எளிய உவமைகள் மூலம் ஸ்ரீராமகிருஷ்ணர் அருளிய அறிவுரைகள்-4

சத்வ குணம் மிக்கவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா? அவர்களுடைய வீடு அங்கும் இங்கும் இடிந்து கிடக்கும். அதைப் பழுது பார்க்க மாட்டார்கள். பூஜையறையில் புறாக்கள் அசுத்தம் செய்யும். முற்றத்தில் பாசி படிந்திருக்கும். அதை யெல்லாம் பற்றிகவலைப் படவே மாட்டார்கள். மேஜை நாற்காலி எல்லாம் பழையனவாகவே இருக்கும், அவற்றை அழகாக வைக்க வேண்டும் என்று முயற்சி செய்ய மாட்டார்கள். உடுப்பதற்கு ஏதோ துணி என்று ஒன்று இருந்தால் போதும். இவர்கள் மிகவும் கருணை நிறைந்தவர்கள், ஒழுக்கம் உடையவர்கள், கபடம் இல்லாதவர்கள், சாந்தமானவர்கள். யாருக்கும் எந்த தீமையும் செய்ய மாட்டார்கள்.
ரஜோ குண மனிதர்களுக்கும் சில அடையாளங்கள் உண்டு. கைக் கடிகாரம், அதில் செயின், விரலில் இரண்டு மூன்று மோதிரங்கள் இவற்றோடு அவர்கள் காட்சியளிப்பார்கள். வீட்டிலுள்ள மரச் சாமான்கள் பளபளப்பாக இருக்கும். சுவர்களில் குயீன். இளவரசர், மற்றும் பெரிய மனிதர்களின் படங்கள் எல்லாம் மாட்டப்பட்டிருக்கும். வீடு சுண்ணாம்பு அடித்து ஒரு கீறல் கூட இல்லாமல் பளிச்சென்று இருக்கும். பலவிதமான அழகிய துணிகள் இருக்கும். வேலைக் காரர்கள் கூட நல்ல உடைகள் உடுத்தியிருப்பார்கள். இப்படி பல விஷயங்கள்.
தமோ குண மனிதர்களின் அடையாளங்கள் தூக்கம், காமம், குரோதம், அகங்காரம்.
பக்தியிலும் சத்வ குணம் உள்ளது.சத்வ குண பக்தன் மிகவும் ரகசியமாக தியானம் செய்வான். சில வேளைகளில் கொசுவலைக்குள் உட்கார்ந்தும் தியானம் செய்வான். இவன் தூங்குகிறான்” ஒரு வேளை இரவெல்லாம் தக்கம் இல்லையோ என்னவோ? அதனால் தான் இன்னும் படுக்கையிலேயே கிடக்கிறான்” என்று மற்றவர்கள் நினைப்பார்கள். பசியைப்போக்கும் அளவுக்குத் தான் உடல் மீது கவனம் செலுத்துவான். இவனுக்குச்சோறும் கீரையும் கிடைத்தாலே போதும், சுவையாகச் சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் எதுவும் இல்லை. உடையிலும் ஆடம்பரம் இருக்காது. வீட்டுச் சாமான்களும் சாதாரணமாகத்தான் இருக்கும். சத்வ குண பக்தன் ஒரு போதும் பிறரை முகஸ்துதி செய்து பணம் சம்பாதிக்க முயல மாட்டான்.
ரஜோ குண பக்தன் பொட்டு வைத்துக் கொள்வான். ருத்திராட்ச மாலை அணிந்திருப்பான். இதில் இடையிடையே தங்க மணிகள் கோர்க்கப் பட்டிருக்கும். பூஜை செய்யும்போது பட்டு உடுத்திக் கொள்வான்.
தமோகுண பக்தனிடம் நம்பிக்கை கொழுந்து விட்டு எரியும். பணத்தைப் பிடுங்குகின்ற கொள்ளைக் காரனைப்போல் இந்த பக்தன் இறைவனை வற்புறுத்துவான். அடி, உதை, கட்டு என்று கொள்ளைக் காரனது வழியே இவனிடம் காணப்படும்.
தமோ குணத்தின் போக்கைத் திருப்பி விட்டால் இறையனுபூதி வாய்க்கிறது. இறைவனிடம் அடம் பிடி. அவர் வேற்று மனிதர் அல்லவே. அவர் நமக்கு உரியவர் அல்லவா! நம் உறவினர். இன்னும் கேள். இந்த தமோ குணத்தையே பிறரது நன்மைக்காகவும் பயன்படுத்தலாம்.
முதல் தரம், இடைதரம், கடைத்தரம் என்று வைத்தியர்கள் மூவகையினர். எந்த வைத்தியன் நாடியை பரிசோதித்துப் பார்த்துவிட்டு, மருந்து சாப்பிடு” என்று மட்டும் சொல்லி விட்டுப்போய் விடுகிறானோ அவன் கடைத்தரம். நோயாளி மருந்து சாப்பிட்டானாஇல்லையா என்பதை ப் பற்றிஅவன் விசாரிப்பதில்லை.
