ஹஃப்ஸா ஓதும் சூரத்துல் ளுஹா (முற்பகல்)

Name : S.A.Hafsa
Father Name: Shajahan Ali
Age: 10
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَالضُّحٰىۙ‏
முற்பகல் மீது சத்தியமாக-
(அல்குர்ஆன் : 93:1)
وَالَّيْلِ اِذَا سَجٰىۙ‏
ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
(அல்குர்ஆன் : 93:2)
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰى‏
உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.
(அல்குர்ஆன் : 93:3)
وَلَـلْاٰخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْاُوْلٰى‏
மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.
(அல்குர்ஆன் : 93:4)
وَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضٰى‏
இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.
(அல்குர்ஆன் : 93:5)
اَلَمْ يَجِدْكَ يَتِيْمًا فَاٰوٰى‏
(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?
(அல்குர்ஆன் : 93:6)
وَوَجَدَكَ ضَآ لًّا فَهَدٰى‏
இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.
(அல்குர்ஆன் : 93:7)
وَوَجَدَكَ عَآٮِٕلًا فَاَغْنٰى‏
மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
(அல்குர்ஆன் : 93:8)
فَاَمَّا الْيَتِيْمَ فَلَا تَقْهَرْ‏
எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.
(அல்குர்ஆன் : 93:9)
وَاَمَّا السَّآٮِٕلَ فَلَا تَنْهَرْ‏
யாசிப்போரை விரட்டாதீர்.
(அல்குர்ஆன் : 93:10)
وَاَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ‏
மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.
(அல்குர்ஆன் : 93:11)

Пікірлер

    Келесі