒரே பிறவி தான் என்பதை "இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே" என்று சிவவாக்கியச் சித்தர் ஆணித்தரமாக பாடுகிறார். "அரிது அரிது மானிடரா ய்ப் பிறத்தல் அரிது" என்று பாடுகிறார் ஔவையார். மனிதனாகப் பிறப்பதே அரிது அல்லவா? அப்படி அரிதாகக் கிடைத்த மானிடப் பிறவியில் செய்ய வேண்டிய அருங்கடமை இருக்குமல்லவா? அது என்ன?

  • @purushothamang3894
    @purushothamang38944 ай бұрын

    ஓம்நமச்சிவாய வாழ்க😊😊

  • @gadikachalamgadikachalam2712
    @gadikachalamgadikachalam2712 Жыл бұрын

    சிவன் பார்வதி அம்மாள் பாடல்கள் அருமையாகமனம்இனிமைஉள்ளது

  • @chithiraikumar4793
    @chithiraikumar47936 ай бұрын

    ஓம் சிவாய நமஹ

  • @meenakshichalapathy7994

    @meenakshichalapathy7994

    Ай бұрын

    Om nama Shivaya ❤Om nama Shivaya ❤Om nama Shivaya ❤om nama Shivaya ❤om nama Shivaya ❤

  • @krishnanjay354
    @krishnanjay354 Жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க

  • @schoolbreeze8021
    @schoolbreeze80212 жыл бұрын

    அற்புதமாக இசைத்துள்ளீர்கள். மிக்க மிக்க நன்றி.

  • @bamabama3963
    @bamabama39635 ай бұрын

    சிவாயநம❤❤❤❤

  • @user-qr2qs4vp7k
    @user-qr2qs4vp7k4 ай бұрын

    Arumayana padhigam,Aromayana kuralvalam,Om Namashivaya,Mylai Kapaleeswarar Potri.

  • @mathevenpillaia8829
    @mathevenpillaia88293 ай бұрын

    ஓம்

  • @karthigeyanv.p5441
    @karthigeyanv.p54412 жыл бұрын

    உள்ளம்உருகும் சிவபுராணம்

  • @vijayalakshmichidambaram478
    @vijayalakshmichidambaram478 Жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻 நமசிவாய வாழ்க 🌷🌷🥀🌷🌷🙏🏻🙏🏻🙏🏻

  • @user-qb1kd8wo5s
    @user-qb1kd8wo5sАй бұрын

    வாழ்கவளமுடன் God bless all Thanks for this Thiruvasagam

  • @RamMurthiKrishnamurthi
    @RamMurthiKrishnamurthi3 ай бұрын

    🙏🏻Om Namashivaya🙏🏻

  • @shenbagavallit305
    @shenbagavallit3055 ай бұрын

    Omnamasivaya

  • @JAISEELANERAIMAINDAN
    @JAISEELANERAIMAINDAN2 жыл бұрын

    பாராட்ட வார்த்தை இல்லை, ஓம் நமசிவய

  • @muthukumar-rj8ik

    @muthukumar-rj8ik

    2 жыл бұрын

    சிவ சிவ, மிக மிக அருமை🙏🙏🙏🙏

  • @rathinavadivel6658

    @rathinavadivel6658

    2 жыл бұрын

    @@muthukumar-rj8ik ஏ

  • @SelvaSornam
    @SelvaSornam2 жыл бұрын

    வார்த்தைக்கு வார்த்தை நடராஜர் நடனமிடுவது போல் உள்ளதது, ஐயா அவர்களின் குரல்.....நன்றி!

  • @ponnammalr.p3409

    @ponnammalr.p3409

    2 жыл бұрын

    Super

  • @kumarmagesh8675

    @kumarmagesh8675

    Жыл бұрын

    @@ponnammalr.p3409 you u

  • @rajendranshankar2602

    @rajendranshankar2602

    Жыл бұрын

    True

  • @kazhagesan2366
    @kazhagesan23662 жыл бұрын

    ஓம் நமசிவாய போற்றி போற்றி நாதன் தாழ் போற்றி ஓம் நமசிவாய வே

  • @lataparameshwaran2470
    @lataparameshwaran24705 ай бұрын

    Om Namashivaya 🙏

  • @poosaithuraichi662
    @poosaithuraichi662 Жыл бұрын

    நமசிவாய

  • @ramasamysampoornam1454
    @ramasamysampoornam1454 Жыл бұрын

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏

  • @kumarvadamalaimuthu6230
    @kumarvadamalaimuthu62302 жыл бұрын

    Om namashivayam 🙏

  • @vijayalakshmichidambaram478
    @vijayalakshmichidambaram4787 ай бұрын

    🙏🙏🙏 போற்றி ஓம் நமசிவாய 💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @arunaarumugam2340

    @arunaarumugam2340

    4 ай бұрын

    நெஞ்சை வருடிவிட்டதைய்யா நன்றி

  • @vijayalakshmichidambaram478

    @vijayalakshmichidambaram478

    4 ай бұрын

    @@arunaarumugam2340 🙏🙏🙏உண்மை

  • @jayaram6716
    @jayaram67163 ай бұрын

    Super. Kural valam nimathiyga. Irundadu

  • @jithangrapics4966
    @jithangrapics49664 ай бұрын

    Om namachivaya

  • @chitraranganathan6040
    @chitraranganathan60405 ай бұрын

    🙏🏼🙏🏼 Om namasivaya

  • @purushothamang3894
    @purushothamang3894 Жыл бұрын

    வாழ்கவளமுடன்.பாடியவர் குரல் மிக அருமை

  • @seethabalagopal8978
    @seethabalagopal897810 ай бұрын

    En nenjil eppodhum shivandhan!

  • @a.kalaramana.kalaraman6777
    @a.kalaramana.kalaraman67772 жыл бұрын

    Om namasivaya, very very nice beautiful voice,sivapuranam continue sir.siva Sri,A.kalaraman harmonistar.tindivanam.

  • @tharmairai8171
    @tharmairai81712 жыл бұрын

    Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya Namasivaya

  • @masilamani3920
    @masilamani39206 ай бұрын

    ஓம்நமசிவாய போற்றி !!!

Келесі