மருந்து சாப்பிடும் படி நோயாளியை பல விதங்களில் கேட்டுக்கொள்பவன் இடைத்தர வைத்தியன். அவன் நோயாளியிடம், இதோ பார்” மருந்து சாப்பிடு. சாப்பிடா விட்டால் எவ்வாறு குணமடைவாய்? இந்த மருந்தைச் சாப்பிடு. இதோ நானே குழைத்துத் தருகிறேன்” வாயைத் திற” என்றெல்லாம் இனிமையாகப்பேசி மருந்து சாப்பிட வைப்பான். எவ்வளவு வற்புறுத்தியும், இதமாகக் கூறியும் நோயாளி மருந்தைச் சாப்பிட மறுக்கிறான் என்று கண்டால் அவனைக் கீழே தள்ளி மார்பில் முட்டியை ஊன்றிக் கட்டாயப்படுத்தி மருந்து சாப்பிட வைப்பவன் முதல் தர வைத்தியன். ஆனால் இந்த குணத்தால் நோயாளிக்கு நன்மை ஏற்படுகிறது. தீமை ஏற்படுவதில்லை.
வைத்தியர்களைப்போல் ஆச்சாரியர்களும்மூன்று வகையினர். சீடர்களுக்கு உபதேசம் மட்டும் செய்துவிட்டு, அவர்களைப் பற்றி எந்தவிதமான அக்கறையும் கொள்ளாதவர் கடைத்தரம். எந்த ஆச்சாரியர் சீடர்களின் நன்மைக்காக திரும்பத் திரும்ப விளக்குகிறாரோ, அதன் மூலம் உபதேசங்களின் உட்கருத்துக்களைச் சீடர்கள்அறிந்து கொள்ளுமாறு செய்கிறாரோ, பல வகைகளில் அவர்களைத் தூண்டுகிறாரோ, நெருங்கிப் பழகி அன்பு காட்டுகிறாரோ அவர் இடைத்தர ஆச்சாரியர். சீடர்கள் எந்த விதத்திலும் உபதேசங்களைப் பின்பற்ற வில்லை என்று கண்டால் சில ஆச்சாரியர்கள் அவர்களைப் பல வந்தப் படுத்தவும் தயங்க மாட்டார்கள். அவர்களையே முதல் தர ஆச்சாரியர் என்கிறேன்.
ஒரு பிரம்ம பக்தர்-
கடவுள் உருவம் உடையவரா, உருவம் அற்றவரா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
அவர் இப்படிப்பட்டவர் என்று சொல்ல முடியாது. அவர் உருவம் இல்லாதவர். அது வேளையில் உருவம் உடையவரும் கூட. பக்தர்களுக்காக அவர் உருவம் தாங்குகிறார். யார் ஞானியோ, அதாவது யார் உலகத்தைக் கனவு போல் காண்கிறார்களோ, அவர்களுக்கு அவர் உருவம் அற்றவராக உள்ளார். தான் தனிப்பட்ட ஒருவன் என்பதும்் உலகம் தன்னிலிருந்து வேறுபட்ட ஒன்று என்பது பக்தனுக்குத் தெரியும். எனவே இறைவன் பக்தனுக்கு ஒரு தனி நபராக ஆகி காட்சி அளிக்கிறார். ஞானி, அதாவது வேதாந்த வாதி, இது அல்ல, இது அல்ல, என்று ஆராய்ச்சி செய்கிறான். இவ்வாறு ஆராய்ச்சி செய்து, நான் உண்மையல்ல, உலகமும் கனவு போல் உண்மையற்றது, என்பதை அகத்தில் உணர்கிறான். ஞானி பிரம்மத்தைத் தன்உணர்வில் உணர்கிறான். ஆனால் அவர் யார் என்பதைச் சொற்களால் சொல்ல அவனால் முடிவதில்லை.
அது எப்படி தெரியுமா? கங்கு கரையற்ற சச்சிதானந்தப்பெருங்கடலில் பக்தி என்னும் குளிர்ச்சியினால் தண்ணீர் அங்கங்கே உறைந்து பனிக்கட்டியாகிறது. திடமான பனிக்கட்டியாகி விடுகிறது. அதாவது, பக்தர்களுக்காக இறைவன் தனி நபராக வருகிறார். அதாவது சில வேளைகளில் உருவம் தாங்கி வருகிறார். ஞான சூரியன் உதித்தால் அந்தப் பனிக்கட்டி உருகி விடுகிறது. அப்போது இறைவன் உருவம் உடையவர் என்று உணர்வதில்லை. அவருடைய உருவக் காட்சி கிடைப்பதில்லை. அவர் யார் என்பதை வாயினால் சொல்ல முடியாது. யார் சொல்வது? யார்சொல்வானோ அவனே இல்லை. அவனது நான்- உணர்வு தேடினாலும் கிடைப்பதில்லை.

