கால் வைக்கவே நடுங்குகின்றது | மக்கள் பாம்புகளை ஏன் இங்கே விடுகிறார்கள் Around The Nainativu Island

நயினாதீவு (Nainativu) யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள சப்த தீவுகள் என அழைக்கப்படுகின்ற ஏழு தீவுகளில் ஒன்று ஆகும்( நாகதீப) எனவும் அழைக்கப்படுகிறது. இந்த தீவில் உள்ள நாக பூசணி அம்மன் கோயில் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இந்த கோயில் "நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில்" என்றே பெயர் பெற்றதாகும். இந்த கோயிலின் அண்மையில் ஒரு சிறிய பௌத்த விகாரை உள்ளது. இதனை நாகவிகாரை என்று அழைப்பர். இலங்கையிலுள்ள பௌத்த சமயத்தவர் கௌதம புத்தர் இந்தத் தீவுக்கு வருகை தந்ததாக நம்புகிறார்கள். இந்த விகாரையில் சில பிக்குகள் உள்ளனர். இவர்களைத் தவிர இந்த தீவில் வரலாற்று ரீதியாக வசிக்கும் மக்கள் அனைவரும் தமிழர்களாகும்.
1976 இல் நயினாதீவில் மக்கள்தொகை சுமார் 4,750 பேர் அளவில் இருந்தது. ஆயினும், 2,500 பேர் அளவிலேயே இன்றைய மக்கள்தொகை உள்ளது.
இந்த தீவு யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக, தென்மேற்குத் திசையில் 23 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இதற்குக் கிழக்குத் திசையில் பூங்கொடி தீவும் நேர் வடக்கில் அனலை தீவும் அமைந்துள்ளன.
நயினா தீவிற்குத் தரை வழியாகப் பயணிப்பதற்கான பாதைகள் இல்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து நயினா தீவு செல்வோர் குறிகாட்டுவான் வரை பேருந்தில் சென்று, குறிகாட்டுவானில் இருந்து படகு ஊடாக நயினாதீவு தீவிற்கு செல்ல முடியும். நயினா தீவிக்குள் ஒரு உள்ளூர் பேருந்து சேவை உள்ளது.
கசடறக் கற்க:
📞Contact "Kasadara Karka" at +94 0777 519 807
SUBSCRIBE AND TURN ALL NOTIFICATIONS ON TO SEE NEW VIDEOS!
kzread.info...
Follow Us On:
► Facebook: / charaltamizhi
► Instagram: / charaltamizhi
► Web: www.charaltamizhi.com
#travelvlog #tamilvlog #sltamil #charaltamizhi #Jaffnavlog

Пікірлер: 125

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Жыл бұрын

    நானும் நீங்கள் நயினாதீவு காணொளியை நாகபூசணி அம்மனோடு முடித்து விடுவீர்கள் என்று நினைத்தேன் ஆனால் முழுத் தீவையும் வலம் வந்து காணொளி எடுப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை 😅😅😅. உங்கள் காணொளி மூலமாக முதற் தடவையாக நயினாதீவை முழுமையாக கண்டு களித்தேன் 😁😁😁👍🏼👍🏼. மிகவும் சிறப்பான காணொளி 😇😇👍🏼👍🏼.

  • @suba4487
    @suba4487 Жыл бұрын

    அருமை அருமை கோயிலை மட்டுமே தெரிந்த எனக்கு ஆகா இங்கும் போய் விட்டேன் என்ற திருப்தி நன்றிகள்

  • @kanasri2735
    @kanasri2735 Жыл бұрын

    நாங்கள் 1974ல் இந்த தீவை

  • @arokiadass7718
    @arokiadass7718 Жыл бұрын

    அருமை சகோதரி நல்ல தைரியமும் விட முயற்சியும் கொண்டு தீவை சுற்றி காட்டி உள்ளீர்கள் , நன்றியும் வாழ்த்துகளும்

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 Жыл бұрын

    நானும் நாகம்மாள் கோயிலுக்கு மட்டும் தான் சென்றுள்ளேன்.

