No video

அயோத்தி யாருக்கு சொந்தம்? ராமருக்கா...? அவிழ்க்கப்படும் மர்ம முடிச்சுக்கள்!

ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - praveenmohantamil@gmail.com
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
00:00 - பழங்காலத்து சிலை கண்டுபிடிப்பு
02:41 - புதைந்திருந்த கோவில் வெளிவந்தது
05:20 - ஒரே கல்லால் ஆன நந்தி சிலைகள்
07:40 - தோண்டி எடுக்கப்பட்ட நாக சிலை
07:59 - அயோத்தியில் கிடைத்த சிற்பங்கள்
11:39 - தண்ணீருக்கடியில் இருந்து வெளிவந்த லிங்கங்கள்
12:29 - முடிவுரை
Hey guys, இன்னைக்கு நாம இந்தியால கண்டுபிடிச்ச சில கலைப்பொருட்கள (artifacts- அ) பத்தி தான் பேச போறோம். இந்த clip-அ கொஞ்சம் பாருங்க. இந்த video-வ எனக்கு அனுப்புனவரு இது கீழடி archaeological site-ல எடுத்ததா சொன்னாரு, இருந்தாலும் எனக்கு என்னமோ இத அங்க கண்டுபிடிச்சுருப்பாங்கன்னு தோணல. கீழடி ஒரு பாதுகாக்கப்பட்ட(protected) archeological site. அதுமட்டுமில்லாம அந்த இடத்துல archeologists- னால மட்டும் தான் தோண்ட முடியும்.
இப்படி நூத்துக்கணக்கான ஜனங்க அந்த பழமையான சிலைய வெளிய எடுக்குறத பாக்கும்போதே இது வேற எங்கேயோ கிடைச்சதுனு தெரியுது. வீடு கட்டுறதுக்காக தோண்டும்போதோ இல்ல கிணறு தோண்டும்போதோ எதர்ச்சியா இது கிடைச்சுருக்கும்னு நமக்கு நல்லா புரியுது. உள்ளூர் ஜனங்களால தான் இந்த மாதிரி நெறய archaeological விஷயங்கள் வெளில தெரிய வருது. இங்க ஜனங்களெல்லாம் எவ்ளோ உற்சாகமா(excite ஆகுறாங்கன்னு) இருக்குறாங்கனு நம்மளால பாக்க முடியுது. இது நிச்சயமா ஒரு பழமையான சிலை தான். அநேகமா இது ஆயிரம்(1000) வருஷங்கள் பழமையானதா இருக்கும்.
இது ஒரு நடராஜர் சிலை. இது சிவனோட இன்னொரு வடிவம்-ன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். அதுமட்டுமில்லாம இந்த மாறி வெண்கல நடராஜர் சிலையெல்லாம் ஆயிரம் (1000) வருஷத்துக்கு முன்னால ஆண்ட சோழர்களோட காலத்த சேர்ந்ததா தான் இருக்கணும். Okay, இப்போ பூமிக்கடியில பொதஞ்சிருந்த நடராஜரோட amazing-ஆன சிலைய பாத்தோம். பல நூறு வருஷமா பொதஞ்சிருந்தது இப்போ தான் வெளிய வந்திருக்கு இல்லயா?
ஆனா ஆந்திரால இருக்கற நெல்லூர்-ங்கற ஊர்ல ஒரு கோவில் மொத்தமுமே பூமிக்கடியில பொதஞ்சிருந்திருக்கு. போன வருஷம் தான் அது வெளிய வந்திருக்கு/ தெரிஞ்சுருக்குது. Covid-19-ங்கறதால எல்லாரும் mask போட்டிருக்கிறத நம்மளால பாக்க முடியுது. இதுவுமே எதர்ச்சியா கண்டுபிடிச்ச ஒரு இடம் தான். Commercial purposes-க்காக அவங்க இந்த இடத்துல இருந்து மண் எடுத்துட்டு இருந்துருக்காங்க. அப்போ தான், தற்செயலா அங்க ஒரு பெரிய கோவிலே complete-ஆ பொதஞ்சிருக்கிறத கண்டுபிடிச்சிருக்காங்க.