Пікірлер: 15

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lbАй бұрын

    நன்றி மகராஜ் ஜெய் ஶ்ரீ குரு மஹராஜிக் ஜெய்

  • @beautifulplace6678
    @beautifulplace66783 жыл бұрын

    நன்றி

  • @ponnusamyr3467
    @ponnusamyr34673 жыл бұрын

    அருமை மகிழ்ச்சி

  • @vijaya557
    @vijaya557 Жыл бұрын

    Thank you gurujii 👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran5033 жыл бұрын

    கோடிநமஸ்காரங்களும்நன்றிகளும்,சுவாமிஜி,🙏🙏🙏👌👌🙏🙏🙏

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam21043 жыл бұрын

    தங்களின் ஆன்மீக சொற்பொழிவு மிக அருமையாக எளிதில் புரியும்வண்ணம் உள்ளது ,நன்றி.உலக மாயவலையில் சிக்கிய நான் வெளியே வர உதவும் .

  • @saraswathis5102

    @saraswathis5102

    3 жыл бұрын

    ராமகிருஷ்ண பரமஹம்சர்..வாழ்வு... அனுபவம்.. வாழ்ந்து காட்டிய வர்கள்..

  • @vadivel1605
    @vadivel16053 жыл бұрын

    Vivekananda speech

  • @vijayakannan3054
    @vijayakannan30543 жыл бұрын

    Jai Guruji!🙏 Thank you.

  • @saraswathis5102
    @saraswathis51023 жыл бұрын

    Bhavaadhipati...R.K...பக்தர்களின் அரசன் அல்லவா... வாழ்க..ராமக்ருஷ்ணர்...

  • @robbowvinoth
    @robbowvinoth3 жыл бұрын

    🔯⚛️🕉️✡️👣✔️

  • @thangarajarumugam2237
    @thangarajarumugam22373 жыл бұрын

    Happy good matter to use matter in the speaker

  • @hemabaalu
    @hemabaalu3 жыл бұрын

    Jaya Jaya swamin Jaya Jaya

  • @AASUSID
    @AASUSID3 жыл бұрын

    🙏

  • @sankargopal3922
    @sankargopal39223 жыл бұрын

    நன்றி

Келесі