No video

Show Us the Right Path | நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!

கெளதனா ஷெய்கனா ஸூஃபி ஹழரத் நாயகத்தின் நான்கு கலீஃபா நாயகங்களில் ஒருவர்களான, மலேசியா வாப்பா என்று அழைக்கப்படும் அல் ஆரிஃபுல் காமில் அஷ்ஷெய்கு அப்துல் காதிர் ஸூஃபி ரழியல்லாஹு தஆலா அன்ஹுமா அவர்களின் ஃபாத்திஹா ஷரீபின் விளக்க உரையில், 'இஹ்தி நஸ்ஸிராதல் முஸ்தகீம்' என்ற ஆயத்தின் விளக்கங்களாக உதிர்ந்த முத்துக்கள்...உரூஸ் முபாரக் துல்கஃதத்துல் ஹராம் 4! புரிந்து புன்னியம் பெறுவோமாக!
சன்மார்க்க கடமைகளை பாசத்தோடும் நேசத்தோடும் செய்து வரும்போது, உள்ளத்திற்கும் அந்த செயலுக்கும் ஒரு ஈடுபாடு ஏற்படுகிறது. இதை, மென்மேலும் வளர்ப்பது தரீக்கத் எனும் வழிப்பாடாகும். அதன் பின், மறைந்திருக்கும் ஞானங்களை அல்லாஹ் தஆலா வெளிப்படுத்தி தருவான்.
قال عليه السلام "الشريعة اقوالى والطريقة اطوارى والمعرفة رأس مالى والحقيقة نقد حالى"
என்றும்
الشريعة أقوالي والطريقة أفعالي والحقيقة حالي والمعرفة رأس مالي
வந்திருக்கும் இந்த ஹதீஸின் குறிப்பாவது,
என்னுடைய சொற்கள் ஷரீயத்தாக (மார்க்க சட்டங்களாக) இருக்கிறது, அதையொட்டிய எனது செயல்கள் தரீக்கத்தாக இருக்கிறது, மஃரிபா எனும் ஞானம் எனது தலைமுதலாக இருக்கிறது, எனது (இந்த அந்தரங்க) நிலை ஹகீகத் எனும் யதார்த்தமான உண்மையாகும் என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
(மிர்காதுல் மஃபாதீஹ் ஷரஹி மிஷ்காதுல் மஸாபீஹ், தஃப்ஸீர் ரூஹுல் பயான்)
إِنَّ النَّاسَ لَكُمْ تَبَعٌ وَإِنَّ رِجَالاً يَأْتُونَكُمْ مِنْ أَقْطَارِ الأَرَضِينَ يَتَفَقَّهُونَ فِي الدِّينِ فَإِذَا أَتَوْكُمْ فَاسْتَوْصُوا بِهِمْ خَيْرًا ‏"‏
நிச்சயமாக மக்கள் இந்த மார்க்கத்தை பின்பற்றுவார்கள், ஆண்களாக இருப்பவர்கள் மேலும் இந்த மார்கத்தை விளங்கிக் கொள்ள வேண்டி உங்களை தேடி வருவார்கள், அப்படி வருவோர்களை ஊக்குவித்து நல்ல விஷயங்களை சொல்லுங்கள் என்ற திர்மிதீ ஷரீஃபின் (2650) ஹதீஸிற்கு விளக்கமாக இமாம் முல்லா அலி காரீ ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தங்கள் மிர்காதிலே இதை பதிவு செய்திருக்கிறார்கள்.
மேலும் இஸ்மாயில் ஹக்கியி ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தங்கள் தஃப்ஸீர் ரூஹுல் பயான் கிரந்தத்தில் சூரா ஹதீத் 57:27வது ஆயத்தின் விளக்கத்திலும் இந்த ஹதீஸை பதிவு செய்திருக்கிறார்கள்.
மேலும் இஸ்மாயீல் இப்னு முஹம்மது இஜ்லூனி ஜர்ராஹி ஷாஃபியீ ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தங்கள் கஷ்ஃபுல் ஹஃபா எனும் கிரந்தத்திலும் பதிவு செய்துள்ளார்கள்.
#bayan #short_bayan #tamilbayan #muhieddeentv

Пікірлер: 3

  • @hussainmashoormowlana6591
    @hussainmashoormowlana65912 ай бұрын

    MaashaAllah!👍👍👍

  • @noorulameens1609
    @noorulameens16092 ай бұрын

    Masha Allah!

  • @hasanhafiza
    @hasanhafiza2 ай бұрын

    Mashallah barakallah❤😊❤

Келесі