இரவு 10.00 மணி DD தமிழ் செய்திகள் [11.07.2024]

1) அரசு அதிகாரிகள் சமூக நீதியை நிலைநாட்டி பாகுபாட்டை ஒழிக்க வேண்டும் - பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தல்
2) மத்திய பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் பங்கேற்பு
3) நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் ஆரோக்கியமான விவாதங்களை நடத்த வேண்டும் - குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வலியுறுத்தல்
4) கடந்த ஆண்டில் 4 கோடியே 60 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி
5) காவிரி நதியில் தமிழ்நாட்டிற்கு நாளை முதல் 31 ஆம் தேதி வரை தினசரி ஒரு டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் - கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு
6) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ‍கடிதம்
7) பணியில் உள்ள மருத்துவர்களின் பட்ட மேற்படிப்புக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்த அரசாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
8) விம்பிள்டன் டென்னிஸ் ‍போட்டி - மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினி

Пікірлер

    Келесі