இங்க ரெண்டு பேர் அங்க இருக்குற மண்ண எடுத்துட்டு இருக்குறத நம்மளால பாக்க முடியுது இல்லயா. அத பார்த்துட்டு, இது தான் தரை மட்டம்னு நீங்க நினைக்கலாம். ஆனா இல்ல!! அவங்க கிட்டத்தட்ட கோயில் கோபுரத்துக்கு மேல நின்னுட்டு இருக்காங்க. கோபுரத்தல இருக்குற சாமிய எவ்ளோ casual-ஆ வெளிய reveal பண்றாங்க பாருங்க. சரி, அப்போ இந்த கோவிலோட வாசல் எங்க போச்சு?
அது மண்ணுக்குள்ள பொதஞ்சிருக்கு. இப்போ அவங்க பெரிய எந்திரங்களை (JCB-அ) பயன்படுத்தி அந்த கோவிலோட வாசல கண்டுபிடிச்சிட்டாங்க. அந்த machine உள்ள வரைக்கும் போய் இந்த கோவிலோட வாசல்ல இருக்குற மண் எல்லாத்தையும் வெளிய எடுக்குது. கடைசியா இப்போ நம்மளால இந்த கோவிலோட தரை மட்டத்த(ground level-அ) பாக்க முடியுது. அதுதான் இந்த கோவிலோட வாசல்.
தரை மட்டத்த(ground level-அ) பக்கத்துல போய் பார்க்குறப்போ தான் இந்த கோவில செங்கலால கட்டிருக்கிறதையும், அதோட சுவரெல்லாம் பூசியிருக்கிறதயும்(plaster பண்ணிருக்கறதையும்) நம்மளால பாக்க முடியுது. கிட்டத்தட்ட இந்த சுவர யாரும் தொட்டது கூட இல்ல போல, அதுமட்டுமில்லாம அதுல பெருசா வேற எந்த damage-ம் இல்ல. உள்ள நிறைய chambers இருக்குறதயும், நிறைய சுவர் இருக்குறதயும் கூட நம்மளால பாக்க முடியுது. வாங்க வாசலுக்கு பக்கத்துல போய், உள்ள என்ன இருக்குனு பாக்கலாம்.
செங்கல்ல கட்டுன சுவரும், செங்கல்ல செஞ்ச கதவும் இருக்கு. இந்த ஊர் ஜனங்க இத ஒரு சிவன் கோவில்னும், இதுக்குள்ள லிங்கத்த கண்டுபிடிச்சதாவும் சொல்றாங்க. இந்த கோபுரத்த close-up -ல பார்த்தா தான் அதுவும் செங்கல்ல வச்சு கட்டிருக்காங்கன்னும், சுண்ணாம்பு சாந்து பூசிருக்காங்கன்னும் நம்மளால பாக்க முடியுது.
ராமர் பிறந்த இடம்ன்னு சொல்ற அயோத்தியிலயும், பாபர் மசூதினு சொல்ற பாபர் மன்னரோட மசூதி இருக்கற இடத்துலயும் நிறைய முக்கியமான archaeological விஷயங்கள எல்லாம் கண்டுபிடிச்சிருக்காங்க. ஆனா அதுக்குள்ள போறதுக்கு முன்னால Arasinakere- ங்கற ஒரு சின்ன கிராமத்துல கிடைச்ச சில amazing-ஆன பழங்கால கலைப்பொருள(artifacts-அ) தான் இப்போ நாம பாக்க போறோம். இங்க அவங்க விசித்திரமான ஒன்ன கண்டுபிடிச்சாங்க.
ஒரே கல்லுல செய்யப்பட்ட ரெண்டு பெரிய நந்தி சிலைங்க தான் அது. நந்தி சிவபெருமானோட வாகனம்ன்னு நம்ம எல்லாருக்குமே நல்லா தெரியும். பொதுவா எப்பவும் ஒரு நந்தி தான் இருக்கும்ன்னு நாம நினைப்போம், ஆனா இங்க நமக்கு shock தர்ற மாறி ரெண்டு நந்தி சிலைங்க இருக்கு. இந்த பெரிய நந்தி கிட்டத்தட்ட பதினஞ்சு (15) அடி நீளமாவும் பன்னெண்டு (12) அடி உயரமாவும் இருக்கு. அப்படினா இது தான் பெருசு, இன்னொன்னு இத விட கொஞ்சம் சின்னது தான்.
இந்த excavation-அ archaeology department ஆரம்பிச்சு வைக்கல. இத இந்த கிராமத்து ஜனங்க கண்டுபிடிச்சு அதுக்கப்பறம், அதிகாரிங்க கிட்ட தகவல் சொல்லிருக்காங்க. அதுமட்டுமில்லாம இந்த நந்திய இன்னும் முழுசா செஞ்சு முடிக்கல. அது எப்படி எனக்கு தெரியும்னு தானா யோசிக்கிறீங்க.
#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Пікірлер: 691

    Келесі