  • @navaneetha3584
    @navaneetha3584 Жыл бұрын

    டீச்சர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரு பகுதியான நயினாதீவு பகுதியினை மிக நன்றாகவே சுற்றி காண்பீர்கள் கோயில்களுக்கு குறைவே கிடையாது தமிழர்களின் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை கதையை கூறினீர்கள் அதுவும் உண்மையாக அந்த கதையினை சிறுவயதில் பள்ளிப் பாடத்தில் படித்துள்ளேன் பாம்பு நிறையாக இருப்பதாக காட்சி படுத்தினீர்கள் ஆனால்பாம்புகளைத் தான் காட்டவே இல்லை நன்றிஅம்மா

  • @vimaleswarypanchalingam9085
    @vimaleswarypanchalingam9085 Жыл бұрын

    அழகிய தீவு அன்னையின் ஆட்சியில் அமைதியாக இயங்குகிறது அவற்றை அழகாக

  • @anburaja9173
    @anburaja9173 Жыл бұрын

    உங்களுடைய இந்த பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.👍

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E Жыл бұрын

    மற்றைய தீவிகளை விட இங்கு ஒரளவு மக்கள் வாழ்கிறார்கள் ஆனாலும் பெளத்தர்கள் இல்லை விகாரை, முஸ்லிம்கள் இல்லை பள்ளிவாசல் யுத்தம் தமிழர்களை தின்று விட்டது. தீவின் உட் பகுதியை காண்பித்ததிற்க்கு நன்றி 👌👍

  • @ramaligramramaligram6604
    @ramaligramramaligram6604 Жыл бұрын

    அருமையனகாட்சிகள்,அக்கா,நீங்கள் ஆன்மிகம்,சாற்ந்தாஇடகள்மற்றும்கோவிகள்காட்சிபடுத்திகட்டுகிறகள்,உங்கள்அன்மிகாசிந்தானிக்கி,நன்றி,,

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv Жыл бұрын

    சொர்க்கமே என்றாலும் அது நம்மூர் நயினை போல் வருமா நன்றி❤❤

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Жыл бұрын

    சென்ற ஆண்டு தாயகத்துக்கு வந்த இடத்தில் நயினைதீவு அம்மாளை தரிசிக்க கிடைத்தது. ஆனால் உள்ளுர் இடங்களை பார்க்க கிடைக்கவில்லை. அந்த குறையை நீங்கள் உங்கள் காணொளி மூலம் தீர்த்தமைக்கு நன்றி. நயினைதீவை இப்படி முழுதாக ஒருவருமே சுற்றிக்காண்பித்ததில்லை: இது ஒரு சாதனை தான். இந்த பெருமை உங்களை விட உங்கள் கணவருக்கு தான்போய் சேரும். நன்றி.

  • @raviswathiganesh7162
    @raviswathiganesh7162 Жыл бұрын

    சபாஷ் சகோதரி

  • @dineshofficialtamil2342
    @dineshofficialtamil2342 Жыл бұрын

    அருமையான பதிவு

  • @narayanan7234
    @narayanan7234 Жыл бұрын

    இனிய தமிழ்தைப்பொங்கல்நலவாழ்துக்கள்

  • @muruganmani6023
    @muruganmani6023 Жыл бұрын

    சிறப்பு சகோதரி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @selvalaxmyravindran3839
    @selvalaxmyravindran3839 Жыл бұрын

    Thanks you Acca

  • @balalifestyle610
    @balalifestyle610 Жыл бұрын

    அழகான தெளிவான பதிவு❤

  • @sithbaranuthayarathinam2430
    @sithbaranuthayarathinam2430 Жыл бұрын

    அருமை

  • @muralis8194
    @muralis8194 Жыл бұрын

    அருமையான பதிவு அக்கா தமிழ் நாட்டில் இருந்து முரளிதரன்

Келесі