சுரங்கத்தை காவல் காக்கும் மம்மி?? மம்மியும் லிங்கமும் சேர்ந்து இருக்கும் வினோத குகை! |பிரவீன் மோகன்

ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - praveenmohantamil@gmail.com
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
00:00 - அறிமுகம்
01:18 - சவபெட்டிக்குள் மம்மியா?
04:03 - லிங்கம்
04:37 - தரைக்கடியில் மர்ம அறைகள்
05:30 - குகையின் வாசல்கள்
14:23 - இப்படி ஒரு அரியாசனமா?
15:41 - இது மனிதர்களுக்கானதா?
18:27 - குகைக்குள் ரகசிய தொட்டி
21:38 - விளக்கு வைக்கும் இடம்
22:29 - காற்றோட்டம் நிறைந்த குகை
24:01 - முடிவுரை
Hey guys, இந்த உலகத்துல இருக்கற குகைங்கள்ல-யே ரொம்ப விசித்திரமான குகைங்கள தான் நான் உங்களுக்கு காட்ட போறேன். இது கர்நாடகால இருக்கற சித்ரதுர்கா அப்படின்ற இடத்துக்கு பக்கத்துல இருக்கு. இப்போ இத பாக்குறதுக்கு ஒரு பழங்காலத்து கோவில் மாறி இருக்கு, correct-ஆ? ஆனா இந்த metal கதுவுங்க வழியா உள்ள போறப்ப, எல்லாமே மாறிடுது. இது full-ஆ அப்படியே கும்மிருட்டா இருக்குது, ஒண்ணுமே தெரில. என் கூட வந்த tour guide flash light அடிக்குறாரு, ஆனா கூட அந்த அளவுக்கு எதுவுமே தெரியல. அதனால கொஞ்சம் பெரிய light-அ அடிச்சு பாக்குறோம், இப்போ ஓரளவுக்கு தெரியுற மாறி இருக்கு.
என் கூட guide-அ கூப்ட்டுட்டு வரணும்ன்னு அவங்க என்னய கட்டாயப்படுத்துனாங்க, ஏன்னா இங்க ஒன்னுக்கொன்னு connect ஆகிருக்கற அறைங்க (chambers) நெறய இருக்குது. ஒரு வேளை நான் உள்ள போனதுக்கு அப்பறம் தொலைஞ்சு போய்ட்டா, எப்படி வெளில வர்றதுன்னு தெரியாது. ஆனா ஏன் யாரையுமே தனியா உள்ள போக விட மாட்றாங்க, அப்படின்றத்துக்கு பின்னாடி ஒரு ரகசியம் ஒளிஞ்சுட்டு இருக்குது.
இதனால தான் தனியா உள்ள போக விட மாட்றாங்க; ஒருவேள அங்க மனுஷனோட உடம்பு இருக்கலாம், பெட்டி மாறி இருக்கற இதுக்குள்ள மம்மி இருக்கலாம். அதாவது செத்து போன ஒரு மனுஷனோட உடம்ப இதுக்குள்ள பதப்படுத்தி வச்சுருக்கலாம். இங்க இருக்கற locals-அ பொறுத்த வரைக்கும், இதுக்குள்ள paradeshappa அப்படின்ற ஒருத்தர் rest எடுத்துட்டு இருக்காரு அவ்ளோதான். இது ரொம்ப வினோதமா இருக்கு, ஏன்னா பொதுவாவே செத்து போனதுக்கு அப்பறம் ஹிந்துக்கள் அந்த உடம்ப எரிக்க தான் செய்வாங்க. ஆனா இங்க சில விஷயம் ரொம்ப வித்தியாசமா இருக்கறத நம்மளால பாக்க முடியுது. இங்க புதுசா concrete பூச்சு போட்டுருக்கறத உங்களால பாக்க முடியும். கண்டிப்பா இத கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் பண்ணிருக்கணும்.
என் கூட வந்த guide இது எப்பவும் usual-ஆ பண்ற renovation தான்னு சொல்றாரு. அப்படி சொல்லிட்டு, இங்க இருந்து அவசர அவசரமா குகையோட வேற இடத்தை பாக்குறதுக்கு என்னய கூப்டுட்டு போய்ட்டாரு. ஆனா இன்னொரு பக்கத்துக்கு போனப்ப தான் நான் இத பாத்தேன். உள்ள என்ன இருக்குன்னு பாக்குறதுக்காக யாரோ இங்க ஓட்ட போட்டுருந்துருக்காங்க, அப்படி இல்லனா உள்ள இருக்கறத யாரோ சில பேர் கொள்ள அடிக்க முயற்சி பண்ணிருந்துருக்கணும். நல்லா உத்து பாருங்க, இது இயற்கையா சிதைஞ்சு போகல, யாரோ சில பேர் இத வேணுனே சிதைச்சுருக்காங்க. இந்த ஓட்டைய ஆழமா drill பண்ணி போட்டுருந்துருக்காங்க, இந்த ஓட்டையோட size கிட்டத்தட்ட மூணு inch diameter-க்கு இருக்கும்.
