uncut version திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் கிரிவல பாதை virtual ride

திருச்செங்கோடு (வேத காலங்களில், திருக்கொடிமாடச் செங்குன்றூர் என அழைக்கப்பட்டது) தேவாரம்,
சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் இத்தலம் பற்றிய பல்வேறு குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள்,செங்கோடு எனத் திருச்செங்கோட்டைக் குறிப்பிடுகிறார்.
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்களுள் ஒன்றாகும்.
மூலவர் அர்த்தநாரீசுவரர், தாயார் பாகம்பிரியாள், செங்கோட்டு வேலவர் என மூன்று தனிப் பெரும் சன்னதிகள் அமைந்துள்ளன.
இத்திருக்கோயிலானது மலைக்கோயிலில் அமைந்துள்ளது. அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில். தரை மட்டத்திலிருந்து 650 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 1200 மலைப்படிக்கட்டுகள் உள்ளன.
அம்மையும், அப்பனும் கலந்ததொரு திருவுருவில் அம்மையப்பனாய் இறைவன் இத்திருத்தலத்தில் எழுந்தருளி நிற்கும் சிறப்பு வேறு தலத்துக்கு இல்லாத ஒன்றாகும்.
இத்தலம் அமைந்துள்ள மலையினை ஒரு புறம் பார்க்கும்பொழுது ஆணாகவும், இன்னொரு இடத்தில் பார்க்கும்பொழுது பெண்ணாகவும் தோற்றம் அளிக்கிறது.
இத்திருக்கோயில் கொங்கு 7 சிவத்தலங்களில் இது ஒன்றாகாக சிறப்புப் பெற்று விளங்குகின்றது.
Camera Credit : Amudha
Bike Credit : KTM Duke 250

Пікірлер: 2

  • @jaganraja66
    @jaganraja66Ай бұрын

  • @RAVISHANKAR-yh7ce

    @RAVISHANKAR-yh7ce

    Ай бұрын

    Thank you

Келесі