No video

4 Lights | 4 ஓளிவுகள்

4 ஒளிவுகள்
اللَّهُ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ
24:35. அல்லாஹ் தஆலா வானங்களுக்கும் பூமிக்கு ஒளி(வாக உள்ளான்)
قَدْ جَاءَكُم مِّنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُّبِينٌۚۚ
5:15 நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது.
فَالَّذِينَ آمَنُوا بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنزِلَ مَعَهُ ۙ
7:157….. எனவே எவர்கள் (ரஸுலுல் அக்ரம் ﷺ )அவர்களை மெய்யாகவே நம்பி, அவர்களை கண்ணியப்படுத்தி, அவர்களுக்கு உதவி செய்து, அவர்களுடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.
أَفَمَن شَرَحَ اللَّهُ صَدْرَهُ لِلْإِسْلَامِ فَهُوَ عَلَىٰ نُورٍ مِّن رَّبِّهِ ۚ
39:22. அல்லாஹ் எவருடைய இருதயத்தை இஸ்லாத்திற்காக விசாலமாக்குகிறானோ அவர் தம் இறைவனின் ஒளியில் இருக்கிறார்;
இப்படிப்பட்ட ஓளிவான குர்ஆனையும் ஒளிவான ஏந்தல் நபிகளையும் ﷺ நமது அற்ப புத்தியை வைத்து அளவிடமுடியாது என்பதற்கு பின்வரும் இந்த ஆயத்தும் ஒரு சான்று....
وَلَوْ أَنَّ قُرْآنًا سُيِّرَتْ بِهِ الْجِبَالُ أَوْ قُطِّعَتْ بِهِ الْأَرْضُ أَوْ كُلِّمَ بِهِ الْمَوْتَىٰ ۗ بَل لِّلَّهِ الْأَمْرُ جَمِيعًا ۗ
13:31. நிச்சயமாக குர்ஆன் - அதனைக் கொண்டு மலைகளை நகரும்படிச் செய்தாலும், அல்லது அதனைக் கொண்டு பூமியைத் துண்டு துண்டாக்கினாலும், அல்லது அதனைக் கொண்டு இறந்தவர்கள் பேசும்படிச் செய்யப்பட்டாலும் (அந்த காஃபிர்கள் விசுவாசங்கொள்ளவே மாட்டார்கள்), ஆயினும் எல்லாக்காரியங்களும் அல்லாஹ்வின் கட்டளைபடியே உள்ளது;
அடங்காத குறைஷி காஃபிர்கள் பின் வரும் விஷயங்களை கண்மணி நாயகம் ﷺ அவர்களிடம் ஒரு சவாலக சொன்னார்கள்,
மக்கமா நகரில், தங்களுக்கு தேவையான தானியங்கள், கனி வகைகளை பயிர் செய்ய விவசாயத்திற்கு நிலம் இல்லை, எனவே (மக்கத்துல் முகர்ரமாவின் நான்கு திசைகளிலும் சூழ்ந்துள்ள இந்த) மலைகளை (தாவூத் நபியுடன் மலைகளும் தஸ்பீஹ் செய்த விஷயத்தை சொல்லி அது போல்) நகற்றும்படியும்,
(சிரியா - எமன் போன்ற அவர்கள்) வனிகம் செய்வதற்கு நெடுந்தூரம் செல்ல வேண்டி இருப்பதனால் பூமியை சுருக்கி (சுலைமான் நபிக்கு காற்றை வசப்படுத்திய விஷயத்தை சொல்லி அது போல்) தரும்படியும்,
இன்னும் அவர்களின் இறந்து போன முன்னோர்களில் ஒருவரை உயிராக்கி இந்த மார்க்கம் சத்தியம் தான் என்று (ஈஸா நபி மய்யித்தை எழுப்பினார்களே அப்படி எழுப்பி) சாட்சி சொல்லும்படியும் நமது நாயகம் ﷺ அவர்களை அவர்கள் தந்த திருக்குர்ஆன் வசனத்தை கொண்டே ஏளனமாக சவால் விடுத்தனர் அந்த குறைஷி காஃபிர்கள். அல்லாஹ் தஆலா, நபியே நாயகமே ﷺ இந்த குர்ஆன் ஷரிஃபை கொண்டு உங்களுக்கு இதுவெல்லாம் சாத்தியமே என்று இந்த வசனத்தை இறக்கி, அப்படியும் அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால் என்னுடைய பிடி மிகவும் கடுமையாக இருக்கும் என்று முன் சென்ற உம்மத்துகளுக்கு இறங்கிய வேதனைகளை நினைவுபடுத்தினான் (13:32). நாயகம் ﷺ அவர்கள், தாங்கள் பரிகசிக்கப்படாலும் பரவாயில்லை ஆனால் இந்த உம்மத்திற்கு அந்த வேதனைகள் வேண்டாம் என்று பொறுமையுடன் இருந்து விட்டார்கள்.
அப்படிப்பட்ட ஒளிவாகிய அல்லாஹ்விலிருந்து ஒளிவாக வந்த நமது நாயகத்தையும் ﷺ, அவர்களுக்கு அருளப்பட்ட ஒளிவான குர்ஆனையும் அந்த ஒளிவுக்காக தங்களது இதயங்களை குர்பானாக்கி அவனது அதிகாரிகளான இறை நேசர்களையும் என்றென்றும் உகந்து நம் யாவரையும் அந்த ஜோதியில் நின்றும் ஆக்குவானாக!
#quran #bayan #tamilbayan #sholawat

Пікірлер: 4

  • @hussainmashoormowlana6591
    @hussainmashoormowlana65913 ай бұрын

    MaashaAllah!👍👍👍

  • @hasanhafiza
    @hasanhafiza3 ай бұрын

    Subhanallah❤🎉❤

  • @aaa11world
    @aaa11world3 ай бұрын

    MashaAllah

  • @AlmJaleel-xv8hb
    @AlmJaleel-xv8hb3 ай бұрын

    எல்லாம் அவன

Келесі