உத்தரகோசமங்கை மங்கள நாதேஸ்வரர் சிறப்பும் வழிப்பாட்டு முறையும்|ஆன்மீக வரலாறு| Uthrakosamangai podcast

Музыка

#devotional #podcast
#podcast #kalzhalagar #devotional #devotional_podcast
உத்தரகோசமங்கை மங்கள நாதேஸ்வரர் சிறப்பும் வழிப்பாட்டு முறையும் | ஆன்மீக வரலாறு | Goldencinema.
திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் அல்லது உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] இங்கு மங்களேசுவரி சமேத மங்களேசுவரர் சிவன் கோவில் எனும் பிரபலமான இந்து கோவில் உள்ளது. ஐந்தரை அடி உயரம் - முழுவதும் விலை மதிப்பிட முடியாத மரகதத் திருமேனி. நடராசர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் காட்சியளிக்கிறார்
இவ்வூர்க் கோயிலிலுள்ள சிவபெருமானைத் திருவாசகம் 38 இடங்களில் குறிப்பிட்டு திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினைக் கொண்டது.[4] தேவாரப் பாடல்கள் இதனைப் பாடவில்லை.
இக்கோயிலின் தலமரம் இலந்தை. ‘இலவந்திகை’ என்னும் சொல்லே மருவி ‘இலந்தை’ எனக் கருதுகின்றனர். இதனால் சங்ககால ‘இலவந்திகைப்பள்ளி’ இக்கால உத்தரகோசமங்கை எனக் கருதுகின்றனர்.
இவ்வூர் சிவனுக்கு வழிபாட்டுக்கு உரியதல்லாமல் போன தாழம்பூவும் சாத்தப்படுகிறது. மண்டோதரி இவ்வூர் இறைவனை வழிபட்டு இராவணனைக் கணவனாகப் பெற்றதாக ஒரு கதை உண்டு.
இக்கோயிலில் காரணாகம முறைப்படி வழிபாடு நடக்கிறது. சித்திரை, மார்கழி மாதம் 8ம் நாள் திருக்கல்யாணம், 9ம் நாள் தேர்விழா, மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் (திருவாதிரை) முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழித் திருவாதிரையில் அன்று ஒரு நாள் மட்டுமே நடராசருக்கு சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, இரவு அபிசேகங்கள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் சித்திரை தேரோட்டம் தேரோட்டம் நடைபெறுகிறது. இலலை திருவிழாவாக நடைபெறுகிறது. காரணாகம முறைப்படி வழிபாடு நடத்தபடுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

Пікірлер

    Келесі