ஏன் யாரோ ஒருத்தர் இப்படி பண்ணனும்?
இத செஞ்சவங்க யாரு?
உண்மையிலேயே இதுக்குள்ள என்ன இருக்கு?
இதனால தான் இரும்பு கதவ போட்டு இந்த குகைய பூட்டி வச்சுருக்காங்கன்னு நான் நினைக்குறேன். இத யாரும் திறக்கல அப்படின்றத confirm பண்ணிக்கணும்ல, அதுக்காக தான் guide இல்லாம யாரயுமே உள்ள போக விட மாட்றாங்க. இந்த ஓட்டைய நான் இன்னும் நல்லா ஆராய்ச்சி பண்ண நினைக்குறேன். ஆனா என் கூட வந்த guide என்னய ஆராய்ச்சி பண்ண விடல, So நான் இப்போ இங்க இருந்து போகணும்.
ஆனா இதுக்கு மேல இருக்கறத பாக்குறப்ப எனக்கு கொஞ்சம் விசித்திரமா இருக்கு, ஒரு தலைகாணி மாறி இருக்கற elevation-அ, concrete-ல போட்டு வச்சுருக்காங்க. Night time-ல யாராவது இதுல படுத்து தூங்குறாங்களா? பக்கத்துல இருக்கற இந்த structure அ உங்களால பாக்க முடியுதா? செத்து போனவரோட பொருளுங்க இதுக்குள்ள இருக்குன்னு இங்க இருக்கற ஜனங்க எல்லாரும் சொல்றாங்க. பழங்காலத்துல வாழ்ந்த எகிப்து நாட்டுகாரங்க தான் இந்த மாறி சடங்குகள எல்லாம் பண்ணிருக்காங்க, Egyptians தான் செத்து போனவங்களோட பொருளுங்கள இப்படி அவங்களுக்கு பக்கத்துல பாதுகாத்து வைப்பாங்க, ஹிந்துக்கள் இந்த மாறி பண்ண மாட்டாங்க.
ஆனா திரும்பி பாக்கறப்ப தான் இதெல்லாத்தயும் விட ரொம்ப வினோதமான ஒரு விஷயத்தை என்னால பாக்க முடியுது. சவப்பெட்டிக்கு எதிர்லயே ஒரு சிவ லிங்கம் இருக்குது. Dead body-அ சாமி இருக்கற கருவறைக்குலயோ, இல்லனா சாமிக்கு பக்கத்துலயோ வைக்கறது ஹிந்து மதத்துக்கு எதிரானது. இந்த லிங்கத்துல இருந்து வித்தியாசமான smell வருது, இந்த லிங்கத்த நெறய கல்லுங்களால செஞ்சுருக்காங்க. ஆனா இங்க crazy-ஆன சில விஷயங்கள உங்களால பாக்க முடியும். லிங்கத்துக்கு பக்கத்துலயே தரைல ஒரு ஓட்டை போட்டுருக்காங்க. ஆனா இப்போ recent-ஆ தான் அதுல பெரிய பெரிய கல்லுங்கள போட்டு மூடி வச்சுருக்காங்க.
ஆனா உண்மையிலேயே இந்த லிங்கத்து மேல தண்ணி ஊத்துறப்ப, அந்த தண்ணி இந்த ஓட்ட வழியா கீழ போற மாறி இருந்துருக்கணும். ஆனா அந்த தண்ணி எங்க போகும்? கண்டிப்பா இதுக்கு கீழ இன்னொரு level ரொம்ப ஆழமா இருக்கணும். இந்த குகைல இருக்கற நெறய ரகசியமான இடங்கள seal பண்ணி வச்சுருக்காங்க. இதுக்கு என்ன காரணம்ன்னு தெளிவா தெரியல. உதாரணத்துக்கு, இத பாருங்க. இந்த வழிய இரும்பு கம்பி போட்டு மொத்தமா அடைச்சு வச்சுட்டாங்க. இங்க கம்பி போடுறது ஏன் அவ்ளோ முக்கியமான விஷயமா இருந்துச்சு? இதோட இன்னொரு பக்கத்துல என்ன இருக்கு? அவங்க நம்மகிட்ட இருந்து எத மறைக்குறாங்க?
#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Пікірлер: 494

    Келесі