வெற்றிலையின் ரகசியம்

வெற்றிலையின் ரகசிய பரிகாரம்
பணம், பெயர், புகழ் என எது இருந்தாலும் வாழ்வில் நடக்கும் ஏதோ ஒரு பிரச்சனை நம்முடைய மனநிம்மதியை எடுத்துக் கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட பிரச்சனைகள் வரும்போது, "என் வாழ்க்கையில் நேரமே சரியில்லை" என புலம்புவோம். இப்படிப்பட்ட உங்களுடைய கெட்ட நேரத்தையும், நல்ல நேரமாக மாற்ற இறைவனிடம் சரணாகதி அடைந்தால் போதும். அதற்காக செய்ய வேண்டிய பரிகாரத்தை இங்கு காணலாம்.
இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்கு மூன்றே பொருட்கள் தான் தேவை. அவை வெற்றிலை, தேங்காய் எண்ணெய்‌ மற்றும் பச்சை கற்பூரம். ஒரு சிறிய தாம்பூலத் தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தட்டின் மேல் ஒரு வெற்றிலையும் அதனமேல் ஒரு பச்சை கற்பூரத்தையும் வைத்து விடுங்கள். பச்சை கற்பூரத்தின் மேல் ஒரு சொட்டு மட்டும் தேங்காய்எண்ணெயை விடுங்கள். பிறகு இந்த தட்டை பூஜையறையில் வைத்து பச்சை கற்பூரத்தை ஏற்றி விடுங்கள். இப்படி தீபம் ஏற்றும் பொழுது தெய்வத்திடம் நாம் எந்த கோரிக்கை வைத்தாலும் நிறைவேறிவிடும். இந்த தீபத்தை நாம் தினந்தோறும் ஏற்ற வேண்டும்.
நீங்கள் ஒரு காரியத்திற்கான முயற்சிக்கு வெளியில் செல்லும் போது வெற்றிலையில் காம்பு நீக்கி சிறிது வெண்கடுகு வைத்து அதனை மஞ்சள் நூல் அல்லது சிகப்பு நூல் கட்டி உங்கள் பையில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் முயற்சி வெற்றி அடைந்தவுடன் அதனை நெருப்பில் போட்டு விட வேண்டும். இல்லாவிடில் யாருடைய காலும் படாத வண்ணம் மரத்தின் அடியில் போட்டு விட வேண்டும்.
இவற்றை எல்லாம் தாண்டி முயற்சிகளில் வெற்றி பெற வெற்றிலை பரிகாரம் ஒன்றை பார்க்கலாம். வெற்றிலையை நாகவல்லி என்று கூறுவார்கள். இதனை மகாலட்சுமியின் அம்சமாகக் கூட பார்ப்பார்கள். இதில் மருத்துவ குணம் அதிகம் உள்ளது. தோஷம் நீக்கும் வெற்றிலையை நுனி மற்றும் காம்பு நீக்கி பயன்படுத்த வேண்டும்.
மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைத்து தாம்பள தட்டில் வைத்திருக்கும் வெற்றிலை மாலையை அப்படியே உங்கள் நிலை வாசல் படியில் கட்டி விடுங்கள். பரிகாரம் இவ்வளவு தான். வழக்கம் போல தீபம் தூபம் கற்பூர ஆராதனை, ஒரு சிறிய பால் பாயாசம் நெய்வேதியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வெள்ளிக்கிழமை தோறும் இப்படி வெற்றிலை மாலையை நிலை வாசலில் கட்டி மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைத்தால், வீடு சுபிட்சம் பெறும். வெற்றிலை மாலை வாடிய பிறகு நிலை வாசலில் இருந்து எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடலாம். ரொம்ப ரொம்ப நல்லதுங்க.
#pariharam ,#family #tamilastrology #astrology #anmeegathagaval #aanmigam #familyvlog #tamil

Пікірлер

    Келесі